மளிகை கடையில் கிடைக்கும் இந்த பொருளுக்கு இவ்ளோ சக்தியா! வீட்டில் வைத்து பாருங்க கெட்ட கனவு கூட வராது
வீட்டின் பூஜை அறையில் கற்பூரம் ஏற்றினால் அது எதிர்மறை சக்திகளை விரட்டியடித்து நேர்மறை சக்திகளை அதிகரிக்கிறது.
சென்னை: கோவில்களிலும் பூஜை அறைகளிலும் கற்பூரம் ஏற்றி வழிபடுபார்கள். இறைவனுக்கு கற்பூரத்தை சமர்பணம் செய்து வழிபடுவது பல ஆண்டுகாலமாகவே இருந்து வருகிறது. கோவில்களில் தேங்காய் உடைப்பது தொடங்கி ஊதுபத்தி, தீபம் ஏற்றி வழிபடுவது வரை ஒவ்வொரு சம்பிரதாயத்திற்கும் ஒரு அர்த்தம் உள்ளது. கற்பூரம் ஏற்றி வழிபடுவதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டு கற்பூரத்தை சுவாமிக்கு நாம் அர்ப்பணம் செய்கிறோம். பூஜைக்கு மட்டுமல்லாமல் நோய்கள் நீக்கும் பொருளாகவும், கிருமி நாசினியாகவும் உள்ளது கற்பூரம். கை,கால் மூட்டுக்களில் வலி ஏற்பட்டால் தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தை கரைத்து அதை கை, கால் மூட்டுக்களில் தடவி விடலாம். வலி நீங்கும். தோல்களில் அலர்ஜி எரிச்சல் இருந்தாலும் கற்பூரத்தை பொடி செய்து எண்ணெயில் கலந்து பூசினால் குளுமையாக இருக்கும்.

நம்முடைய வீட்டின் பூஜை அறையில் இருக்கும் முக்கியமான ஒரு பொருள் கற்பூரம். இது பலவித நன்மைகளை தருவதாக உள்ளது. வீட்டில் நேர்மறை சக்தியை அதிகரிக்கும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உறக்கத்தில் கெட்ட கனவுகள் கண்டு அலறுவார்கள். படுக்கை அறையில் சிறிதளவு கற்பூரத்தை கிண்ணத்தில் கொட்டி வைத்தால் கெட்ட கனவுகள் ஏற்படாமல் தடுக்கும்.
ஏழரை சனி, அஷ்டம சனியால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்க குளிக்கும் தண்ணீரில் சிறிதளவு கற்பூரத்தை நுனிக்கி போட்டு குளிக்கலாம். சனிதோஷங்கள் நீங்கும். நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த தகவல்கள் எல்லாமே நம்பிக்கைகளின் அடிப்படையில் கொண்டவைதான்.
நம்முடைய வீடு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வாரம் ஒருமுறை வீட்டினை தண்ணீர் ஊற்றி துடைத்து கிருமி நாசினி கொண்டும் துடைப்பார்கள். கற்பூரத்திற்கு வீட்டில் உள்ள பாக்டீரியா கிருமி மற்றும் சிறிய பூச்சிகளை அழிக்கும் தன்மை உள்ளது. எனவே வீடு துடைக்கும் பொழுது தண்ணீருடன் சிறிதளவு கற்பூரத்தையும் கலந்து வீடு துடைத்தால் தரை சுத்தமாகும்.
தலையில் பேன் தொந்தரவுகள் இருந்தாலும் கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் கலந்து பூசலாம். அதிகமாக டென்சன் இருந்தாலோ மன அழுத்தம் ஏற்பட்டாலோ கற்பூரம் சிறந்த நிவாரணியாக உள்ளது. வீட்டின் பூஜை அறையில் கற்பூரத்தை ஏற்றி வைத்து தியானம் செய்ய மன அழுத்தம் நீங்கும். ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் புற்று கோவிலுக்கு சென்று கற்பூரம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.
சாதாரண கற்பூரம் மட்டுமல்லாது பச்சைக்கற்பூரம் பலவித நன்மைகளை தரும். பணத்தை ஈர்க்கும் சக்தி பச்சைக்கற்பூரத்திற்கு உண்டு. பச்சை கற்பூரத் துண்டை ஒரு பேப்பரில் வைத்து மடித்து உங்களது பர்சில் வைத்திருந்தால் பர்சில் பணம் குறையாது எப்பொழுதும் இருக்கும். பூஜை அறையில் பச்சை கற்பூரத்தை வையுங்கள். தெய்வ கடாட்சமான எண்ணங்கள் உருவாகும். பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே வீட்டில் பணம் எப்பொழுதும் இருந்து வரும்.
பச்சை கற்பூரம் இயல்பாகவே அதிக வாசனை நிறைந்தது. பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு பெரிய சக்தி இருக்கிறது. வீட்டில் சிலருக்கு நிம்மதி இல்லாமல் போக காரணமே வீட்டில் இருக்க கூடிய துர்சக்திகள் தான். பச்சை கற்பூரத்தின் வாசனையினாலும், அதன் மகிமையினாலும் வீட்டில் இருக்க கூடிய துர்சக்தியானது வீட்டை விட்டு வெளியே போய் விடும். அதனால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும். நம் வீட்டில் உள்ள துர்சக்திகள், கெட்ட சக்திகள், கண்திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் அனைத்தும் விலகி செல்வ செழிப்பான வாழ்க்கை அமையும்.
இரண்டு அல்லது நான்கு துண்டு பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள். இதனை பூஜை அறையில் வைப்பதால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும். அதுமட்டுமல்லாது பச்சை கற்பூரத்திற்கு பணத்தினை ஈர்க்கும் தன்மை இருக்கிறதினால் வீட்டில் பணத்திற்கு கஷ்டம் இருக்காது. வீட்டில் பணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். வீண் செலவுகள் இருக்காது.
வாசனை மிகுந்த இடங்களில் மகாலட்சுமி குடியேறுவாள். எனவே பணம் புழங்கும் இடங்களில் வாசனை மிக்க பச்சை கற்பூரமானது இருந்தால் செல்வம் செழிக்கும். வீட்டில் நடைபெறக்கூடிய எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் பச்சை கற்பூரத்தை இடம் பெற செய்வது நல்லது. பச்சை கற்பூரத்தை எடுத்து குலதெய்வத்தையும், இஷ்டதெய்வங்களையும் மனதார வணங்கி நமக்கு வேண்டியவற்றை நினைத்து பிரார்த்தனை செய்து அந்த பச்சை கற்பூரத்தை டப்பாவில் போட்டு வைத்துவிட வேண்டும். இப்படி செய்வதால் நம் வாழ்வில் நல்லதொரு மாற்றம் ஏற்படும்.












Click it and Unblock the Notifications