திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல் 21: மாணிக்கவாசகரை திருத்தலத்திற்கு வரவழைத்த சிவபெருமான்!

Subscribe to Oneindia Tamil

திருப்பாவை - பாடல் 21

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

பாடல் பொருள்: பால் கரப்பதற்காக வைத்திருந்த பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக்களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனே! நீ எழுந்திரு!. வேதங்களால் போற்றப்படும் வலிமையானவளே! உலகிற்கே ஒளியை காட்டும் சுடரே! துயில் எழுவாயாக! உன்னை எதிர்த்தவர்கள் எல்லாம் வலிமையிழந்து உன் வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல நாங்களும் புகழ்ந்து பாட உன் திருவடியிலேயே காத்துக் கிடக்கிறோம்.

margazhi thiruppavai

விளக்கம்: மன்னர்கள் எல்லாம் உன் காலில் விழ காத்துக் கிடப்பது உன் மீதான பயத்தால்! ஆனால் நாங்கள் அப்படி இல்லை, நாங்கள் உன்னை அழைத்து நீ வர மறுத்தால் உன்னை என் அன்பென்னும் கயிறால் கட்டிப் போட்டு விடுவோம். அப்போது நீ தப்பவே முடியாது. இதுதான் பக்தியின் உச்சநிலையாகும்.

திருப்பள்ளியெழுச்சி பாடல் - 1

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவையின் 20 பாடல்கள் முடிவடைந்துவிட்டது. மார்கழி மாதத்தில் மீதமுள்ள 10 நாட்களுக்கு திருப்பள்ளியெழுச்சிதான்! பாட வேண்டும்.

போற்றியென் வாழ்முதலாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடையாய் எனையுடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

பாடல் பொருள்: சேற்றில் பூத்த செந்தாமரை மலர்களை கொண்ட குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் இருக்கும் சிவனே! என்னை ஆட்கொண்டவனே!உனது பூப்போன்ற திருவடிகளில் மலர்த் தூவி வழிபட வந்துள்ளேன். உன் அழகிய முகத்தி் புன்னகை பூத்தபடி எனக்கு அருள் வழங்குங்கள்.

விளக்கம்: சிவனை சரணடைந்தால் பேரின்பத்தை அடையலாம். மாணிக்கவாசர் பாண்டிய நாட்டின் அமைச்சராகவே இருந்தவர். அவர் அனுபவிக்காத யோகங்களா? ஆனால் குதிரை வாங்கும் சாக்கில் அவரையே தன் கோயிலுக்கு சிவன் வரவழைத்துவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+