குபேரனாக்கும் குபேர மூலை.. வீட்டில் பணம் கொட்டணுமா? குபேர திசையில் இந்த பொருளை மட்டும் வைக்காதீங்க
சென்னை: நம்முடைய வீட்டிலுள்ள மூலைகளை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப்பொருத்தே, நம்முடைய வீட்டின் வளம் தீர்மானிக்கப்படுகிறது.. அந்தவகையில், குபேர மூலையின் முக்கியத்துவம் என்னென்ன? இந்த குபேர மூலையில் நாம் தெரியாமல்கூட செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன? என்பதை சுருக்கமாக பார்ப்போம்.
வீட்டின் வடக்கு திசை குபேரன் மற்றும் மகாலட்சுமியின் திசையாக கருதப்படுகிறது.. எனவே, வீட்டின் மொத்த நேர்மறை ஆற்றலும் வாரி வழங்கும் இடமாக இந்த திசை விளங்குகிறது. எனவே, புதிதாக வீடு கட்டுவதாக இருந்தால், வடகிழக்குப் பகுதியில் பூஜை அறை வைக்கலாம்..

வீட்டின் வடக்கு பகுதியே குபேர திசை என்பார்கள்... வடக்கு மூலையை ஆட்சி செய்பவர் புதன் பகவான்... இந்த திசை தான் ஒருவரின் வாழ்க்கையில் எல்லா வகையான மகிழ்ச்சியையும் தரக்கூடியது..
வடக்கு திசை: புதன் ஆள்வதால் ஒருவருக்கு புத்திசாலித்தனம், நற்சிந்தனை, அறிவு, கல்வி மற்றும் செல்வத்தின் திசையாக மங்களகரமானதாக இந்த திசை கருதப்படுகிறது.. எனவே, வடக்கு திசையில் காலி இடத்தை விட்டுவிட்டு, வீட்டை கட்டுவதன் மூலம் உங்களுக்கு அனைத்து விதமான மகிழ்ச்சியும், செழிப்பும் சேரும். அதனால்தான், இந்த திசையில் சில பொருட்களை மறந்தும்கூட வைத்துவிடக்கூடாது என்பார்கள்.
குறிப்பாக, வடக்கு பார்த்த சுவற்றில், அடர் சிவப்பு நிறம் (dark red,) அடர் மஞ்சள் நிறம் (dark yellow paint) உள்ள வர்ணத்தை பூசக்கூடாது. அதேபோல, நெருப்பு சம்பந்தப்பட்ட பொருட்களையும் வடக்கு பார்த்து இருக்கும் சுவற்றிலோ, வடக்கு மூலையிலோ வைக்கக்கூடாது. சூரிய பகவான் படத்தை மாட்டி வைத்திருந்தாலும், அதை அங்கிருந்து நீக்கிவிட வேண்டும்.
குப்பைத்தொட்டி: பெரிய பொருட்கள், கனமான பொருட்களை வைக்கக்கூடாது.. பழைய உடைந்த பொருட்களையும், தேவையற்ற உபயோகமில்லாத பொருட்களையும் வைக்க கூடாது.. குப்பை தொட்டியையும் இங்கு வைக்கக்கூடாது.. இப்படி வைத்திருந்தால், வீட்டில் பணம் தங்காது என்பார்கள்.
அதேபோல, இந்த வட திசையில் செருப்புகளை வைக்கக்கூடாது.. அதுவும் வடக்கு திசை நோக்கி செருப்புகளை கழற்றி வைக்கக்கூடாது.. இந்த திசையில் கழிவறை, குளியலறை அமைப்பதால் மகாலட்சுமியின் அருள் கிடைக்காமல் போய்விடும். வடக்கு பக்கத்தில் முகம் பார்க்கும் கண்ணாடியை மாட்டி வைக்கலாம்..
உப்புத்தண்ணீர்: கூடுமானவரை இந்த திசை காலியாக வைத்திருக்கலாம்.. ஆனால், அழுக்கு, தூசு இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.. தேவைப்பட்டால், உப்புத்தண்ணீரில் இந்த இடத்தை துடைத்துவிட்டால், நேர்மறை ஆற்றல் வீட்டிற்குள் தாராளமாக வரும்.. இந்த வடக்கு திசை நோக்கி மாணவர்கள் படிக்கும்வகையில் மேசைகளை உருவாக்கி தரலாம்.
இந்த மூலையை தண்ணீர் சம்பந்தப்பட்ட மூலை என்பார்கள்.. அதனால், தண்ணீர் சம்பந்தப்பட்ட பொருட்களை அந்த இடத்தில் வைக்கலாம்... முக்கியமாக வடக்கு திசையில் மீன் தொட்டி வைக்கலாம்... அல்லது அருவி போன்ற நீர் சம்பந்தப்பட்ட போட்டோக்களை வாங்கி மாட்டலாம். அல்லது செயற்கையான நீரூற்று போல வைக்கலாம். இதனால், அதிர்ஷ்டமும் சேர்ந்து உங்களுக்கு வரலாம்.
நல்லெண்ணெய்: ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும், குபேர மூலையில் குபேர விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி, வெண் பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்றி வர வேண்டும்.. இப்படி செய்து வந்தால், குபேரனுடைய அருளால், உங்களது உழைப்பு அத்தனையும் அதிர்ஷ்டமாக மாறும்...!!!
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications