இன்று நாக பஞ்சமி! இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்தான்! எப்படி வழிபட வேண்டும்?
சென்னை: ஆவணி மாதத்தில் வரும் முக்கிய விரதங்களில் ஒன்றாக நாக பஞ்சமி இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாகங்களை வழிபடும் பழக்கம் உள்ளது. நாக பஞ்சமி என்றால் என்ன, குறிப்பிட்ட ராசியினருக்கான பரிகாரங்கள் என்ன என்பதையும் பார்க்கலாம்.
பாம்பு கிரகங்கள் என சொல்லப்படும் ராகு, கேது ஆகியவற்றால் தோஷங்கள் ஏற்பட்டு பல விதமான தடைகளும் ஏற்படுகின்றன. நாக பஞ்சமி நாள் அன்று விரதமிருந்து நாகத்தை தெய்வமாக வழிபட்டால் தோஷம் நீங்கி திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

அதாவது ஜாதகத்தில் நாக தோஷம் இருந்தால் நம்முடைய வீட்டில் எந்த சுப காரியமும் நடைபெறாது. நம்முடைய ஜாதகத்தில் ராகு கேதுவுக்கு இடையே கிரகங்கள் சிக்கியுள்ள போது பிறக்கும் குழந்தைகளுக்கு கால சர்ப்ப தோஷம் ஏற்படும். முன் ஜென்மத்தில் வாழ்ந்த போது பாம்பிற்கோ அல்லது பிற விலங்கினங்களுக்கோ நீங்கள் கேடு விளைவித்திருந்தால் உங்களுக்கோ அல்லது உங்களது சந்ததியினருக்கோ நாக சர்ப்ப தோஷம் ஏற்படும். இந்த தோஷங்களை நிவர்த்தி செய்துக் கொள்ளத்தான் நாகபஞ்சமி வழிபாடு முக்கியமானது.
பிரம்ம தேவரின் மகனான கஷ்யபருக்கு 4 மனைவிகள் இருந்தனர். அவர்களில் ஒருவரான கத்ரி என்பவருக்கும் பிரம்ம தேவருக்கும் பிறந்தவர்தான் நாகர். இவர் தாய் சொல்லை கேட்டு நடக்காததால் தீயில் கருகி இறக்கும் படி கத்ரி சாபம் கொடுக்கிறார். அந்த சாபத்தினால் பாம்புகளின் ராஜா ஜனமேஜயன் நடத்திய யாகத்தில் பல நாகங்கள் விழுந்து இறந்தன.
இதையடுத்து அஸ்தீகர் என்பவர் ஜனமேஜயனின் யாகத்தை தடுத்து நாகர்களுக்கு சாப நிவர்த்தி கொடுத்தார். அவ்வாறு நாகர்கள் சாப நிவர்த்தி பெற்ற நாள்தான் இந்த நாக பஞ்சமியாகும். நாக பஞ்சமி அன்று சிறிய வெள்ளி அல்லது செம்பில் செய்யப்பட்ட நாக தேவருக்கு வீட்டிலேயே பால் அபிஷேகம் செய்யலாம்.
அது போல் பூக்களால் அர்ச்சனை செய்யலாம். இந்த நன்னாளில் ரிஷபம், மேஷம். சிம்மம் ஆகிய 3 ராசிக்காரர்கள் யோகத்தை தரும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் நன்மை ஏற்படும். பண கஷ்டம் தீரும். தொழில் விருத்தியாகும். அலுவலகங்களில் பதவி உயர்வுகள் கிடைக்கும்.
அது போல் ரிஷப ராசிக்காரர்களுக்கு மங்களகரமான நாளாகும். ஆரோக்கியம் மேம்படும். புதிய தொழில் தொடங்க வாய்ப்புள்ளது, உங்கள் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பொங்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை மேலோங்கும்.
அது போல் மேஷ ராசிக்காரர்களுக்கும் இந்த நாளில் நன்மை கிடைக்கும். சிலர் சொத்து வாங்க வாய்ப்புகள் உள்ளது. பழைய வேலையிலிருந்து புதிய வேலைக்கு செல்வதற்கான வாய்ப்புகளும் ஏராளம், உங்கள் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்துவிடலாம் என்ற மன தைரியம் வரும். காதல் கைகூடும். கடன் பெற்றவர்கள் உங்களிடம் பணத்தை திருப்பி கொடுத்துவிடுவார்கள்.
மற்ற ராசிக்காரர்கள் என்னென்ன பரிகாரங்களை செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக நாக பஞ்சமி என்பதால் தோஷம் இருப்போர் வெள்ளியில் அல்லது செம்பினால் ஆன உலோக தகட்டை வைத்து பூஜை செய்தால் ராகு தோஷம் நிவர்த்தியாகும். ஏழைகளுக்கு காய்கறிகளையும் பழங்களையும் தானமாக கொடுக்கலாம்.












Click it and Unblock the Notifications