திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்.. கருட சேவையை காண குவியும் பக்தர்கள்.. தேவஸ்தானம் எடுத்த முடிவு
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் விழாவின் முக்கிய நிகழ்வாக கருட வாகன சேவை இன்று நடைபெற உள்ளது. கருட வாகனத்தில் உலா வரும் மலையப்பசுவாமியை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இன்றைய தினம் இலவச சர்வ தரிசன டோக்கன் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நவராத்திரி விழாவின் 3ம் நாளான செவ்வாய்கிழமை இரவு முத்துப்பந்தல் வாகனத்தில் மலையப்பசுவாமி வீதியுலா வந்தார். 4ம் நாளான நேற்று காலை கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் ராஜமன்னார் அலங்காரத்தில் மாடவீதியில் பவனி வந்தார்.

கற்பக விருட்சம்:
கற்பக விருட்சம் என்பது சொர்க்கத்தில் தேவர்களுக்கு கேட்கும் வரங்களை தருவது. அதுபோன்று கலியுகத்தில் தன் பக்தர்களுக்கு கேட்கும் வரங்களை தரும் வகையில் இந்த கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம் வந்து அருள்பாலித்தார். பக்தர்களின் 'கோவிந்தா கோவிந்தா' பக்தி முழக்கத்திற்கு மத்தியில் 4 மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி வீதியுலாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் கோலாட்டம், பஜனைகள், கிருஷ்ணர், ராமர், மகாவிஷ்ணு என பல்வேறு அவதாரத்தை விளக்கும் வேடமணிந்து வீதியுலாவில் பங்கேற்றனர்.

மன்னாதி மன்னன்
நேற்று இரவு உலகத்தில் உள்ள மன்னர்களுக்கு எல்லாம் மன்னர் தானே என்பதை உணர்த்தும் விதமாக, ஏழுமலையான் கோயில் கோபுர வடிவிலான தங்க சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி தாயார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சர்வ பூபால வாகனத்தில் சுவாமியை தரிசனம் செய்வதால் வாழ்க்கையில் அகங்காரத்தை ஒழித்து நிரந்தரமான பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கருட சேவை: பிரம்மோற்சவ 5ம் நாளான இன்று காலை மோகினி அலங்காரத்தில் அருள்பாலித்தார் மலையப்பசுவாமி. ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி ஆகியவைகளை சூடி நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார் மலையப்பசுவாமி. முக்கிய வாகன சேவையான கருட சேவை இன்று மாலை 6.30 மணிக்கும் நடைபெறவுள்ளது. கருட சேவையை காண நேற்று காலை முதலே பக்தர்கள் திருப்பதிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

சர்வ தரிசன டோக்கன்கள் ரத்து: கருட சேவையை காண 3 லட்சம் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மலைப்பாதையில் இருசக்கர வாகனங்கள் இன்று 19ம் தேதி காலை முதல் 20ம் தேதி காலை வரை அனுமதி இல்லை என திருப்பதி எஸ்.பி கூறியுள்ளார். பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் இன்றைய தினம் முழுவதும் இலவச சர்வ தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications