மறந்தும் கன்னி மூலையில் இதை செய்யாதீங்க.. தென்மேற்கு திசையில் என்ன வைக்கலாம்? பெஸ்ட் வாஸ்து பரிகாரம்
சென்னை: ஒரு வீட்டில் நேர் தெற்குத்திசை என்ற 180 டிகிரியை மையமாகக் கொண்ட அறை என்பது வீட்டிற்கு சிறப்பாக அமையாது.. ஏனென்றால், வியாதிகளை தரும் உடல் ஆரோக்கியத்தையே குலைத்துவிடும் அளவுக்கு இந்த அறை அமைந்துவிடுமாம்.. ஒரு வீட்டில் தென்மேற்கு மூலை சரியாக அமைந்தால்தான் அந்த வீடு மற்றும் அந்த வீட்டில் வாழ்பவர்களுக்கு ஆரோக்கியம், பணபலம், மகிழ்ச்சி கிடைக்கும். கன்னி மூலை என்று சொல்லக்கூடிய இந்த திசையில் என்னென்ன செய்யலாம்? வீட்டில் பணம் புழங்குவதற்கு பரிகாரம் என்ன? இவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
ஜோதிடத்தின்படி, ஆக்ரோஷமான கிரகங்களில் ஒன்றான ராகு, தென்மேற்கு திசையை ஆளுகிறது, இது பெரும்பாலும் பூமியின் கூறுகளை குறிக்கும் கன்னிமூலை என்பார்கள்..

தென்மேற்கு திசை
வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பைப் பாதுகாக்க, தென்மேற்கு மூலையில் உள்ள அனைத்து கூறுகளுக்கும் இடையில் சமநிலையை பராமரிப்பது அவசியம். இந்த கன்னிமூலையில் வாஸ்து குறை இருந்தால், கடுமையான மன அழுத்தம், குடும்பத்தில் சிக்கல் எழுந்துவிடும்.. எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகிவிடும்.. இதயநோய் வரலாம்.. குடும்பத்திலுள்ளவர்கள் மனரீதியான பாதிப்புக்கும் ஆளாகலாம்.
தென்மேற்கு திசை என்பது நேர்மறை ஆற்றலை அதிகப்படியாக ஈர்க்கக் கூடிய திசையாகும்.. அதனால்தான், தென்மேற்கு திசை எனப்படும் நைருதி மூலை சரியான வாஸ்துபடி அமையும்படி பார்த்து கொள்ளவேண்டும்.
தலைவாசல் கதவு
பெரிய ஜன்னல், திறப்பு என எதையுமே தென்மேற்கு திசையில் வைக்கக்கூடாது.. தென் மேற்கு திசையில் வீட்டின் தலைவாசல் கதவு இருக்க கூடாது.
வடகிழக்கு எவ்வளவு வெட்ட வெளியாய் இருக்க வேண்டுமோ அதேபோல் தென்மேற்கு மூடப்பட்டிருக்க வேண்டும். வீட்டின் தெற்கு பகுதியில் தெற்கும், தென்மேற்கும் உயரமாகவும், வடக்கும், ஈசான்யமும் பள்ளமாகவும் இருக்க வேண்டும். ஏனென்றால், சூரிய மண்டலத்தின் அங்கமான பூமி 23.5 டிகிரி கிழக்கு பக்கம் சுழல்கிறது. இதனால்தான் சூரியனை பூமி நீள்வட்ட பாதையில் சுற்றி வர முடிகின்றது.
குபேர மூலை
சூரியனை பூமி சுற்றும்போது, அதன் ஈசான்ய மூலையான வட கிழக்கு சற்று தாழ்ந்தும், தென் மேற்கு பகுதியான குபேர மூலை சற்று உயர்ந்தும் இருக்கும். எனவேதான், வீடு கட்டும் போது வீட்டின் தென் மேற்கு மூலையை உயரமாகவும், ஈசானிய மூலை சற்று தாழ்வாகவும் வைத்து கட்ட வேண்டும் என்கிறார்கள்.. இதனால் பணப்புழக்கம் பெருகும்.. ஆரோக்கிய குறைபாடு விலகும்.. அதேபோல, தென்மேற்கும் மேற்கும், உயரமாகவும் இருந்தால் வீட்டில் நன்மைகள் சேரும்.
வாஸ்து குறைபாடுகள்
ஒருவரின் வீட்டில் தென்மேற்கு பகுதியில் வாஸ்து குறைவாக இருந்துவிட்டால், மரணம் வரை கொன்றுவிடும்.. ஆபத்தான புற்றுநோய் பாதிப்பினால் உயிரிழப்புகள் வரலாம்.. அதனால் வீட்டின் தென்மேற்கு திசை உயரமாகவும, வடகிழக்கு பகுதியை தாழ்வாகவும் திறந்த வெளியாகவும் இருக்க வேண்டும்.
கன்னிமூலையில் ஜன்னல்கள் போன்ற வெட்டுக்கள் அல்லது திறப்புகளைத் தவிர்க்க வேண்டும். குளியலறைகளையும் தவிர்க்கலாம்..காரணம், கன்னி மூலைகளில் உள்ள தண்ணீரானது, கட்டிடத்தை பலவீனப்படுத்திவிடும்.. அதேபோல, மேல் தளத்தில் கன்னிமூலை வைப்பதை தவிர்க்கலாம்.
கன்னி மூலையில் என்ன வைக்கலாம்
அதேபோல, தெற்கு, மேற்கு பகுதிகளில் குறைந்த இடமும், வடக்கு, கிழக்கில் அதிக இடமும் விட்டு கட்ட வேண்டும். தென்மேற்கு மூலையில் கதவு ஜன்னலோ இருக்கும் பட்சத்தில் அந்த கதவில், அந்த ஜன்னலில் பிள்ளையார், ஆஞ்சநேயர், ஓம், சுவஸ்திக், என ஏதாவது இறைவனின் புகைப்படத்தை மாட்டி வைக்கலாம்.
கன்னிமூலை வீட்டின் மற்ற பகுதிகளை விட கனமாக இருக்க வேண்டும். தென்மேற்கு மூலையில் கனமான பொருட்களை வைக்கலாம்,.. மண் சார்ந்த பொருள்களின் அழகிய கலைப்படைப்புகளை வைக்கலாம்.. கன்னிமூலையில் வாஸ்து பிரமிடு வைப்பது எதிர்மறை ஆற்றலை சமநிலைப்படுத்த உதவும்.
கிண்ணத்தில் வாசனை பொருள்
கன்னி மூலை என்று சொல்லக்கூடிய இந்த திசை சுத்தமாகவே இருக்க வேண்டும். நல்ல மணம் வீசுவதற்காக தினமும் ஊதுபத்தி ஏற்றலாம். அல்லது ஒரு சின்ன தட்டில் பச்சை கற்பூரம், கிராம்புகளை போட்டு வைத்துவிடலாம். எந்த அளவுக்கு இந்த இடத்தில் மணம் அதிகமாகிறதோ, அவ்வளவு பணம் வீட்டில் பெருகுமாம்.
குடும்பத்தில் பணக்கஷ்டம், கடன் தொல்லை இருந்தால் ஒரு சிகப்பு துணியில் 5 ரூபாய் நாணயத்தை வைத்து முடிச்சு போல கட்டி, உங்களின் உள்ளங்கையில் வைத்து நிதி நெருக்கடி தீர வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த முடிச்சை தென்மேற்கு மூலையில் வைத்து, தினந்தோறும் ஊதுபத்தி காட்டிவருவதால், பண பிரச்சனை குறைந்து, பலன் கிடைக்கும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications