நாச்சியார்கோவில் கல் கருடரின் அதிசயம்! சிலையின் எடை கூடுவது எதனால்? விலகாத மர்மம்!
சென்னை: நாச்சியார்கோவிலில் உள்ள கல் கருடரை உள்ளே இருந்து தூக்கிக் கொண்டு வந்தால் 4 பேரும், வெளியே இருந்து கோயிலுக்குள் 128 பேரும் தூக்கி வரும் அற்புதம் நிகழ்கிறது. இது வருடா வருடம் நிகழும்.
இதுகுறித்து நானறிந்த ஆன்மீகம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நாச்சியார் கோவில் கல் கருடர் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த கோவிலில் உள்ள பெருமாள் ஸ்ரீனிவாச பெருமாள் என்றும் அம்பாள் மகாலட்சுமி தாயார் என்றும் காட்சி தருகிறார்.
கோவிலின் சிறப்பு
இந்த கோவிலில் மிக சிறப்பாக கருதப்படுவது கல் கருட சேவை. இது பழங்காலம் முதல் தோற்றுவிக்கபடும் சிறப்புகளுள் ஒன்றாகும் .
ஸ்தல வரலாறு
இந்த திருக்கோவில் செங்கண்ணன் என்னும் அரசனால் கட்டப்பட்டது. இந்த அரசர் சோழர் கால அரசர் ஆவர். அவர் இந்த திருகோவிலை எழுபத்து ஐந்து கிலோ மீட்டர் உயரத்தை தொடும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

கல் கருட சேவை சிறப்பு
இந்த திருத்தலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது கல் கருட சேவை. இந்த சேவை ஆனது மார்கழி மற்றும் பங்குனிகளில் மிகவும் சிறப்பாக இருக்கும். கல் கருடன் மொத்தம் நான்கு டன் எடையுடன் இருக்கும். நான்கு டன் எடையுள்ள கருடரை வருடாவருடம் தூக்கி சிறப்பிப்பது இந்த விழா ஆகும்.
இந்த கருடர் சிலையை சன்னதியில் இருந்து தூக்கி வரும் போது நான்கு பேர் தூக்குவர். விட்டு வெளியில் வரும் போது சுமார் நூற்று இருபது எட்டு பேர் தூக்குவர். பின் சன்னதிக்கு மீண்டும் செல்லும் போது அதே நான்கு பேர் தூக்கும் நிலைமையில் இருக்கும்.
கல் கருட சேவையின் போது ஒரு அற்புதம் நடைபெறுகின்றது. அதாவது கருடனின் கனம் (எடை) அதிகமாகிக்கொண்டே போவதுதான். சன்னதியிலிருந்து வெளியே வரும்போது கருடனை நான்கு பேரால் ஏழப்பண்ண முடியும் அதுவே பிரகாரத்தை சுற்றி வரும்போது எட்டு பேர் வேண்டும், அடுத்து பதினாறு பேர், பின்னர் வெளியே வரும் போது முப்பத்திரெண்டு பேர் வெளியே வந்தவுடன் அறுபத்து நான்கு என்று நான்கின் மடங்கில் அதிகமாகிகொண்டே போகும் அதிசயம் நடைபெறும், அதே பெருமாள் திரும்பி வரும் போது அதே விகிதத்தில் எடை குறைந்து கொண்டே வரும்.

இவ்வாறு ஏன் நடைபெறுகின்றது. ஒரு விளக்கம் பெருமாள் மேதாவி முனிவருக்கு கொடுத்த வரம், தாயார் அன்ன வாகனத்தில் எழுந்தருளுகின்றாள் அன்னமோ நளினமான பறவை, பெருமாளோ கருடனில் எழுந்தருளுகின்றார். கருடன் பலம் மிகுந்த அதே சமயம் வேகமாக செல்லக்கூடிய பறவை. எனவே கருடன் அன்னத்தின் பின்னே செல்ல வேண்டுமல்லாவா? எனவே கல் கருடனின் எடை கூடிக்கொண்டே செல்கின்றது. ஆகவே இப்போதும் தாயாருக்கு முதலிடம் .
இரண்டாவது விளக்கம். நாம் பெருமாளுடன் ஒன்றியிருக்கும் போது நம் வினைகளின் சுமை குறைவாக இருக்கும், அதுவே நாம் பெருமாளை விட்டு விலகி செல்லும் பொது அதுவே மிகப்பெரிய சுமையாகி விடுகின்றது என்பதை இது குறிப்பால் உணர்த்துகின்றது. அதாவது பூரண சரணாகதி ஒன்று தான் நாம் உய்ய ஒரே வழி என்பதைத்தான் இதுவும் உணர்த்துகின்றது.
அது போலவே பெருமாளை தாங்கி உலா வருவதால் கல் கருடன் முகத்தில் வியர்வை வரும் அதிசயத்தையும் காணலாம்.

கோவில் அமைப்பு
இந்த கோவிலில் முதலில் தும்பிக்கை ஆழ்வாரும், ஆஞ்சநேயர் சன்னதியும் , அம்பாள் சன்னதியும் உண்டு. இந்த கோவிலில் திருமால் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
நடை திறக்கும் நேரம்
இந்த திருக்கோவில் காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் எட்டு மணி வரையிலும் உண்டு.
அமைவிடம்
கும்பகோணத்தில் இருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கல் கருடர் கோவில். இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ கோவில் ஆகும். கும்பகோணத்தில் இருந்து நிறைய பேருந்துகள் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications