சந்திர கிரகண நாளில் மூடப்படாத கோவில்கள்.. திருநள்ளாறு, காளஹஸ்தி திறந்திருக்கும் காரணம் இதுதான்!
சென்னை: சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளதால் தமிழகம், ஆந்திராவில் உள்ள பிரபல கோவில்களின் நடை அடைக்கப்பட உள்ளது. அதே நேரத்தில் திருநள்ளாறு சனிபகவான் கோவில், காளஹஸ்தி சிவ ஆலயம் உள்ளிட்ட கோவில்களில் இன்று சந்திர கிரகணத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. எதற்காக இந்த கோவில்களில் நடை அடைக்கப்படுவதில்லை என்று பார்க்கலாம்.
கோவில்கள்: சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று இரவு 7 மணி முதல் 29ஆம் தேதி அதிகாலை 03.15 மணி வரை நடை சாத்தப்படுகிறது. இதே போல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதன் 22 உப கோயில்களில் மாலை 6 மணிக்கு மேல் நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தரிசனம் ரத்து: கிரகணத்தை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மாலை 5.30 மணிவரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மாலை வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றத்திலும் கோவில் நடை மாலையுடன் அடைக்கப்பட உள்ளது.
திருநள்ளாறு சனிபகவான் கோவில்: சந்திர கிரகணத்தை ஒட்டி பல்வேறு கோயில்களின் நடை சாத்தப்படும் நிலையில் சனீஸ்வரர் கோயிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. உலகிலேயே சனி பகவானுக்கு என தனி சன்னதி, திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் மட்டுமே உள்ளது. கிரகணம் நிகழும் போது வீடுகளில் தர்ப்பை புல்லை பயன்படுத்துவார்கள். தர்ப்பை மகிமை வாய்ந்தது. திருநள்ளாறு ஸ்தல இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர். அங்கு தல விருட்சமே தர்ப்பை புல்தான் எனவே கிரகண தோஷங்கள், எதிர்மறை சக்திகள் எதுவும் தாக்காது என்பதால்தான் இந்த கோவில் நடை அடைக்கப்படுவதில்லை.
காளஹஸ்தி கோவில்: காளஹஸ்தி கோவிலில் இன்றைய தினம் வழக்கம் போல பரிகார பூஜைகள் நடைபெற உள்ளன. இந்தியாவிலேயே இங்கே மட்டும் தான் ராகுவுக்கும் கேதுவுக்கும் பூஜை நடக்கிறது. அதனால் இங்கே கிரகணங்களின் தாக்கம் இருக்காது என்று சொல்லப்படுகிறது. எனவேதான் இன்றைய தினம் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெற உள்ளது. காளஹஸ்தி ஆலயம் சிவ பெருமானின் பஞ்ச பூத தலங்களில் வாயு தலமாக போற்றப்படுகிறது. இறைவன் மீது நவகிரக கவசம் அணிவிக்கப்பட்டுள்ளதால் கிரகண தோஷம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications