மகா சிவராத்திரி.. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விடிய விடிய அபிஷேகம்.. பக்தர்கள் தரிசிக்க அனுமதி
மதுரை: மகா சிவராத்திரி விழா தினத்தன்று மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் விடிய விடிய அபிஷேகம் நடைபெறும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மார்ச் 8ஆம் தேதியன்று இரவு முழுவதும் கோவில் திறந்திருக்கும் என்றும் அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வழங்கலாம் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாசிவராத்திரி ஆண்டுதோறும் மாசி மாசத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். அம்மனுக்கு புரட்டாசி மாதத்தில் 9 நாட்கள் நவராத்திரி விழா என்றால் அப்பன் சிவனுக்கு மாசி மாதத்தில் மகாசிவராத்திரி விழா சிறப்பானது.

சிவராத்திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரி. பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை சிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும் என்கின்றனர் சித்தர்கள். பல சதுர்யுகங்கள் முடிந்து, பல கல்பங்கள் முடிந்து, இதில் வரும் இரவுகள் அனைத்திலும் அன்னை பராசக்தி ஈசனை பூஜை செய்திருக்கிறாள். தொடர்ந்து 12 சிவராத்திரி இரவுகளில் அண்ணாமலை கிரிவலம் சென்றால், நமது கர்ம வினைகள் அனைத்தும் கரைந்து காணாமல் போய்விடும் என்று சிவனடியார்கள் கூறியுள்ளனர்.
சிவராத்திரி நாளில் பல முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் இணைந்து கடைந்த போது பொங்கி வந்த ஆலகால விஷம் மண்ணுலக மக்களை பாதிக்கக் கூடாது என்று எண்ணிய சிவபெருமான், ஆலகால விஷத்தினைத் தனது கண்டத்தினுள் தாங்கி நீலகண்டனாக மாறி உலகத்தை அழிவில் இருந்து காத்தது இந்த சிவராத்திரி நாளில்தான்.
மகா சிவராத்திரியன்று கண்விழித்து சிவனை வணங்கினால் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு கரைந்து காணாமல் போய்விடும். அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மகத்தான செல்வ வளம் நம்மை வந்து சேரும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத சித்த ரகசியம் ஆகும். சிவ ஆலயங்களில் மகாசிவராத்திரி நாளில் நான்கு கால அபிஷேகம் விடிய விடிய நடைபெறும்.
உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மஹா சிவராத்திரி திருவிழா வருகிற மாா்ச் 8ஆம் தேதி இரவு 10 மணிக்கு தொடங்கி 9ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. அன்றைய தினம் அம்மன், சுவாமி மற்றும் உற்சவா் சன்னிதிகளில் விடிய, விடிய அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தா்கள் அபிஷேக ஆராதனைகளுக்காக பால், தயிா், இளநீா், பன்னீா், பழ வகைகள், தேன், மஞ்சள்பொடி, எண்ணெய், நெய் மற்றும் இதர அபிஷேகப் பொருள்களை மாா்ச் 8ஆம் தேதி மாலைக்குள் கோயில் உள்துறை அலுவலகத்தில் வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகா சிவராத்திரி விழாவில் கோவிலில் இரவு முழுவதும் சுவாமி தரிசனத்திற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என திருக்கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications