சமையலறையில் கிண்ணத்தில் இதை வெச்சு பாருங்க.. கிச்சனில் இந்த திசையில் சமையல் பண்ணுங்க..வாஸ்து டிப்ஸ்
சென்னை: ஒரு வீட்டில் சமையலறை சரியாக அமைந்து, அங்குள்ள பொருட்களையும் சரியான திசையில் வைத்திருந்தாலே, வீட்டில் சிக்கல்கள் கூடாது.. அதிலும், தென்கிழக்கு மூலையில் அதாவது அக்னி மூலையில் சமையலறை அமைந்தாலே பாதி வெற்றி கிடைத்துவிடும் என்பார்கள். அந்தவகையில் சமையலறை வாஸ்து பற்றி பார்ப்போம்.
தென்மேற்கும் வடகிழக்கும் சமையலறை வைக்கவே கூடாது. உடல் நல பாதிப்பு வரும் என்பார்கள்.. அதேபோல, கடன் பிரச்சினை திருமண தடை, திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துவிடும்..

மேற்கு சமையலறையும் வருவது சரிகிடையாது.. இதனால் கையில் பணம் மிச்சமிருக்காது.. நல்ல சம்பவங்கள் எதுவுமே நடக்காமல் போய்விடும்.
கிச்சன் அமைப்பு இப்படி இருக்கணும்
பாத்திரம் கழுவும் சிங்க் எப்போதும் வடகிழக்கு பகுதியில் இருக்க வேண்டும்.. அதேபோல, எப்போதுமே சமையல் செய்பவர் கிழக்கு நோக்கி நின்று சமையல் செய்ய வேண்டும். அல்லது மேற்கு நோக்கியும் நின்றும் சமைக்கலாம்.. உங்களது வீட்டில், வடமேற்கு மூலையில் கிச்சன் அமைந்துவிட்டால், தென் கிழக்கு பகுதியில் கிழக்கு பார்த்து நின்று சமைக்க வேண்டும்..
கேஸ் ஸ்டவ், சிலிண்டர், மைக்ரோவேவ் ஓவன் போன்ற கிச்சனில் வைக்கப்படும் பொருட்கள் தென் மேற்கு திசையில் வைக்கலாம். தண்ணீர் குடம், வாட்டர் ப்யூரிஃபையர் போன்றவற்றை வடகிழக்கு திசையில் அமைக்கலாம்..
தண்ணீர் சிக்கனம்
சுக்கிரனும் சந்திரனும் அதிகம் இணையக்கூடாது என்பார்கள்.. எனவே, கிச்சனில், தண்ணீர் அதிகம் புழங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். கிச்சனில் எப்போதுமே ஈரம் சேர விடக்கூடாது.. கிச்சனில் குழாயில் தண்ணீர் சிந்தவும் கூடாது.. அந்த குழாய் உடைந்தும் இருக்கக்கூடாது.. தண்ணீர் அதிகமாக செலவானால், வீட்டில் ஏற்படும் செலவுகளும் அதிகமாகிவிடும். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தினால், செல்வம் சேரும் என்பார்கள்.
சமையலறை தானியங்கள்
அரிசி, உப்பு, பருப்பு நவதானியங்களை எப்போதும் நிறைவாக வைத்திருக்க வேண்டும். காலியாகும்வரை காத்திருக்காமல், முன்கூட்டியே இவைகளை வாங்கி வைத்து விட வேண்டும்.. வடகிழக்கு மூலையில் ஒரு கிண்ணத்தில் நவதானியங்களை வைக்கலாம்.. அல்லது வெந்தயத்தை போட்டு வைக்கலாம்.
இப்படி தானியங்களை வைக்கும்போது, அவைகள் திறந்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.. இவைகளை சமையலுக்கும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். கிச்சன் சுவர்களுக்கு அடர்ந்த நிறத்தை சேர்க்காமல், வெள்ளை நிறம் அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும்படி பார்த்து கொள்ளலாம். இதனால், நேர்மறை ஆற்றலும், குடும்பத்தில் ஒற்றுமையும் அதிகரிக்கும்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications