Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் நாளை கொடியேற்றம்.. விஐபி பாஸ் ரத்து.. கோவிலுக்குள் எத்தனை பேர் அனுமதி

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மகா தீபத்திற்கு 7,500 பேர் அனுமதிக்கப்படுவர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். நாளை கொடியேற்றத்துடன் தீப திருவிழா தொடங்க உள்ளது. 26ஆம் தேதி கார்த்திகை தீபத்தின் போது விஐபி பாஸ் தரிசனம் முறை அமலில் இல்லை என்றும் கட்டளைதாரர் உபயதாரர் பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி உள்ளது என்றும் சேகர்பாபு கூறியுள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா நாளைய தினம் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. கொடியேற்றத்திற்கு முந்தைய 3 நாட்கள் காவல் தெய்வ உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கும். அதன்படி செவ்வாய்கிழமை இன்று இரவு திருவண்ணாமலை சின்னக் கடைத் தெருவில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் துர்க்கை அம்மன் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.

Karthigai deepam Festival in Tiruvannamalai Annamalaiar Temple to flag hoist on 17 November 2023

நேற்றிரவு புதன்கிழமை அருணாசலேஸ்வரர் கோவில் 3ஆம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடைபெறும். இன்றைய தினம் வியாழக்கிழமை விநாயகர் உற்சவ நிகழ்ச்சியும் நடைபெற்றது. 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.45 மணியில் இருந்து 6.12 மணிக்குள் அருணாசலேஸ்வரர் சன்னதியில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது, அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளி காட்சியளிப்பார்.

அதைத்தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் கண்ணாடி விமானங்களில் மாடவீதியில் பவனியும், இரவில் நந்தி வாகனத்தில் சுவாமி பவனியும் நடைபெறும். விழாவின் தொடர்ச்சியாக, நாளை மறுதினம் 18 ஆம் தேதி காலை தங்க சூரிய பிறை வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் இந்திர விமானங்களில் பஞ்சமூர்த்திகளும் பவனி வருகின்றனர்.

வரும் 19ம் தேதி காலை நாக வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் சிம்ம வாகனம், வெள்ளி அன்ன வாகனங்களில் பஞ்சமூர்த்திகளும் பவனி வருகின்றனர். 20ம் தேதி காலை நாக வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு வெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் அண்ணாமலையாரும் பவனி வருகின்றனர். வரும் 21ம் தேதி காலை கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் பெரிய ரிஷப வாகனத்தில் அண்ணாமலையாரும் வீதி உலா வருகின்றனர்.

வரும் 22ஆம் தேதி காலை உற்வசத்தில் வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் வெள்ளி தேரோட்டமும் நடைபெறும்.விழாவின் 7ம் நாளான வரும் 23ஆம் தேதியன்று மகா தேரோட்டம் நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் ஏகன் அநேகன் எனும் தத்துவத்தை உலகுக்கு உணர்த்துவதற்காக, பரணி தீபம் ஏற்றப்படும். அன்று மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

கார்த்திகை தீபத்திருவிழாவில் கடந்த ஆண்டு 25 லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டு சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து எப்போதும் இல்லாத அளவில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதையொட்டி, தீபத்திருவிழாவுக்காக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகளை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் இன்று நேரடி ஆய்வு மேற்கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய சேகர் பாபு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம், மகாதீபம் தரிசன ஏற்பாடுகள் பாதுகாப்பு குறித்து இன்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 30 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்தார்கள். இந்த ஆண்டு கூடுதலாக 25 சதவிகிதம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் கூடுதலாக செய்யப்பட்டுள்ளன.

பரணி தீபம் மற்றும் கார்த்திகை தீபம் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கோவிலில் தற்போது முழு நேர அன்னதானம் நடைபெறுகிறது. இங்கு காலை மற்றும் மாலை நேரத்தில் டிபன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் சாத்தியக்கூறுகள் இருந்தால் கண்டிப்பாக அன்னதானம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும்.

கார்த்திகை தீபத்தின் போது விஐபி பாஸ் தரிசனம் முறை அமலில் இல்லை. கட்டளைதாரர் உபயதாரர் பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி உள்ளது. கடந்த ஆண்டு பரணி தீபத்தில் 4000 பக்தர்களும் மகா தீபத்தின் போது 7500 பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு கூடுதலாக அனுமதிப்பது குறித்த ஆலோசனை செய்யப்படுகிறது.

திருவண்ணாமலையில் தனியார் தங்கும் விடுதிகளில் கட்டணத்தை உயர்த்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்ற 3,500 கிலோ நெய், ஆயிரம் மீட்டர் திரி பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+