திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 19: எப்படிப்பட்ட கணவர் வேண்டும் என்ற உரிமை பெண்களுக்கு இருந்ததாமே
திருப்பாவை - பாடல் 19
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.

பாடல் பொருள்: குத்து விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது, யானை தந்தங்களால் ஆன கட்டிலின் மேல் மிருதுவான பஞ்சினால் செய்யப்பட்ட மெத்தை விரிக்கப்பட்டுள்ளது. அதில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை தரித்த கண்ணனே! நீ எங்களுடன் பேசுவாயாக! மை பூசிய கண்களை உடைய நப்பின்னையே! நீ உன் கணவன் கண்ணனை தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லையே! காரணம் கண நேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்துவிட்டாய், நீ இப்படி செய்யலாமா
விளக்கம்: கண்ணனின் மார்பில் தலைவைத்து கிடக்கும் பாக்கியத்தை பெற்றவளே, அவன் வாயால் நன்றாயிருங்கள் என்ற ஆசிர்வாதம் கிடைத்தால் போதும்.
திருவெம்பாவை பாடல் - 19
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க
எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.
பாடல் பொருள்: உனக்கு திருமணம் செய்து கொடுக்கப்படும் என் மகள் உனக்கு மட்டுமே சொந்தமானவள் என்று எண்ணி தந்தை , தன் மகளை திருமணம் செய்து கொடுக்கிறார். அதனால்தான் எங்களை திருமணம் செய்து கொள்வோர் எப்படி இருக்க வேண்டும் என உன்னிடம் கேட்கும் உரிமையை கேட்கிறோம். எங்கள் கைகள் உனக்கு மட்டுமே பணி செய்வதற்கு அவர்களை அனுமதிப்பவர்களாய் இருத்தல் வேண்டும். நீ எங்களுக்கு அருள் வாயாக! சூரியன் எந்த திசையில் உதித்தால் எங்களுக்கு என்ன?
விளக்கம்: முற்காலத்தில் பெண்கள் தங்களுக்கு எப்படி கணவன் அமைய வேண்டும் என கேட்கும் உரிமை இருந்திருக்கிறது. நல்ல கணவன் அமைந்துவிட்டால் கிரகங்களின் மாற்றம் கூட எதுவும் செய்யாது என உறுதியாக சொல்கிறார்












Click it and Unblock the Notifications