சென்னை முகப்பேர் மேற்கில் "கண் விழித்து பார்க்கும் அம்மன்"! வாவின் சிக்னலில் குவியும் பக்தர்கள்
சென்னை: சென்னை முகப்பேர் மேற்கை அடுத்த வாவின் எனும் பகுதியில் வீற்றிருக்கும் நாகாத்தம்மன் கோயிலில் உள்ள அம்மன், கண் விழித்து பார்ப்பது போல் இருப்பதால் இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இந்த கோயில் குறித்து சமூகவலைதளங்களிலும் வைரலாகியுள்ளது.
சென்னை முகப்பேர் மேற்கு பஸ் நிலையத்தில் இருந்து இடது பக்கம் திரும்பி நேராக சென்றால் வாவின், அம்பத்தூர் ஓடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வழியாகும்.

அங்கு வாவின் என்ற சந்திப்பு உள்ளது. அதில் ஒரு சிக்னல் இருக்கும். அந்த சிக்னலில் வலது பக்கம் திரும்பினால் திருமங்கலம் செல்லலாம். நேராக திரும்பினால் அம்பத்தூர், ஓடி, அயனம்பாக்கம், திருமுல்லைவாயில், ஆவடி செல்லும் வழியாகும்.
இந்த நிலையில் வாவின் சிக்னலில் இடதுபுறம் நாகாத்தம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு வெளியே ஒரு புற்றும், அங்கு ஒரு ஐந்து தலை பாம்பின் கீழ் ஒரு அம்மன் சிலையும் இருக்கும்.
இந்த சிலைக்கு மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு அலங்காரம் செய்திருப்பவர். அதற்கு மஞ்சள் நிற புடவையும் சாத்தப்பட்டிருக்கும். இந்த அம்மன் பார்ப்பதற்கு அழகாக இருப்பார். இவர் கண்களை பார்த்தால் கண் விழித்து நம்மை பார்ப்பது போல் தத்ரூபமாக இருக்கும்.
இவரை நேரில் வந்து வணங்கினால் தங்கள் குறைகள் தீரும் என தகவல்கள் பரவிய நிலையில் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அது போல் அங்கு சிக்னலுக்கு நிற்போரும் சுவாமியை வழிபடுகிறார்கள்.
இத்தனை நாட்களாக இந்த கோயிலில் பொங்கல் வைக்கும் பழக்கம் கொண்டவர்களே ஆடி மாதங்களில் பொங்கல் வைத்து வழிபடுவார்கள். அது போல் வெள்ளிக்கிழமைகளில் இங்கு பூஜை, புனஸ்காரங்கள் செய்யப்படும். இந்த அம்மன் குறித்த புகைப்படமும் வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications