Masi Magam 2025: மாசி மகத்தன்று கும்பகோணத்திற்கு வரும் கங்கை, யமுனை, காவிரி! எப்படி தெரியுமா?
சென்னை: மாசி மகத்தன்று புனித நீராடல் முக்கியமானது. அன்றைய தினம் புனித நீர்நிலைகளில் குளித்தால் பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும். மாசி மகத்தின் போது என்னென்ன பூஜைகள் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
இதுகுறித்து ஆத்ம ஞான மையம் யூடியூப் சேனலில் ஆன்மீக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி கூறியிருப்பதாவது: மாசி மகத்தின் போது செய்ய வேண்டிய வழிபாடுகள் குறித்து பார்க்கலாம். மாசி மகத்தின் சிறப்புகளையும் பார்க்கலாம். இந்த நாளில் எந்தெந்த தெய்வங்களை எப்படி வணங்கலாம் என்பதை பார்க்கலாம்.

பொதுவாக நாம் ஆலயத்திற்கு சென்று இறைவனை வழிபாடு செய்யும் போது நமது உடலால் நம்மை தூய்மைப்படுத்திக் கொள்வதற்கும் நமது பாவங்களை நீக்கி புண்ணியங்களை எடுத்துக் கொண்டு நாம் இறைவழிபாடு செய்வதற்கும் புனித நீராடல் என்பதை பெரியோர்கள் நமக்கு அமைத்து கொடுத்திருக்கிறார்கள்.
பாவங்கள் நீங்கும்
நமது பாவங்களை எல்லாம் ஆற்றிலோ குளத்திலோ விட்டுவிட்டு இறைவனை வழிபாடு செய்கிறோம். ஆனால் நமது பாவங்களை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடிய நதிகள் மீண்டும் புனிதம் அடைவது எப்போது என்பது தெரியுமா?
9 நதிகள்
ஒருமுறை நவ நதிகள் என சொல்லக் கூடிய கங்கை, யமுனை, நர்மதா, சரஸ்வதி, காவிரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகிய 9 நதிகள் எல்லாம் பேசிக் கொண்டிருந்தனவாம். அதாவது எல்லா மனிதர்களும் வந்து நம்மிடத்தில் நீராடுகிறார்கள். இந்த பாவங்களை எல்லாம் நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதற்காகத்தான் இறைவன் நம்மை படைத்திருக்கிறான்.
புனிதப்படுத்துவது எப்படி
ஆனால் நம்மை நாம் புனிதப்படுத்திக் கொள்ள வேண்டுமே! எப்படி நாம் நம்மை புனிதப்படுத்திக் கொள்வது? சரி இதற்கான விடையை சிவபெருமானிடம் கேட்போம் என பேசிக் கொண்டு நேராக சிவனிடம் போனதாம். அதற்கு சிவன் சொல்கிறார், "உங்களை புனிதப்படுத்திக் கொள்வதற்கு ஒரு நாள் நான் கொடுக்கிறேன். அந்த நாளில் நீங்கள் உங்களை புனிதப்படுத்திக் கொள்ளலாம்" என சொல்லி அவர் கொடுத்த நாள் எது தெரியுமா?
மாசி மாதம் மகம்
மாசி மாதத்தில் மக நட்சத்திரத்தோடு பவுர்ணமி கூடுகிற அந்த நாளில் கும்பகோணத்தில் இருக்கும் மகாமக குளத்தில் நீங்கள் நீராடினால் அங்கே உங்களது பாவங்கள் நீங்கி நீங்களும் புனிதப்படுவீர்கள், எனவே இந்த நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என சொன்னாராம்.
பெரியபுராணம்
அப்படி நவநதிகளும் வந்து மகாமக குளத்தில் நீராடி தங்களை ஆண்டுதோறும் புனிதப்படுத்திக் கொள்ளக் கூடிய அற்புதமான திருநாள் தான் மாசி மகம். இந்த மாசி மகம் குறித்து பெரியபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கும்பகோணம் மகாமகம் குளம்
கும்பகோணம் மகாமக குளத்திற்குள்ளேயே பல தீர்த்தங்கள் அமைந்துள்ளன. அந்த தீர்த்தங்களுடன் இந்த நவ நதிகளும் கூடுகின்றன. அவை புனிதப்படுத்திக் கொண்டதும் நாமும் அந்த குளத்தில் நீராடும் போது, நவநதிகளில் நீராடிய புண்ணியமும் நமக்கு கிடைக்கும். அந்த நதிகள் எல்லாம் பெற்ற புண்ணியமும் உங்களுக்கு கிடைக்கும். எனவே மிக உயர்ந்த நீராடல் என்றால் அது இந்த மகாமகம்தான்.
காவிரியுடன் சங்கமமாகும் 8 நதிகள்
மேற்கண்ட 9 நதிகளும் காவிரியுடன் சங்கமமாகி, காவிரியும் அந்த மகாமக குளத்தில் சங்கமமாகி எல்லாருடைய பாவங்களையும் நீக்கி எல்லோரும் புனிதத்துவம் அடையக் கூடிய அற்புதமான நாள். எங்கோ இருக்கும் கங்கை, இங்கிருக்கும் காவிரியை தேடி வருகிறது. அந்த குளத்தைத் தேடி அனைத்து நதிகளும் வருகின்றன. எனவே நாமும் அந்த குளத்தை தேடி சென்று நீராடி அந்த பலன்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.
மாசி மகம் Vs மகா மகம்
மாசிமகம் வேறு, மகாமகம் வேறு. மாசி மகம் ஆண்டுதோறும் வரக் கூடியது. மகாமகம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மிக விசேஷமானது. மகாமக குளத்திற்கு சென்று குளிக்க வாய்ப்பிருப்போர், தவறாக அதை பயன்படுத்திக் கொண்டு மகா மக குளத்தில் நீராடி இறைவனை வழிபாடு செய்யுங்கள்.
மகாமகம் செல்ல முடியாவிட்டால்
மகாமக குளத்திற்கு செல்ல முடியாதவர்கள், மாசி மகத்தின் போது எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். இன்று எல்லா தெய்வங்களை வழிபடலாம். குழந்தை பேறுக்காக காத்திருப்போர், இந்த மாசிமகத்தன்று விரதமாக இருந்து முருகப் பெருமானை வழிபாடு செய்தால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். காலை முதல் விரதமிருந்து மாலையில் விரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்.
கணவன் மனைவி ஒற்றுமை
இந்த நாளில் அம்பாளை வணங்கினால் அவர்களது வீட்டில் இல்லற சண்டைகளே இருக்காது. கணவன்- மனைவி இடையே உறவை மேம்படுத்திக் கொள்வதற்கான நல்ல நாள் இது. இந்த நாளில் காலையிலோ அல்லது மாலையிலோ குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். அந்த குங்குமத்தை கணவர் கையால் இட்டுக் கொள்ளுங்கள். அந்த குங்குமத்தை பத்திரப்படுத்திக் கொண்டு அன்றாடம் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
சிவபெருமான்
அடுத்தது சிவபெருமான், நவநதிகளுக்கு மட்டுமில்லை, வருண பகவானுக்கும் வரம் கொடுத்த நாள் மாசி மகம். மகாமக குளம் மட்டுமில்லை. புனித நீர்நிலைகள் இருக்கும் இடங்களில் எல்லாம் நாம் நீராடினால் நமக்கு அந்த புண்ணியம் கிடைக்கும். இன்றைய தினம் முன்னோர்களுக்கு திதியும் கொடுக்கலாம். அமாவாசைக்கும் பெரியவர்களின் திதி நாளிலும் தர்ப்பணம் கொடுத்திருந்தாலும் இந்த மாசி மகத்தின் போது நீர் நிலைகளில் நீராடி சூரியபகவானை வழிபாடு செய்துவிட்டு, முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய தர்ப்பணத்தை செய்யலாம். இப்படி செய்தால் பித்ரு தோஷம் நீங்கும், ஏழேழு தலைமுறைகளில் பித்ரு கடன் செய்யும் போது சிறிய தவறுகளுக்கு பிராயசித்தம் தேடும் நாள் இது.
மாசிமகத்தன்று தெப்போற்சவம்
மாசி மகத்தன்று அனைத்து கோயில்களில் தெப்போற்சவம் நடைபெறும். மாசி மகத்தன்று சத்தியநாராயணா பூஜை செய்வது என்பது விசேஷமானது. தண்ணீரில் விளக்கேற்றி வழிபடுவது என்பது இந்த அற்புதமான மகம் நட்சத்திரத்திற்கு சிறப்பு. திருக்கோஷியூரில் இந்த நதியில் விளக்கேற்றுதல் காலை முதல் நடக்கும். உங்களால் திருக்கோஷியூர் செல்ல முடியாவிட்டால், அருகில் உள்ள நதிகளுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுங்கள்.
மாசிமகம் எப்போது
இந்த ஆண்டு மாசிமகம் எப்போது வருகிறது என்பதை பார்க்கலாம். மக நட்சத்திரம் 12 ஆம் தேதியும் பவுர்ணமி 13 ஆம் தேதியும் வருகிறது. எனவே எப்போது கொண்டாட வேண்டும் என்ற சந்தேகம் எழும். இன்றைய தினம் அதிகாலை 3.53 மணி முதல் 13 ஆம் தேதி அதிகாலை 5.09 மணி வரை இருக்கும். எனவே தெப்போற்சவம், புனிதநீராடல் எல்லாம் மகம் நட்சத்திரமான இன்றே கொண்டாடப்படும்.
சத்தியநாராயணா பூஜை
13 ஆம் தேதி பவுர்ணமி எப்போது ஆரம்பிக்கிறது என பார்த்தால் காலை 11.40 மணி முதல் அடுத்த நாள் 14ஆம் தேதி வரை பிற்பகல் 12.57 மணி வரை உள்ளது. சத்தியநாராயண பூஜை செய்ய பவுர்ணமி அவசியமானது. எனவே நாளை மாலை சத்திய நாராயணா பூஜை செய்யலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications