சித்திரையில் சொக்கரின் கரம் பிடித்த மதுரை மீனாட்சி..மே.2ல் திருக்கல்யாணம் பார்க்க ரெடியா..இத படிங்க
சென்னை: பட்டத்தரசி மதுரை மீனாட்சிக்கு சுந்தரேஸ்வரருடன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. சிவ பார்வதி கல்யாணத்தை காண உலக மக்களே ஆவலுடன் இருக்கிறார்கள். மதுரை சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சி மீனாட்சி திருக்கல்யாணத்தை காண விரும்பும் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில் சித்திரை திருவிழா உலகப் புகழ் பெற்றது. இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா வருகிற 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிறது. மே மாதம் 4ஆம் தேதி வரை மதுரையில் சித்திரை திருவிழா நடக்கிறது.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி பட்டாபிஷேகமும் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும் ஆகும். பட்டத்தரசியாக முடி சூட்டிக்கொண்ட மீனாட்சி அம்மன் திக் விஜயம் சென்று பல நாடுகளையும் வென்று இறுதியில் மேலோகம் சென்று தேவர்களுடன் போர் புரியும் போது சிவபெருமானை சந்திக்கிறார். பாண்டிய மன்னன் மகளான தடாதகை பிராட்டி எனப்படும் மீனாட்சி அம்மனை சுந்தரேஸ்வரராக மாறி கரம் பிடிக்கிறார் சிவபெருமான்.
முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்து இந்த திருமணத்தை நடத்தி வைக்கின்றனர். இந்த ஆண்டு மீனாட்சி திருக்கல்யாணம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வடக்கு ஆடி வீதி திருக்கல்யாண மண்டபத்தில் வரும் மே மாதம் 2ஆம் தேதி காலை 8.30 மணி முதல் 8.59 மணிக்குள் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகள் வழங்கப்பட உள்ளன. அதே போல தெற்கு கோபுரம் வழியாக வருகை தரும் பக்தர்களுக்கு கட்டணம் இல்லா தரிசனம் என்ற முறையில் அனுமதி வழங்கப்படும். இது யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கு அனுமதி என்ற நிலையில் இருக்கும்.
மீனாட்சி-சுந்தரேசுவரர் கல்யாணத்தை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் கட்டண சீட்டு பெற வசதியாக இந்து சமய அறநிலையத்துறையின் https://hrce.tn.gov.in-திருக்கோவிலின் https://maduraimeenakshi.hrce.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் வருகிற 22ஆம் தேதி முதல் 25ஆம் தேதி இரவு 9 மணி வரை முன்பதிவு செய்யலாம். இதன் ஒரு பகுதியாக ரூ.500 கட்டண பதிவில் ஒருவர் 2 சீட்டுகள் மட்டுமே பதிவு செய்ய இயலும். ரூ.200 கட்டண பதிவில் ஒருவர் 3 சீட்டுகள் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஒரே நபர் ரூ.500, ரூ.200 கட்டணச் சீட்டுகள் இரண்டையும் பதிவு செய்ய முடியாது.
12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் சீட்டு வாங்க வேண்டும். ஒரு பதிவிற்கு ஒரு கைபேசி எண் மட்டுமே பயன்படுத்த இயலும். எனவே ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் செய்ய இயலாது. பக்தர்களின் வசதிக்காக கோவிலுக்கு சொந்தமான மேற்கு சித்திரை வீதி, பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கட்டணச் சீட்டு பெற விரும்பும் பக்தர்கள் ஆதார் கார்டு, போட்டோ அடை யாள அட்டை, கைபேசி எண் மற்றும் மின் அஞ்சல் முகவரி ஆகியவற்றுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம். இணைய தளத்தில் கூடுதல் விண்ணப்பங்கள் வந்தால், பக்தர்களுக்கு கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு நடத்தி உரிய நபருக்கு மின்னஞ்சல் அல்லது கைபேசி எண்ணிற்கு வருகிற 26ஆம் தேதி தகவல் அனுப்பப்படும்.
உறுதி செய்யப்பட்ட மின்னஞ்சல்-குறுந்தகவல் கிடைக்க பெற்றவர்கள், வருகிற 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுரை மேற்கு சித்திரை வீதியில் உள்ள பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் உறுதி செய்யப்பட்ட தகவலை காட்டி, கட்டணச் சீட்டு தொகையை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.
அதன் பிறகு வருபவர்களுக்கு கட்டணச் சீட்டு வழங்கப்பட மாட்டாது. வெளியூரில் வசிக்கும் உறுதி செய்யப்பட்ட குறுந்தகவல் உடையவர்களுக்கு மட்டும் பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் மே 1ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை கட்டணச் சீட்டு தரப்படும். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை முன்னிட்டு மே 2ஆம் தேதி காலை 5 மணி முதல் 7 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
ரூ.500 கட்டணச்சீட்டு பெற்றவர்கள் வடக்கு ராஜ கோபுரம், மொட்டை முனீ ஸ்வரர் சன்னதி அருகில் உள்ள வழியில் அனுமதிக்கப்படுவர். ரூ.200 கட்டணச்சீட்டு பெற்றவர்கள் வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி சந்திப்பு அருகே உள்ள பாதை வழியாக வந்து வடக்கு ராஜ கோபுரம் வழியாக கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர். திருக்கல்யாண கட்டணச் சீட்டு பெற்றவர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அமர்ந்து திருக்கல்யாண காட்சியைக் கண்டு அம்மன்-சுவாமி அருள் பெறலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications