மஞ்சள் பால் அபிஷேகம். ஆடி மாதத்தில் மாரியம்மனுக்கு மஞ்சள் நீர் ஊற்றுவது இதுக்குதான்.. ஆன்மீகம் மகிமை
சென்னை: ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த ஆடி மாதம் தான், விவசாயிகளுக்கு அடிப்படையான நீர், நதிகளில் பெருக்கெடுத்து ஓடும்.. எனவே, ஆடி மாதம் விவசாயத்திற்கும் ஏற்ற மாதமாகும்.. எனவே, வருடம் முழுவதும் விவசாயம் செழித்து விளங்க, ஆடி மாதம் காவல் தெய்வங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.. குலதெய்வம் கோயில்களுடன் சேர்த்து, அம்மனையும் கட்டாயம் வழிபட வேண்டியிருக்கிறது.. இதற்காக அம்மனுக்கு ஆடி மாதம் கூழ் ஊற்றுதல், தீ மிதி திருவிழா போன்றவை நடத்தப்படுகின்றன.. இதில் மஞ்சள் பால் அபிஷேகத்தையும் சேர்த்து கொள்ளலாம். ஏன் தெரியுமா?
கோல்டன் மில்க் என்று சொல்லக்கூடியது மஞ்சள் பால்.. ஏனென்றால், மிகச்சிறந்த கிருமிநாசினியான மஞ்சளில் குர்குமின் என்ற பொருள் கலந்துள்ளது.. இந்த முக்கிய பொருள்தான், கிருமிநாசினியாக செயல்பட்டு , உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.. நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களிலிருந்தும் நம்மை தப்பிக்க வைக்கிறது..

கோல்டன் மில்க் சத்துக்கள்
எனவே கால்சியம் நிறைந்த பாலில், சிறிது மஞ்சளையும் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், அதன் சத்துக்கள் இரட்டிப்பாக கிடைக்கும்.. கால்சியம் தவிர, நியாசின், இரும்பு சத்து, துத்தநாகம், பொட்டாசியம், பீட்டா கரோட்டீன் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நன்மை தருகிறது..
அதிலும் சிறிது மிளகு தூள் சேர்த்து கொண்டால், சளி, தொண்டை கமறல், சைனஸ், அல்ஸைமர் நோய், சரும பிரச்சனைகள், ரத்த ஓட்ட பிரச்சனைகளை இந்த மஞ்சள் பால் தீர்க்கிறது.. அத்துடன் கேன்சர் செல்களையும் நெருங்க விடாமல் தடுக்கிறது.. எனவேதான் இதனை கோல்டன் மில்க் என்கிறார்கள்.
இந்த மஞ்சள் பால் ஆன்மீகத்திலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.. ஆன்மீகத்தில் தவிர்க்க முடியாத இடத்தில் மஞ்சள் நிலைத்திருக்கிறது.. மங்களகரமான பொருளாகவும் போற்றப்பட்டு வருகிறது.. அந்தவகையில், கஸ்தூரி மஞ்சள் வெற்றியை உண்டாக்கக்கூடியதாம்.
கரூர் மகா மாரியம்மனுக்கு இப்படி வழிபட்டு வரும்போது, வழக்கு, வியாபார சிக்கல் நீங்கிவிடுமாம்.. அதேபோல, திண்டுக்கல் கோட்டை மாரியம்மனை பிரார்த்தித்து உப்பையும், மஞ்சளையும் கொடி மரத்தில் சமர்ப்பித்தாலும், உங்களது வேண்டுதல் நிறைவேறும் என்பார்கள்..
மஞ்சள் பால் மகிமை
அந்தவகையில், மஞ்சள் பால் அபிஷேகத்தை பொறுத்தவரை, அது உண்மையில் பால் கிடையாது.. மஞ்சள் பொடி கலந்த தண்ணீருக்குதான், 'மஞ்சப்பால்' என்று பெயர்.. திருமணமாகாத பெண்கள், இந்த மஞ்சப்பால் அபிஷேகம் செய்தால், விரைவில் திருமணயோகம் உண்டாகுமாம்.
மாரியம்மன் கோயில்களில் மஞ்சள் நீர் அபிஷேகம் என்பது ஒரு பிரபலமான சடங்காகவே உள்ளது.. ஆடி மாதத்தில் அல்லது அம்மன் கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் இந்த மஞ்சள் நீர் அபிஷேகம் நடத்தப்படுகிறது.
மஞ்சள் நீர் அபிஷேகம்
மஞ்சள் நீர், அம்மனின் அருளால் நோய்களை நீக்கும் சக்தி கொண்டது என்று நம்பப்படுகிறது. எனவே, மஞ்சள் நீர் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும் போது, பக்தர்கள் இந்த நீரை தங்கள் மீதும் தெளித்துக்கொள்வார்கள். இதனால் நோய்கள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது நம்பிக்கையாகும்.
வழக்கமாக, மழை தெய்வமான மாரியம்மனுக்கு ஆடிச்செவ்வாய், வெள்ளியன்று கஞ்சி, கூழ் படைத்து வழிபடுவார்கள்.. அதேபோல, விரதமிருந்து பெண்கள் வேப்பிலை சேலை உடுத்தியபடி கோயிலை வலம் வந்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.. அதுபோல, அம்மனுக்கும், வாகனமான சிம்மத்திற்கும் மஞ்சப்பால் அபிஷேகம் செய்வது பெரும் பலனை பெற்றுத் தருமாம்.
-
வைகாசி விசாகம் 2026: முக்கியத்துவம், புராண கதை: வைகாசி விசாக தேதி மற்றும் பூஜைக்கான நேரம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications