முகம் பொன்னாக ஜொலிக்க.. தேஜஸ் வர தினமும் வீட்டில் விளக்கேற்றுங்கள்.. ஆன்மீக டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டிலோ, கோவிலிலோ விளக்கேற்றி வழிபடுவது பாரம்பரிய வழக்கம். செவ்வாய், வெள்ளி விளக்கேற்றி மந்திரம் கூறி வழிபடுவார்கள். தினந்தோறும் வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றினால் முகத்தின் பொலிவு அதிகரிக்கும் என்று சாஸ்திரம் சொல்கிறது. கார்த்திகை மாதத்தில் 30 நாட்களும் உங்கள் வீட்டு பெண் குழந்தைகளை பூஜை அறையில் விளக்கேற்ற சொல்லுங்கள் அதன் பலனை கண் கூடாக பார்க்கலாம்.

மகாலட்சுமியின் அருள்: அவ முகத்தை பாரேன் பொன்னாக ஜொலிக்குது.. இத்தனை பொலிவு எப்படி வந்தது என்று விளம்பரங்களில் கேட்பார்கள். உங்களின் முகமும் பொன்னாக ஜொலிக்கும். பொலிவாக மாறி தேஜஸ் வர வேண்டும் என்றால் தினசரியும் வீட்டில் விளக்கேற்றி வழிபட வேண்டும். பெண் குழந்தைகள் மகாலட்சுமியின் அம்சம். பெண் குழந்தைகளை தினசரியும் விளக்கேற்ற சொல்லுங்கள் அவர்களின் முகம் பொன்னாக ஜொலிப்பதை பார்க்கலாம்.

Karthigai masam Veetil vilakku etruvathal nanmaigal: Light a lamp daily for Tejas to make your face

ஒளி வடிவில் இறைவன்: விளக்கேற்றி வழிபட வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் காலம் காலமாக கூறி வந்துள்ளனர். இறைவன் ஒளி வடிவாக காட்சி தருகிறார் என்பது ஐதீகம். நாம் காலையிலும் மாலையிலும் விளக்கேற்றினால் வீட்டில் அமைதி குடியேறும் ஐஸ்வர்யம் பெருகும். சிலரது வீட்டில் மன நிம்மதியில்லாமல் இருக்கும் சண்டை சச்சரவுகளாக இருக்கும் அந்த வீட்டில் வசிப்பவர்கள் தினசரியும் விளக்கேற்றி வழிபட மன நிம்மதி அதிகரிக்கும்.

பிரம்ம முகூர்த்தம்: சூரிய உதயத்திற்கு முன்பாக பிரம்ம முகூர்த்த நேரத்தில் அதாவது அருணோதய காலத்தில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டால் யோகங்கள் தேடி வரும். அதே போல மாலையில் சூரியன் மறைவதற்கு முன்பாக பிரதோஷ காலத்தில் விளக்கேற்றி வழிபட்டால் குடும்பத்தில் செல்வம் பெருகும்.

எப்போது விளக்கேற்றுவது: விடியற்காலையில் சூரியன் உதயமாவதற்குச் சற்று முன்னதாக பிரம்ம முகூர்த்தம்' என்கின்ற இரவின் விடியலாகத் திகழும் அருணம், என்கின்ற அருணோதய காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாவித யோகத்தையும் பெறலாம். அதேபோல் மாலையில் சூரியன் மறைவதற்கு முன்பாக பிரதோஷ காலத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால், குடும்பத்தில் செல்வம் பெருகும். சந்தோஷம் நிலவும், வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும்.

தீபம் ஏற்றும் முறை: விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நல்லது. விளக்கேற்றிய பிறகு ஒரு மனதோடு செய்யும் வழிபாடு நினைத்ததை நிறைவேற்றும். தினசரியும் விளக்கேற்றி வழிபடும் வீட்டில் சகல ஐஸ்வர்யமும் குடியேறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+