அதிகார நந்தி வாகனத்தில் உலா வந்த கபாலீஸ்வரர்.. மயிலாப்பூர் எங்கும் எதிரொலித்த கபாலி முழக்கம்
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனித் திருவிழாவின் மூன்றாம் நாளான அதிகார நந்தி வாகனத்தில் கபாலீஸ்வரர் மாட வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தார். நான்கு மாட வீதிகளிலும் கம்பீரமாக ஆடி அசைந்து அதிகார நந்தி வாகனத்தில் உலா வந்த கபாலீஸ்வரரை கூடியிருந்த பக்தர்கள் கபாலி.. கபாலி என்று முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
அதிகார நந்தி: அதிகார பதவியும் வேலையில் உயர் பதவியும் வேண்டுபவர்கள் சிவ ஆலயங்களில் நந்திபகவானிடம் வேண்டிக்கொண்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை. கயிலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக உள்ளமையினால் அதிகார நந்தி என்ற பெயர் வந்தது.அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பதாகும்.

நந்தி தேவர் வரலாறு: பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சிவாதர் சிவனை நினைத்து தவம் செய்தார். தவத்தால் மனம் குளிந்த சிவன் அவரது எண்ணம் நிறைவேற ஆசிர்வதித்தார். காலங்கள் கழிந்தது. ஒரு நாள் சிவதார் நிலத்தை உழும்போது தங்கபேழை ஒன்றை கண்டார். அதில் தங்க விகரகம் போன்ற காளைக்கன்று வடிவிலான குழந்தை ஒன்று இருந்தது. அந்த குழந்தைக்கு நந்தி என்று பெயர் வைக்குமாறு சிவதார் காதில் சிவபெருமான ஓதினார்.
நந்தி சிறு வயதிலேயே சாஸ்திரம், வேதங்களை கற்று 7 வயதிலேயே ஞான பண்டிதராக விளங்கினார். இவர் மீது பற்று கொண்ட நந்தி தேவர் என அழைக்குமாறு சிவன் அசீரியாக ஒலித்தார். நந்தி தேவருக்கு சுயஞ்சை என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். நந்திதேவரின் கால்கள், சமம், விசாரம், சந்தோஷம், சாதுசங்கமம் எனும் நான்கு விதமாக குணத்தை வெளிப்படுத்துகிறது. சிவன் இவர் மீது தீவிர பற்று கொண்டதால், அவருக்கு நிகரான பலம் பெற்றவராகவே நந்திதேவர் கருதப்படுகிறார்.
தூய்மையான வெண்மை நிறம் கொண்டவர் நந்திதேவர். இவர் அகம்படியர் (சைவம்) என்ற இனத்தை சேர்ந்தவர். அகம்படியர் என்ற சொல்லுக்கு காவல் என்ற பொருளும் உண்டு. அதனால் தான் சிவன் கோவிலில் நுழைவாயிலில் நந்தி தேவர் காவல் தெய்வமாக நிற்கிறார். இவரிடம் உத்தரவு பெற்று தான் சிவனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா: மயிலையே கயிலை என்று போற்றப்படும் பெருமைக்குரிய மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத திருவிழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தினசரியும் கபாலீஸ்வரர் மாட வீதிகளில் உலா வந்து அருள்பாலிக்கிறார். மூன்றாம் நாளான இன்றைய தினம் அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளினார் கபாலீஸ்வரர்.
திருமயிலை அதிகார நந்தி 100 வருட சிறப்பு வாய்ந்த நந்தி. வேலையில் பிரச்சனை என்றாலும் தகுதிகேற்ப அதிகாரம் இல்லை என்றாலும் உயர்பதவி முன்னேற்றம் கிடைக்கா விட்டாலும் திருமயிலை கபாலீஸ்வரர் அதிகார நந்தியை தரிசித்து பிரார்த்தனை செய்துக்கொள்ளலாம். அடுத்த ஆண்டு அதிகார நந்தியை பார்க்கும் முன் உங்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை.
அதிகார பதவி யாருக்கு கிடைக்கும்: இன்றைய உலகில் தலைமை பதவியை விரும்பாதவர்கள் இல்லை என்றே கூறலாம். ஒருவர் ஒரு தலைமைப் பதவியை அடைவதற்காகத் தன்னிடம் உள்ள அனைத்துச் சொத்துக்களையும், உறவுகளையும் இழக்கவும் தயாராகிறார். ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனுடன் சனி சேர்க்கை பெற்று இருந்தால் ராஜாங்க சம்மந்தமான வேலைகள், அரசு, அரசு சார்ந்த தொழில், அரசியல், தலைமை பதவி, கெளரவ பதவிகள் ஆகியவை அமைகின்றது. அரசியலுக்கும் அரசியல் பதவிகளுக்கும் காரக கிரகங்கள் சூரியன் சந்திரன் மற்றும் கால புருஷனுக்கு பத்தாம் வீட்டதிபதியான சனீஸ்வர பகவானும் ஆவர்.
கிரகங்கள் சாதகம்: ஒருவர் அரசியலில் உயர்பதவி மற்றும் தலைமை பதவிகள் வகிக்க வேண்டும் என்றால் முதலில் அவருடைய லக்னம் பலமாக இருக்க வேண்டும். அரசியல் பதவிகளுக்கென்றே சில ராசிகள் இருக்கின்றது. அவற்றில் ஒன்றை லக்னமாக கொண்டிருக்க வேண்டும். கால புருஷ ராசியில் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு சர ராசிகளில் ஒன்றை லக்னமாக கொண்டிருக்க வேண்டும். மேலும் இந்த ராசியை லக்னமாக கொண்டிருக்கும்போது இந்த நான்கு ராசிகளில் ஒன்றே பத்தாம் வீடாகவும் அமையும். எனவே இந்த நான்கு ராசிகளையும் அரசியல் தொடர்புள்ள ராசிகளாக கூறப்படுகிறது.
இவற்றோடு அரசியல் மற்றும் அரசாங்க பதவிகளுக்கு ராஜ கிரகம் எனப்படும் சூரியனின் வீடும் லக்னமாக இருப்பது அரசியல் பதவியை தரும். மேலும் அரசியலில் மக்கள் தொடர்பு என்பது முக்கியமானதாகும். ஜோதிடத்தில் பொது மக்களை குறிக்கும் கிரகம் சனைச்சர பகவான் ஆவார். அவர் ஜாதகத்தில் ஜென ரஞ்சக ராசிகள் மற்றும் சுக்கிரனின் வீடுகளில் இருப்பது சிறப்பு. மக்கள் தொடர்பை குறிக்கும் பாவம் ஏழாம் வீடு ஆகும். கால புருஷ ராசியின் ஏழாம் வீடு மற்றும் ஜெனன ஜாதக ஏழாம் வீடு இரண்டும் அசுப தொடர்புகள் இன்றி இருக்க வேண்டும்.
ஒருவரின் ஜாதிகத்தில் ராஜ கிரகங்களான சூரியன் சந்திரன் மற்றும் அரசாங்க அதிகார பதவிகளை தரும் செவ்வாய் ஆட்சி உச்ச பலம் பெற்று நிற்க வேண்டும். அனைத்து பதவிகளையும் தீர்மானிக்கும் சனிஸ்வரபகவான் ஆட்சி உச்சம் பெற்று சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். சந்திரனும் குருவும் பரிவர்த்தனை யோகம் அல்லது குரு சந்திர யோகம் அல்லது கஜகேசரி யோகம் போன்ற யோகங்களில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட யோகங்களை பெற்று விளங்க வேண்டும்.

ஜாதகத்தில் எல்லா கிரகங்களும் சாதகமாக இருந்தும் அரசியலில் சாதிக்க முடியவில்லையா? தலைமைப்பதவி கிடைக்கவில்லையே என்ற கவலை இருக்கிறதா? அதிகார நந்தி சேவையில் வலம் வரும் கற்பகாம்பாள் உடனுறை அருள்மிகு கபாலீஸ்வரரை தரிசனம் செய்தால் அற்புதமான யோகம் கூடி வரும்.
தேரோட்டம்: பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் 22ஆம் தேதி காலை 6 மணிக்கு தொடங்குகிறது. மார்ச் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு எம்பிரான் திருஞானசம்பந்தப் பெருமான் அபிஷேகம் நடைபெறும். இதனையடுத்து அங்கம் பூம்பாவை உயிர்ப்பித்த ஐதீக விழா நடைபெறும். அன்றைய தினம் மதியம் 3.30 மணிக்கு வெள்ளி விமானத்தில் இறைவர் 63 நாயன்மார்களோடு திருக்காட்சி அளிக்கிறார்.
24ஆம் தேதி மாலை பிச்சாடனார் விழா நடைபெறும். 25ஆம் தேதி மாலை 6மணி அன்னை கற்பகாம்பாள் மயில் வடிவில் புன்னை வனநாதரை பூசிக்கும் ஐதீகவிழாவும் திருக்கல்யாணமும நடைபெறும். பங்குனி பெருவிழாவை காணவும் கபாலீஸ்வரரை தரிசனம் செய்யவும் ஏராளமானோர் மயிலாப்பூருக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications