Mahalaya Amavasai Do's and Don'ts: மகாளய அமாவாசைக்கு என்னென்ன செய்யக் கூடாது! வாசலில் கோலமிடலாமா?
சென்னை: மகாளய அமாவாசையின் போது செய்யக் கூடாதவை என்னென்ன என்பதை பார்க்கலாம். ஒரு வேளை அப்படி செய்தால் முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாகக் கூடும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த சாபம் உங்கள் தலைமுறையை கடுமையாக பாதிக்கும்.
ஆவணி மாத பவுர்ணமிக்கு பிறகு வரும் பிரதமை நாள் தொடங்கி அடுத்து வரும் 15 நாட்களும் "மகாளய பட்சம்" என அழைக்கப்படுகிறது. இந்த மகாளய பட்ச காலத்தின் நிறைவாக வருவதே மகாளய அமாவாசையாகும். சூரியன் கன்னி ராசிக்கு செல்லும் புரட்டாசி மாதம், எமதர்மராஜன் நமது முன்னோர்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் அவர்களை நாம் வணங்கினால் மனமகிழ்ச்சியோடு ஆசீர்வாதம் செய்வார்கள்.

இந்த 15 நாட்களில் முன்னோர்கள், பித்ரு லோகத்தில் இருந்து தங்கள் குடும்பத்தினரை காண பூமிக்கு வருவதாக சொல்வதுண்டு. அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அமாவாசை இன்று (செப் 21) அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி அதிகாலையிலேயே பக்தர்கள் நீர் நிலைகளில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க கிளம்பிவிட்டனர். இன்று மதியம் வரை எப்போது வேண்டுமானாலும் தர்ப்பணம் கொடுக்கலாம். இதற்கு ராகு காலம், எமகண்டம், நல்ல நேரம் பார்க்கத் தேவையில்லை. அதே நேரம் படைக்கும் போது இந்த நேரத்தை பார்த்து படையலிட வேண்டும்.
தர்ப்பணம் கொடுத்துவிட்டு மதியம் படையல் போடலாம். பொதுவாக நாம் அறியாமல் செய்யும் தவறு நமது தலைமுறையையே பாதிக்கும் என்றால் அது மகாளய அமாவாசைக்கு நாம் செய்யும் செயல்கள்தான்.
அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்:
மது: பொதுவாக மது குடிப்பதே வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு. அதிலும் மகாளய பட்சம், அமாவாசைக்கு மது குடிப்பது, இறைச்சி சாப்பிடுவது முன்னோர்களின் கோபத்தை சம்பாதிப்பதாகும். எனவே இவற்றை தவிர்த்து விட்டு சைவ உணவை உட்கொள்ள வேண்டும். பெரும்பாலானோர் புரட்டாசி மாதம் முழுவதுமே இதை பின்பற்றுவர்.
மைசூர் பருப்பு: மகாளய பட்சத்தின் போது மைசூர் பருப்பை சாப்பிடக் கூடாது. இது செவ்வாய் கிரகத்துடன் நேரடியாக தொடர்புடையதால் இதை நாம் சாப்பிடக் கூடாது.
பூண்டு- வெங்காயம்: பூண்டு, வெங்காயம் ஆகிய இரண்டையும் மகாளய பட்சத்தின் போதும் அமாவாசை காலங்களிலும் தவிர்ப்பது நல்லது.
பருப்பு, உளுந்து கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை உண்ணக் கூடாது. இவை முன்னோர்களுக்கு படைக்கப்படுவதில்லை.
வீட்டு வாசலில் கோலம் போடக் கூடாது. நகம் வெட்டுவது, முடி வெட்டுவது போன்றவை செய்யக் கூடாது. எலுமிச்சம் பழத்தை நறுக்கி, நிலை வாசலில் வைத்திருந்தால் அதை நீக்கிவிட வேண்டும்.
அமாவாசை அன்று நிலை வாசலில் மஞ்சள், குங்குமம் இடக் கூடாது. முன்னோர்களை வழிபடும் நேரத்தில் மணி அடித்தல் கூடாது.
பித்ருக்களுக்கு எள்ளை கடனாக வாங்கி தர்ப்பணம் செய்யவே கூடாது. வாழைக்காய் , உளுந்து வடையை கண்டிப்பாக படைக்க வேண்டும். பூஜைக்கு பயன்படுத்தும் விளக்கை எடுத்து முன்னோர்களுக்கு ஏற்றவே கூடாது.
காகங்களுக்கு கிழக்கு பார்த்தவாறு சாதம் வைக்க வேண்டும். சுமங்கலி பெண்கள், தந்தை உள்ள மகன்கள், பெண்கள் கண்டிப்பாக தங்கள் பெற்றோருக்காக தர்ப்பணம் கொடுக்கக் கூடாது. அப்பா இருக்கும் மகன்கள் அமாவாசை இரவில் ஒரு பிடி சாதமாவது சாப்பிட வேண்டும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications