இழந்த சொத்துக்கள் திரும்ப கிடைக்க..இப்படி விளக்கேற்றுங்கள்! கொடுத்த கடன் வசூலாகும்!!
இழந்த சொத்துக்கள், கொடுத்த பணம் திரும்பி வர விளக்கேற்றி வழிபடலாம். பஞ்சமி நாளில் சிவன்கோவிலில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.
சென்னை: ஒரு சிலர் வாங்கிய பணத்தை திரும்ப தர மாட்டார்கள்..சிலரோ நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்திருப்பார்கள். சிலர் சொத்துக்களையும், நகைகளையும் ஏமாந்திருப்பார்கள். இழந்த சொத்துக்களை மீட்கவும், கொடுத்த கடனை வசூலிக்கவும் சில பரிகாரம் உள்ளது அதை பார்க்கலாம்.
Recommended Video
நம்முடைய வீட்டில் நாம் தினசரியும் விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கேற்றினால் மனம் அமைதியடையும். வீடே மங்களகரமாக இருக்கும். விளக்கேற்றுவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். இழந்த சொத்துக்களும், செல்வமும் கூட மீட்கப்படலாம் என்கின்றனர் ஜோதிடர்கள்.
வேத புராணங்களும்கூடவிளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

தீபம் ஏற்றும் நேரம்
அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரையிலும் தீபம் ஏற்றலாம். காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம் மற்றும் வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள்.

வறுமை விலகி செல்வம் பெருகும்
வீட்டின் சுவாமி அறை மட்டுமல்லாது நடு முற்றம், சமையல் அறை, துளசி மாடம் போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம் மாலை நேரம் நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் அந்த குடும்பம் வறுமையின் ஆழத்தில் கிடந்தாலும் மிக கண்டிப்பாக செல்வ செழிப்பின் உச்சத்திற்கு வருமென்று சாஸ்திரங்கள் உறுதியாக சொல்லுகின்றன.

தேங்காய் எண்ணெய் தீபம்
விநாயகருக்கு தேங்காய் எண்ணெய், மகாலட்சுமிக்கு பசுநெய், குலதெய்வத்துக்கு வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய், பைரவருக்கு நல்லெண்ணெய், அம்மனுக்கு விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த 5 கூட்டு எண்ணெய் ஏற்றலாம். மகாவிஷ்ணுவுக்கு நல்லெண்ணை ஊற்றி விளக்கேற்றலாம். எல்லா தேவதைகளுக்கும் நல்லெண்ணை விளக்கு ஏற்றலாம்.

கடன்கள் தீர பரிகாரம்
ஒரு சிலர் கடன் பிரச்சினையில் சிக்கித்தவிப்பார்கள். அவர்களுக்கு எளிய பரிகாரம் உள்ளது. ஆலயத்தில் இலுப்ப எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி சிவனை வழிபட்டால் கடன்கள் தீரும். இலுப்ப எண்ணெய் கோவில்களில் மட்டும்தான் பயன்படுத்தலாம். வீட்டில் விளக்கேற்ற இலுப்பை எண்ணெய் பயன்படுத்தக்கூடாது. விளக்கிற்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் கடலை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றவே கூடாது. அப்படி ஏற்றி வைத்தால் கடன்கள் பெருகும். தீயவிளைவுகள்தான் ஏற்படும்.

பஞ்சமி திதியில் பஞ்ச தீப எண்ணெய்
பசுநெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய இந்த ஐந்தும் கலந்த பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி ஐந்து முகம் ஏற்றி பஞ்சமி திதியில் தேவியை வழிபட்டால் அம்மனின் அருள் கிடைக்கும். பஞ்சதீப எண்ணெய் ஊற்றி ஐந்து முகம் ஏற்றி வடக்குப் பக்கம் பார்த்து தீபம் ஏற்றி வந்தால் எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். துன்பங்கள் நீங்கும். வரவேண்டிய பண பாக்கிகள் வந்து சேரும். இழந்த செல்வத்தையும் மீட்கலாம்.

சொத்துக்களை மீட்க பரிகாரம்
சொத்துக்களை இழந்தோரும், ஏமாற்றி பிடுங்கப்பெற்றோரும்,வர வேண்டிய நியாயமான சொத்துக்கள் வராமல் தவிப்போரும், திரும்ப கிடைக்கும் என நினைத்து கொடுத்த பணத்தை இழந்தோரும், தங்களின் நிலை மாற, தொடர்ந்து 27 பஞ்சமிகள், மாலை வேளையில் சிவன் சன்னதியில் சிகப்பு திரி கொண்டு மண் அகலில் இலுப்பெண்ணெய் தீபம் 9 ஏற்றி மனமுருகி வேண்டி வர, பரிகாரம் முடிவதற்குள் பலன் கை மேல் கிடைக்கும். இந்த பரிகாரம் செய்யும் நாள் அசைவம் முட்டை உட்பட தவிர்க்க வேண்டும். இறைவன் மீது நம்பிக்கை இருந்தால் நம்முடைய காரியங்கள் வெற்றியடையும். எனவே நம்பிக்கையுடன் எந்த பரிகாரத்தையும் செய்யுங்கள் கை மேல் பலன் கிடைக்கும்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications