Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வந்தாரய்யா..கள்ளழகர் வந்தாரய்யா..தங்க குதிரை ஏறி வந்தாரய்யா..கண்ணார தரிசித்தோமய்யா

Subscribe to Oneindia Tamil

மதுரை: கோவிந்தா...கோவிந்தா என்ற முழக்கம் விண்ணை முட்ட பச்சை பட்டுடுத்தி..ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து தங்க குதிரை வாகனத்தில் ஏறி வந்த கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாதல் விடிய விடிய வைகை ஆற்றங்கரையில் காத்திருந்த பக்தர்கள் கண் குளிர தரிசித்தனர். மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தருவதற்காகவே வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குகிறார் என்பது புராணம்.

சித்திரை பிறந்தாரே மதுரையில திருவிழா கோலம்தான். மீனாட்சி அம்மன் ஆட்சி ஆரம்பித்த நாளில் இருந்தே மக்கள் கூட்டம் அலைமோதும். திருக்கல்யாணமும், தேரோட்டமும் நடந்து முடிந்த மறுநாளே கள்ளழகரும் மதுரைக்கு வந்து சேர்ந்தார். அதிர்வேட்டு முழங்க ஆர்ப்பாட்டமாகக் கிளம்பிய கள்ளழகரை மண்டகப்படிகளில் காத்திருந்த பக்தர்கள் வரவேற்றனர்.

Madurai Chithirai thiruvizha 2023: Lord Kallazhagar enter Vaigai river tomorrow Sabha vimosanam

தங்கப்பல்லக்கில் கண்டாங்கி பட்டு கட்டு வேல் கம்புடன் கள்ளழகர் கோலத்தில் மதுரைக்கு வந்த கள்ளழகருக்கு மூன்று மாவடியில் எதிர்சேவை நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்றனர். சர்க்கரைக் கிண்ணத்தில் தீபம் ஏற்றி எதிர்கொண்டு வரவேற்று வணங்கினர்.

நேற்று மாலை தல்லாகுளம் பெருமாள் கோயிலில் எழுந்தருளியவர், இரவு முழுவதும் மக்களுக்கு ஆசி வழங்கி, பின்னர் நூபுரகங்கை தீர்த்தத்தினால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட கள்ளழகர் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்துகொண்டு இன்று அதிகாலை மூன்று மணிக்குத் தங்கக்குதிரையில் ஏறி 5 மணிக்கு வைகை ஆற்றுக்கு வந்து சேர்ந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் விசிறிகளை வீசியும் தண்ணீரை பீய்ச்சியடித்தும் வரவேற்றனர்.

வைகை ஆற்றுக்கு தங்கக் குதிரைவாகனத்தில் ஏறி வந்த கள்ளழகரை வெள்ளிக்குதிரை மீது ஏறி வந்த வீரராகவப்பெருமாள் எதிர்கொண்டு வரவேற்றார். அதன் பின்பு கள்ளழகர் வைகையில் இறங்கினார். அப்போது அங்குத் திரண்டிருந்த கோவிந்தா..கோவிந்தா என்ற முழக்கமிட்டனர். வைகையில் இறங்க கள்ளழகரை வானமும் பூவாய் தூவி வரவேற்றது. பக்தர்களும் தண்ணீரை பீய்ச்சி அடித்து, பூக்களைத் தூவி பரவசமடைந்தனர்.

நல்ல மழை பெய்து வைகை ஆற்றில் இந்த ஆண்டு வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வைகை அணையில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வைகை ஆற்றில் சிறப்பாக மண்டகப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. வீரராகவப்பெருமாள் மண்டகப்படி, இந்து சமய அறநிலையத்துறை மண்டகப்படி அமைக்கப்பட்டிருந்தது.

பக்தர்கள் வெள்ளத்திற்கு நடுவே தங்கக் குதிரை மீதேறி வந்த கள்ளழகர் வைகையில் எழுந்தருளிய பின்னர் இந்து சமய அறநிலையத்துறை மண்டகப்படியில் சற்று நேரம் இளைப்பாறி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன் பின்னர் வைகை ஆற்றங்கரையோரம் வண்டியூருக்கு சென்றார்.

மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தருவதற்காகவே கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார் என்பது புராண கதை.
சுதபஸ் என்ற முனிவர், நூபுரகங்கையில் தீர்த்தமாடி, பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார். பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த முனிவர், ரிஷி வந்ததைக் கவனிக்காமலிருக்கவே ஆத்திரமடைந்த துர்வாசர் 'மண்டூகோ பவ' அதாதவளையாக போகக் கடவாய்! என சாபமிட்டார்.

அந்த கணமே தவளையாகிப் போன சுதபஸ், சாபவிமோசனத்துக்கு வழிகேட்டபோது, 'விவேகவதி தீர்த்தக்கரையில் நீ தவம் பண்ணிக்கொண்டிரு. சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார்' என சொல்லியிருக்கிறார் துர்வாசர். அதன்படி வைகைக் கரையில் தவம் பண்ணிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவருக்கு, விமோசனம் கொடுக்க அழகர் மதுரைக்கு வந்து போனதாகப் புராணங்கள் சொல்கின்றன.

வைகையில் இறங்கும் கள்ளழகர், மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருவதற்காக வண்டியூரை நோக்கிக் கிளம்பினார் கள்ளழகர், வழிநெடுக வரவேற்பினை பெற்றுக்கொண்டு இன்று இரவு வண்டியூர் போய்ச் சேருகிறார் கள்ளழகர். நாளைய தினம் அதிகாலையில் அழகருக்கு ஏகாந்த சேவை. பயணக்களைப்பு நீங்குவதற்காக சந்தன அலங்காரம் பண்ணிக்கொள்ளும் கள்ளழகர், வண்டியூர் பெருமாள் கோயிலை வலம் வருவார். அதன்பிறகு சர்ப்பவாகனத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் சென்றடைகிறார்.

தேனூர் மண்டபம் வைகை ஆற்றுக்குள் திருமலைநாயக்கரால் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஏற்கெனவே தேனூரில் நடந்து கொண்டிருந்த வைபவங்கள் இப்போது இந்த மண்டபத்தில் நடக்கிறது. தேனூர் மண்டபத்தில் தங்க கருட வாகனத்துக்கு மாறும் கள்ளழகர், அங்கிருந்து மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருகிறார்.

தேனூர் மண்டபத்திலிருந்து மதுரை நோக்கிவரும் அழகர், ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு நாளைய தினம் இரவு வந்து சேருகிறார். நாளைய தினம் இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்துகிறார் கள்ளழகர். தங்கப்பல்லாக்கில் மதுரைக்கு வந்த கள்ளழகர் பூப்பல்லாக்கில் அழகர் கோவிலிலுக்கு திரும்பி செல்லும் வரை எங்கும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். கோவிந்த முழக்கம் எதிரொலிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+