Mahayala Amavasai 2025: மகாளய அமாவாசை! தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம் எது? சூரிய ஓரையை விடாதீங்க!
சென்னை: மகாளய அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம் என்ன என்பதை பார்க்கலாம். தர்ப்பணத்திற்கு ராகு காலம், எமகண்டம் பார்க்க வேண்டுமா? என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். அத்துடனன் தர்ப்பணம் கொடுப்பது எத்தனை புண்ணிய காரியம் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.
மாதந்தோறும் அமாவாசை வந்தாலும் ஆண்டுதோறும் வரும் ஆடி மாத அமாவாசை, புரட்டாசி மாத மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய 3 முக்கியமானது. இந்த அமாவாசைக்கு முன்னதாக மகாளய பட்சம் என்ற ஒன்று 15 நாட்களுக்கு இருக்கும்.

இந்த 15 நாட்களும் நம் முன்னோர்களுக்கு விடுமுறை கொடுத்து எமதர்மர், பூலோகத்திற்கு வருவார்கள் என்பது ஐதீகம். அந்த மகாளய பட்சம் செப்டம்பர் 8 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதாவது அமாவாசையுடன் முடிகிறது.
மகாளய பட்சம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது என்பது பழமொழி. வசிஷ்டர், தசரதர், துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், ராமர், தர்மர் ஆகியோர் மகாளயம் செய்து பேறு பெற்றனர் என்பது வரலாறு.
நாம் இந்த உலகிற்கு வர முக்கிய காரணமே நமது முன்னோர்கள் என்பதை ஒரு நாளும் மறக்காதீர்கள். மகாளய அமாவாசை எந்த சாபத்தையும் நீக்கி, எம பயத்தை போக்கும் ஆற்றல் கொண்டது. எனவே தர்ப்பணம் மிகவும் முக்கியம். ஓடும் நீர் இருக்கும் இடத்தில்தான் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
இன்றைய தினம் மகாளய அமாவாசைக்கு திதி கொடுக்க காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை தர்ப்பணம் செய்யலாம். ராகு காலம், எமகண்ட நேரத்தில் திதி கொடுக்கலாமா வேண்டாமா என்பது ஒவ்வொரு புரோகிதருக்கும் மாறுபடுகிறது. எனவே அவரவர் வீடுகளில் வாடிக்கையாக யாரை வைத்து தர்ப்பணம் செய்கிறீர்களோ அவர்களிடம் கேட்டு தர்ப்பணம் கொடுங்கள்.
பெரும்பாலும் 7 மணிக்குள் தர்ப்பணம் கொடுத்து முடித்துவிடுங்கள். மகாளய அமாவாசைக்கு ராமேஸ்வரம், தனுஷ்கோடி, வேதாரண்யம், கோடியக்கரை, காவிரி ஆறு போன்ற புனித தலங்களில் தர்ப்பணம் கொடுத்தல் நல்லது என்கிறார்கள். எனினும் அங்கு செல்ல முடியாதவர்கள் நீர் நிலைகளிலோ அல்லது நம் வீடுகளிலோ தர்ப்பணம் கொடுக்கலாம்.
ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை 11 மணி முதல் 11.45 மணி வரை நல்ல நேரம். முடிந்தவர்கள் இந்த நேரத்தில் படையலிடலாம். இதை விட்டால் மதியம் 1.30 மணி முதல் 2 மணி வரை படையல் போடலாம். மேலும் 1.30 மணி முதல் 2 மணி வரை சூரிய ஹோரை என்பதால் அந்த நேரத்திலும் தர்ப்பணம் கொடுக்கலாம்.
இன்றைய தினம் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து படையலிட்டு பித்ருலோகத்திற்கு அனுப்ப வேண்டும். தர்ப்பணம் கொடுக்க முடியாவிட்டால் 10 பேருக்கு அன்னதானமாவது செய்யுங்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications