திருச்சானூர் பத்மாவதி தாயார்... தேரோட்டம் கோலாகலம்.. அழகைக் காண கண் கோடி வேண்டும்
திருப்பதி: கார்த்திகை பிரம்மோற்சவத்தினை முன்னிட்டு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு நான்கு மாட வீதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பத்மாவதி தாயார் புராண காலத்தில் திருச்சானூரில் உள்ள கோவில் திருக்குளமான பத்மசரோவரத்தில் கார்த்திகை மாத பஞ்சமி நாளன்று ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரில் அவதரித்தார். இதனை முன்னிட்டு ஆண்டு தோறும் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 10ஆம் தேதி தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் தாயாரின் வாகன சேவை வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 5ஆம் திருநாளான கஜ வாகன சேவை 5ஆம் நாளன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருமலையில் உற்சவர் மலையப்பசாமிக்கு அணிவிக்கப்படும் தங்க லட்சுமி காசு மாலை பலத்த பாதுகாப்போடு திருமலையில் இருந்து திருச்சானூருக்கு கொண்டு வரப்பட்டு பத்மாவதி தாயாருக்கு அணிவிக்கப்பட்டது.

நாளைய தினம் 6ஆம் நாளான இரவு கருட வாகன சேவையில் அருள்பாலித்தார். திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளன்று தாயாரின் தங்க தேரோட்டம் திருமாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது. மாலை 4 மணியளவில் தங்கத் தேரில் தாயார் எழுந்தருளிய நிலையில் தாயாருக்கு தூபதீப நெய்வேத்தியங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து தேவஸ்தான அறங்காவலர் குழுவினர், உயர் அதிகாரிகள், பெண்கள் வடம் பிடிக்க தாயாரின் தங்க தேரோட்டம் திருமாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.

இன்றைய தினம் திருத்தேரோட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுக்க மாட வீதிகளில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. நாளைய தினம் பத்மாவதி தாயார் அவதார தினமாகும். பஞ்சமி தீர்த்தவாரியுடன் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
பிரம்மோற்சவ விழாவினை அடுத்து ஆண்டு தோறும் நடைபெறும் புஷ்ப யாகம் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. பஞ்ச தீர்த்த குளத்தில் நீராட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications