மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் எப்போது? விழாக் கோலத்தில் கோயில் நகரம்!
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் எப்போது என்பது குறித்து இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த குடமுழுக்கு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மதுரையே விழா கோலம் எடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த கோயிலுக்குள் செல்ல செல்போன் அனுமதிக்கப்படுவதில்லை.

இந்து அறநிலையத் துறையின் கீழ் இந்த கோயில் செயல்பட்டு வருகிறது. இங்கு அவ்வப்போது திருவிழாக்கள் நடைபெறும். அந்த வகையில் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.
கடைசியாக 2009 ஆம் ஆண்டு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகமவிதிகளாகும். அதன் படி 2021 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தியிருக்க வேண்டும்.
ஆனால் 2018ஆம் ஆண்டு கிழக்கு கோபுரத்தில் உள்ள வீரவசந்தராயர் மண்டபம் முழுவதும் தீக்கிரையானது. இதனால் இந்த பகுதி முழுவதும் தீயால் கருதியிருந்தது. இதை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இந்த பணிகள் 2021 ஆம் ஆண்டுக்குள் நிறைவு பெறவில்லை.
இந்த நிலையில் சட்டசபையில் 2 ஆண்டுகளுக்குள் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் 2024 ஆம் ஆண்டு அறிவித்திருந்தார். அதன்படி வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறநிலையத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அண்மையில்தான் திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட கோயில்களின் கும்பாபிஷேகம் நடைபெற்றிருந்தது. இந்த நிலையில் தற்போது மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. இதனால் மதுரையே கோலாகலமாகும் என்பதில் சந்தேகமே இல்லை.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications