பழனிக்கு போய்ட்டு பக்கத்துல எந்த கோயிலுக்கும் போகாதீங்க! நேரா எங்க போகணும் தெரியுமா?
சென்னை: சாப்பிடும் போது குறிப்பிட்ட சில விஷயங்களை எல்லாம் செய்யக் கூடாது என நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். அதை கட்டாயம் பின்பற்றுவதுடன் நம் வருங்கால சந்ததியினருக்கும் சொல்லித் தர வேண்டும்.
இதுகுறித்து நானறிந்த ஆன்மீகம் என்ற ஐடியில் இருந்து கூறியிருப்பதாவது: 1. தலைக்கு வைக்கும் தலையணை மீது அமரக் கூடாது.

2. எண்ணெயிலும் நீரிலும் நம் நிழலைப் பார்க்கக் கூடாது. கோலம் போடக் கூடாது.
3. திருப்பதி, பழனி, திருத்தணி போன்ற திருத்தலங்களுக்குச் சென்றால் அங்கிருந்து நேரடியாக நம் வீட்டுக்குத்தான் வர
வேண்டும். இத்தனால் புண்ணியங்கள் சேரும். வேண்டிக் கொண்ட விஷயஙள் நிறைவேறும்.
4. பூஜையறையில் வடக்குப் பார்த்து தெய்வப் படங்களை வைக்கக் கூடாது.
5. எப்போதும் கால், தொடை ஆட்டிக் கொண்டிருக்கக் கூடாது. நம் உடலிலுள்ள சக்தி வீணாகும். நம் மீதான மரியாதையும் மதிப்பும்
குறையும்.
6. பாவி பாவி என்று யாரையும் திட்டக்கூடாது. திட்டப்பட்டவன் பாவம் செய்திருந்தால் திட்டியவன் இன்னும் பாவியாகிறான். திட்டப்பட்டவன் பாவம் செய்யாதவனாக இருந்தால் இரு மடங்கு பாவம் சொன்னவனை சேரும்.
7. உணவைப் பிசைவது, உருட்டுவது, வழிப்பது, திட்டிக் கொண்டும் சிந்திக் கொண்டும் சாப்பிடுவது கூடாது. அடுத்த பிறவியில் உண்ணும்
உணவுக்கு பஞ்சம் ஏற்படும். பிச்சை எடுத்தாலும் கூட உணவு கிடைக்காது.
8. துணியை தலையில் சுற்றிக் கொண்டு சாப்பிடக் கூடாது.
9. தீபத்தின் நிழலிலும் மனிதனின் நிழலிலும் தங்கக் கூடாது.
10. காலை, மாலை சந்தியாகால வேளையில் சாப்பிடுவதும் உறங்குவதும் கூடாது.
11. பந்தியில் உணவு பரிமாறும்போது ஒருவருக்கு அதிகமாகவும் ஒருவருக்கு குறைவாகவும் பரிமாறி ஓரவஞ்சனை செய்யக்கூடாது. இது பட்டினிக்கு வழி வகுக்கும்.
12. உண்ணும்போது விளக்கு அணைந்தால் உண்ணுவதை நிறுத்தி விட வேண்டும். மறுபடியும் வெளிச்சம் வந்ததும் தட்டில் உள்ளதை மட்டுமே சாப்பிட வேண்டும். மறுபடியும் அதில் உணவை சேர்க்கக் கூடாது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அது போல் வீட்டில் எப்போதும் இரு கைகளால் தலையை சொரியக் கூடாது. கைகளில் வளையல் போடாமலும் காதுகளுக்கு கம்மல் போடாமலும் பொட்டு வைக்காமலும் பெண்கள் விளக்கேற்றக் கூடாது. தொடையை தரையில் அடித்தப்படி சிலர் அழுது அடம்பிடிப்பார்கள். அது போல் செய்யக் கூடாது. மேலும் தொடையில் கை வைத்து சாப்பிடவும் கூடாது.
உணவை உருட்டி உருட்டி வைக்கக் கூடாது. இது போல் கெட்ட விஷயங்களுக்குத்தான் பிண்டமாக உணவை உருட்டுவோம் என்பதால் அப்படியும் சாப்பிடக் கூடாது. வீடுகளில் நகத்தை கடித்து ஆங்காங்கே போடக் கூடாது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நகம், முடி வெட்டக் கூடாது.அது போல் எந்த கிழமையாக இருந்தாலும் மாலை 6 மணிக்கு மேல் நகம் வெட்டக் கூடாது.
பெண்கள் தலை முடியை விரித்துக் கொண்டு சாப்பிடக் கூடாது. அது போல் தலைக்கு குளித்துவிட்டு தலையில் கட்டிய துண்டுடனும் சாப்பிடக் கூடாது. அது போல் கோயிலுக்கு செல்லும் போதும் சரி சாமி கும்பிடும் போது சரி தலையில் முக்காடு அணிந்திருக்கக் கூடாது. ஆண்களும் வேட்டியை மடித்து கட்டியிருத்தல் கூடாது. இப்படி நிறைய சாஸ்திரங்கள் உள்ளன. அவற்றை எல்லாம் நாம் பின்பற்றி வாழ்வில் வளம் பெற வேண்டும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications