மணி பிளான்ட்.. கற்றாழை தரும் பாசிட்டிவ் எனர்ஜி.. வாஸ்து சொல்வதென்ன? இந்த செடியை வீட்டில் வைக்காதீங்க
சென்னை: எத்தனையோ செடிகள் அழகுக்காக வீட்டில் வைக்கப்பட்டாலும், செல்வம் பெருகி, பணம் தங்கியிருக்க வேண்டுமானால், இதற்கு வாஸ்து செடிகள் கை கொடுக்கின்றன.. அந்தவகையில், மணி பிளான்ட், கற்றாழை செடிகளை எங்கே வைக்கலாம்? இந்த செடிகளில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்ன? எந்த செடிகளை வீட்டில் வளர்க்கக்கூடாது?
மணி பிளான்ட்களை பொறுத்தவரை, சுத்தமான காற்றை தரக்கூடியவை.. வாஸ்துவில், மணி பிளாண்ட் மங்களகரமான செடியாக கருதப்படுவதால், இதை வீட்டில் வைத்து வளர்க்கும்போது, பணக்கஷ்டம் தீரும் என்பார்கள்.

அந்தவகையில், வீட்டிற்குள்ளும், வீட்டிற்கு வெளியிலும் மணிபிளான்ட் வைக்கலாம். கிச்சனிலும் வைக்கலாம்.. பூஜையில் வைத்தும் வளர்க்கலாம்... இந்த செடியை சுத்தமாக பராமரிப்பதுதான், வீட்டின் நிதி நிலைமையை தீர்மானிக்கும். நேர்மறை ஆற்றல் கிடைக்க வேண்டுமானால், தென்கிழக்கு திசையில், மணி பிளான்ட் செடியை வைத்து வளர்க்கலாம்.
வடகிழக்கு மூலை: ஆனால், எக்காரணம் கொண்டும், வடகிழக்கு மூலையில் இந்த செடியை நடக்கூடாது. செடியை தரையில் படாமல் நூல் அல்லது குச்சியின் உதவியுடன் மேல்நோக்கி ஏற்றி வைக்க வேண்டும். வெள்ளியன்று, இந்த செடியை வெட்டக்கூடாது, யாருக்கும் தானமாக, அன்பளிப்பாக தரக்கூடாது. செடி காய்ந்து விடக்கூடாது. சூரிய ஒளி நேரடியாகவும் படக்கூடாது. பழுத்த இலைகள், செடியில் இருந்தால் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.
கற்றாழை செடிகளுக்கு தீய சக்திகளை தடுக்கும் சக்தி உண்டு என்பார்கள்.. அதனால்தான் வீட்டு வாசலிலேயே இந்த கற்றாழைகள் வைக்கப்படுகின்றன. இந்த செடி இருக்கும் இடங்களில் லட்சுமி தேவியின் வாசம் இருப்பதாக சொல்வார்கள்.. ஆக்ஸிஜனை அதிகளவில் பரப்பக்கூடிய இந்த கற்றாழை, வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலைக் கொண்டு வரக்கூடியது.
கற்றாழை: தடைகளை நீக்கும் திறன் கொண்ட கற்றாழை செடியை வடமேற்கு திசையில் நடக்கூடாது.. அப்படி செய்தால், மோசமான பலன்கள் கிடைத்துவிடும். எப்போதுமே வீட்டின் கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் கற்றாழை செடியை நடலாம்.. முன்னேற்றம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு பெற வேண்டுமானால் மேற்கு திசையிலும் கற்றாழை செடியை நடலாம். இதில், தென்கிழக்கு மூலையில் கற்றாழை செடியை வைத்தால் வருமானம் அதிகரிக்கும். மேற்கு திசையில் வைத்தால் உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்..
வீடுகளில், சிலவகையான மரங்கள், செடிகளை வளர்ப்பது குடும்பத்திற்கு கெடுதல், சிக்கலை தரும் என்பார்கள்.. அந்தவகையில், ரோஜா தவிர வேறு எந்தவிதமான முட்செடிகளை வளர்க்கக்கூடாது.. அதேபோல, சிவப்பு நிற மலர்களைக் கொண்ட செடிகள், போன்சாய் மரங்களையும் வீட்டிற்கு உள்ளே வைக்கக் கூடாது.
நெகட்டிவ் எனர்ஜி: புளிய மரம் மற்றும் மருதாணி மரங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடாது. வேறு எந்தவகையான காய்ந்து போன செடிகளோ, பட்டுப்போன செடிகளோ, இறந்த செடிகளோ வீட்டில் இருக்கக்கூடாது. பருத்தி செடிகளையும் வளர்க்கக்கூடாது.. பனை மரம், கருவேல மரங்கள் உட்பட காய்ந்த மரங்கள் எதுவுமே வீட்டில் இருக்கக்ககூடாது. அதேபோல, வீட்டின் கிழக்கு அல்லது வட கிழக்கு திசையில் பெரிய மரங்களை வைப்பது நெகடிவ் எனர்ஜியை வீட்டில் அதிகரிக்க செய்யும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications