Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சதுரகிரி பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்! தினமும் சுந்தரமகாலிங்க தரிசனம்! ’இதை’ மட்டும் பண்ணனும்!

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மாதத்தில் 8 நாள்கள் மட்டுமே பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தினசரி மலை ஏறிச் சென்று வழிபாடு நடத்தலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை அடுத்து நேற்று முதல் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், சில கட்டுப்பாடுகளும் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 8 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. சதுரகிரி மலையில் ஓடுகின்ற ஓடைகளும் அங்கு விளைந்திருக்கும் மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் சதுரகிரி மலையின் மீது ஏறி இறங்கும் போது உடலில் உள்ள வியர்வை வெளியேறி மூலிகை கலந்த காற்றுப்படுவதால் பல நோய்கள் குணமாவதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் சித்த மருத்துவர்கள் கூட இங்கிருந்து தான் மூலிகைகளை பறித்துச் செல்கின்றனர்.

spirituality virudhunagar sathuragiri

நான்கு திசைகளிலும் நான்கு மலைகள் என மொத்தம் 16 மலைகள் சமமாக சதுர வடிவில் அமைந்திருப்பதால் இந்த மலை சதுரகிரி மலை என பெயர் பெற்றது. இந்த கோவிலில் ஆடி அமாவாசை உள்ளிட்ட முக்கிய விரத தினங்கள், சித்ரா பௌர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகியவற்றில் பக்தர்கள் வழிபட அதிக அளவில் திரள்வது வழக்கம். கடந்த காலங்களில் இரவு நேரங்களில் சதுரகிரியில் பக்தர்கள் தங்கி வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.

சதுரகிரி மலை மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலமாக இருந்தாலும் வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் பக்தர்கள் வழிபாட்டுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. மேலும் வனவிலங்கு மற்றும் காட்டாற்று வெள்ள அபாயம் காரணமாக வனத்துறையினர் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியிலேயே பக்தர்களை மலைக்கு செல்ல அனுமதிக்கின்றனர். மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்திருப்பதால் அங்கு பக்தர்கள் இரவில் தங்க அனுமதிக்கப்படவில்லை.

மேலும் பக்தர்கள் அனுமதிக்கப்படும் நாட்களில் திடீரென காட்டாற்று வெள்ளம் அதிகமாகி பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்படும் சம்பவங்களும் நடைபெற்றிருக்கின்றன. கடந்த 2015 ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 15 பேர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சதுரகிரியில் நவராத்திரி வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டுமென உயர்நீதியின் மன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் பக்தர்கள் தினசரி மலையின் மீது ஏறிச் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்க உத்தரவிட்டது.

இதனையடுத்து வியாழக்கிழமை முதல் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சதுரகிரியில் பக்தர்கள் மலையேறி செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சதுரகிரியின் அடிவாரமான வத்திராயிருப்பு தானிப்பாறை நுழைவாயில் வழியாக தினமும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுகிறார்கள். மலையேறும் பக்தர்கள் 4 மணிக்குள் அடிவாரத்திற்கு திரும்ப விட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் சில கட்டுப்பாடுகளையும் வனத்துறை அதிகாரிகள் விதித்திருக்கின்றனர்.

அதன் படி மலையேறும் பக்தர்கள் மாலை 4 மணிக்குள் அடிவாரம் திரும்ப வேண்டும், அனுமதி இன்றி இரவு நேரத்தில் மலை மீது தங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும், அனுமதிக்கப்பட்ட வழிகள் வழியாக மட்டுமே செல்ல வேண்டும், பிளாஸ்டிக் பொருட்கள், லைட்டர், தீப்பெட்டி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும் பலத்த சோதனைகளுக்கு பிறகு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் எனவும் வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+