குளியலறையில் இதை வைக்காதீங்க.. வீட்டில் வறுமை வந்துடுமாம்.. கழிவறை டைல்ஸ் இந்த கலர் இருக்கா பாருங்க
சென்னை: வாஸ்து சாஸ்திரப்படி குளியலறை சரியான திசையில் அமையாவிட்டால் எதிர்மறை ஆற்றல்கள் பெருகி, பிரச்சனைகளும், இன்னல்களும் வந்து கொண்டே இருக்கும் என்பார்கள்.. எனவே, குளியலறையில் எந்த பொருட்களை வைக்க வேண்டும் என்பதைவிட, எவற்றை வைக்கக்கூடாது என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும்.
நாம் குடியிருக்கும் வீட்டின் வாஸ்து அமைப்பு சிறிது பாதிப்படைந்தாலும், குடும்பத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும், நிதி நிலைமையும் பாதிக்கப்பட்டுவிடும்.. அதனால்தான், வீட்டின் ஒவ்வொரு அறைகளுக்கும் வாஸ்து சாஸ்திரத்தில் பல்வேறு விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. அந்தவகையில், குளியலறை குறித்து வாஸ்து சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பொருட்களை குளியலறையில் வைக்கக்கூடாது என்பார்கள்.. குறிப்பாக சிலர் அழகுக்காக போட்டோக்களை பாத்ரூம் சுவற்றில் ஒட்டி வைத்திருப்பார்கள்.. இதில், கிழிந்த போட்டோக்களை மட்டும் குளியலறையில் வைக்கக்கூடாது. வீட்டில் குளியலறையின் கதவுக்கு முன்னால் கண்ணாடி வைக்கக் கூடாது என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.
ஈரத்துணிகள்: அதேபோல, உடைந்த கண்ணாடி, உடைந்த பக்கெட்கள், உடைந்த குழாய்கள், மங்கலான கண்ணாடி, அழுக்கு துணிகள், ஈரமான துணிகள் என இப்படி எதையுமே குளியலறையில் வைத்திருக்க கூடாது. இவைகளை வைத்திருந்தால் குடும்பத்தில் வறுமை பீடித்து கொள்வதுடன், ஆரோக்கியமும் பாதிக்கப்படும் என்கிறார்கள்..
குளியலறையில் உள்ள பொருட்களின் நிறம் குறித்தும் வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது. அந்தவகையில், சுவர்கள் நீல நிறத்தை பூசுவது மிகவும் சிறப்பு.. டைல்ஸ் பதிவதாக இருந்தாலும்சரி, அதுவும் நீல நிறத்திலேயே பதிந்து கொள்ளலாம். பக்கெட்டுகள், மக்குகள், போன்றவையும் நீலநிறத்தில் பயன்படுத்தலாம்..
பச்சை கலர் : அல்லது பச்சை கலர் பக்கெட்டுகளை வைத்திருக்கலாம்.. சனி மற்றும் ராகுவின் தோஷங்களில் இருந்து பாதுகாக்க, இந்த பச்சை நிறம் உதவும்.. அத்துடன் பச்சை நிறம் மங்களகரமானது என்பதால், குளியலறையில் பச்சை டைல்ஸ்களையும் பொருத்தலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் கருப்பு கலர் பக்கெட்டுகளை பாத்ரூமுக்குள் வைக்கக்கூடாதாம்..
அதேபோல, பாத்ரூம் டைல்ஸ் எந்த அளவுக்கு சுத்தமாக உள்ளதோ அந்த அளவுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படாது.. எனவே, டைல்ஸ்களில் அழுக்கு சேராமல் பார்த்து கொள்ள வேண்டும்.. தினமும் குளியலறை கழுவிவிடுவதால், பணத்தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதுடன், வீட்டில் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும்.
கதவுகள்: பக்கெட்டுகளை காலியாக வைத்திருந்தாலும் பணத்தட்டுப்பாடு ஏற்படும். அதனால், வெற்று வாளிக்கு பதிலாக, அதில் நிரம்பியிருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். அதேபோல, எந்த திசை குளியலறையாக இருந்தாலும், அதன் கதவு மட்டும் வெளிப்புறமாக திறக்கும் வகையில் அமைக்கக்கூடாதாம்.. எனவே, வாஸ்து சாஸ்திரத்தில் கதவுகளும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications