நிலத்தை வைத்திருப்பவர்கள்.. நல்ல விலைக்கு விற்கணுமா? நிலம், வீடு புதுசா வாங்கணுமா? 6 வெற்றிலை போதுமே
சென்னை: சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளதா? நிலம், வீடு வாங்குவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்படுகிறதா? வாங்கிய நிலத்தை விற்பதற்கு பரிகாரம் உள்ளதா? இவைகள் அனைத்தையும் பற்றி முன்னோர்கள் தெளிவாக குறிப்பிட்டு உள்ளனர். அவைகளை சுருக்கமாக பார்ப்போம்.
நிலம் வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கலாம். ஆனாலும் அது எளிதில் கைகூடாமலேயே இழுபறியில் இருக்கும். இப்படி வீடு வாங்க முடியாவிட்டாலும், அல்லது வாங்கிய நிலத்தில் சிக்கல் என்றாலும் எளிய பரிகாரங்களை செய்வதால், நிலம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

பரிகாரங்கள்: நிலம், வீடு பிரச்சனை என்றாலே செவ்வாய்கிரகத்துக்கு உரிய கடவுளான முருகப்பெருமானை, செவ்வாய்கிழமைகளில் வணங்கி வரலாம்.. முருகனுக்கு வீட்டிலேயே வெற்றிலை தீபம் ஏற்றி வழிபடலாம்.
இதற்கு முருகப்பெருமானின் போட்டோவை சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் வைத்து, கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்கும்படியாக வைக்க வேண்டும். பிறகு 6 பசுமையான வெற்றிலைகளை அழுக்காகவோ, கிழிந்ததாகவோ இல்லாமல் எடுத்து கொள்ள வேண்டும். இதிலுள்ள காம்புகளை மட்டும் தனியாக எடுத்து வைத்துவிட்டு, வெற்றிலைகளின் நுனியில் மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும்.
தாம்பூலத்தட்டு: ஒரு தாம்பூலத்தட்டில் ஆறு வெற்றிலைகளையும் வட்ட வடிவில் வைக்கவும். அதன் நடுவில் மஞ்சள் குங்குமம் வைத்த அகல் விளக்கினை வைக்க வேண்டும்.. 6 வெற்றிலைகளும், அகல் தொடும்படியாக இருக்க வைக்க வேண்டும்.
இப்போது விளக்கில் வெண்திரியிட்டு, நல்லெண்ணெய் ஊற்றி, தனியாக எடுத்து வைத்திருக்கும் 6 வெற்றிலை காம்புகளையும், இந்த தீபத்தில் ஊற்றில் எண்ணெய்யிலேயே போட்டுவிட்டு, இறுதியாக தீபமேற்றி வழிபட வேண்டும். இப்போது தீபத்தில் போடப்பட்ட வெற்றிலை காம்புகளும், தீபம் அடியில் வைக்கப்பட்டுள்ள 6 வெற்றிலைகளும் சேர்ந்து சூடாகும்போது நல்ல மணம் வீடு முழுவதும் பரவும்.. வெற்றிலை தீபம் ஏற்றி வணங்கியதால் முருகப்பெருமான் மனம் மகிழ்ந்து உங்களது வேண்டுதலை நிறைவேற்றுவார்..
நிலம்: இதுபோல 9 வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால், சொந்த வீடு உள்ளிட்ட நிலம் தொடர்பான அத்தனை பிரச்சனையும் நீங்கும். அதேபோல, செவ்வாய்க்கிழமைகளில் அருகிலுள்ள முருகன் கோவிலுக்கு சென்று ஒன்று அல்லது 6 விளக்குகள் போட்டு தீபம் ஏற்றி வந்தாலும், நிலம் வாங்க கூடிய யோகம் விரைவில் உண்டாகும்.
செவ்வாய்க்கிழமையில் காலை ஆறிலிருந்து ஏழு செவ்வாய் ஹேரையில் இந்த வெற்றிலை விளக்கு ஏற்றலாம். அதேபோல, பகல் 1 மணி முதல் 2 மணி வரை செவ்வாய் ஹேரையிலும் அல்லது இரவு 8 மணி முதல் 9 மணி வரை செவ்வாய் ஹேரையிலும் வெற்றிலை விளக்கேற்றலாம்
பச்சரிசி: அதேபோல, தினந்தோறும் வாசலில் பச்சரிசி மாவினால் கோலம் போடுபவர்களுக்கு நில வசியம் நிச்சயம் உண்டாகும் என்பார்கள். அதேபோல, கடலை, கிழங்கு வகைகள் போன்றவற்றை தானம் செய்து வந்தாலும், நிலம் எளிதில் வாங்க முடியும்..
அதேபோல் நிலத்தை நல்ல விலைக்கு விற்க வேண்டுமானால், அல்லது விற்பதில் இருக்கக்கூடிய தடைகள் விலக வேண்டுமானால், இதற்கும் ஒரு எளிய பரிகாரம் உள்ளது.. செவ்வாய்கிழமைகளில், விற்க வேண்டிய உங்களது நிலத்திலிருந்து, ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து, ஒரு மஞ்சள் துணியில் வைத்து கொள்ள வேண்டும். இதில், 1 ரூபாய் நாணயங்களை 6 வைத்து, மூட்டையாக கட்டி பூஜை அறையிலுள்ள முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும்.
காணிக்கை: அடுத்து வரக்கூடிய வியாழக்கிழமையோ அல்லது பௌர்ணமி நாளிலோ அந்த மூட்டையை எடுத்துக் கொண்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று, மூட்டையில் இருக்கக்கூடிய ஒரு ரூபாய் நாணயங்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்திவிட்டு, மூட்டையிலுள்ள மண்ணையும், மஞ்சள் துணியையும், கடலில் கரைத்து விட்டுவர வேண்டும். இப்படி செய்வதால், நிலத்தை நல்ல விலைக்கு விற்கலாம். விற்பதில் ஏதாவது தடைகள் இருந்தாலும் விலகிவிடும்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications