மாசி மகம் திருவிழா..சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்க முடியுமா? வனத்துறை சொன்ன குட் நியூஸ்
மாசி வளர்பிறை பிரதோஷம், மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி.
விருதுநகர்: சதுரகிரி சுந்ரமகாலிங்கம் கோவிலில் மாசி மாத வளர்பிறை பிரதோஷம் நாளில் இருந்து மாசி மகம், பவுர்ணமி வரை வரை 5 நாட்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில் மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் பக்தர்கள் குளிக்க கூடாது. இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை என்றும் வனத்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில். மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆடி, தை அமாவாசை மகாளய அமாவாசை நாட்களில் மாநிலம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வருகை தருவார்கள். சிவபெருமானுக்கு உகந்த நாளாக கருதப்படும் மகா சிவராத்திரி அன்றும் திரளான பக்தர்கள் வருகை தருவதுண்டு.

சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்று பட்டு பல நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை. எனவேதான் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
சதுரகிரி என்பது கயிலாயத்தை விட புனிதமானது எனப் போற்றுகிறார் நாரதர். ஆடி அமாவாசை, சித்திரை மாத பௌர்ணமி தினம், மார்கழி திருவாதிரை நட்சத்திரத்திலும் இந்த சதுரகிரி ஈசனை தொழ வானில் இருந்து தேவர்கள் வருகிறார்கள் என்கிறார் அகஸ்தியர்.
இன்றும் சட்ட நாதமுனி, கோரக்க முனிவர் உள்ளிட்ட பதினெட்டு சித்தர்களும் தபசை கலைத்து, ஒவ்வோர் ஆடி அமாவாசையிலும் இங்குள்ள புனித ஆகாய கங்கை தீர்த்தம், கௌண்டின்ய தீர்த்தம், சந்திர தீர்த்தங்களில் உஷத் காலத்தில் நீராடி சந்தன மகாலிங்கத்தை வணங்கி மகிழ்கின்றனர் என்கிறது, அகஸ்தியர் நாடி.
இதனிடையே 7ஆம் தேதி மாசி மாத பவுர்ணமி மற்றும் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை 4ஆம் தேதி சனிக்கிழமை முதல் 8ஆம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம்.
10 வயது உட்பட்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 2 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது. இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது. மேற்கண்ட அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மலைப்பகுதிகளில் மழை பெய்தாலோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகம் இருந்தாலோ மலையேற தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக அமாவாசை, பௌர்ணமி நாட்களை சதுரகிரிக்கு பக்தர்களுக்கு 4 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படுவார்கள். ஆனால் இந்த முறை 5 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications