நாளை கருட சேவை! திருமலை திருப்பதியில் இன்று இரவு 9 மணி முதல் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு!

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதி பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக இன்று இரவு 9 மணி முதல் வரும் 9ஆம் தேதி காலை வரை இரு மலைப்பாதைகளிலும் இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. இதற்கான உத்தரவை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா வரும் அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்வு 9 நாட்களுக்கு வரும் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

tirupati spirtuality garuda seva

இதில் முதல் நாளில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி பெரிய சேஷ வாகனம், சின்ன சேஷ வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்டவைகளில் 4 மாட வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வு நாளை நடைபெறும் கருட சேவைதான்.

இந்த கருடசேவைக்கான அனைத்து துறைகளின் ஏற்பாடு குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் தீவர ஆலோசனை நடத்தியுள்ளது. அதன் முடிவில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. திருப்பதியில் நடைபெறும் கருட சேவையைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என்பதால் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய பல்வேறு ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக கருட சேவையையொட்டி அக்டோபர் 7ஆம் தேதி, அதாவது இன்று இரவு 9 மணி முதல் 9ஆம் தேதி காலை 6 மணி வரை அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு மலைப் பாதைகளிலும் பைக் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கருட வாகன சேவை கருடனின் பக்தியை போற்றும் வைபவம் ஆகும். பெருமாளின் கம்பீர பவனியை குறிப்பதாலும் இது சிறப்புக்குரிய சேவையாக கருதப்படுகிறது. கருட சேவையின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் ஒன்று கூடி கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி இருக்கும் வாகனத்தை இழுத்து வருவார்கள். கருட சேவையில் புதுமணத் தம்பதிகள் கலந்து கொண்டு கருட பூஜை செய்தால் அவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கருடனை போல் வலிமையான நல்ல ஆளுமையுடன் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.

திருப்பதி ஏழுமலையானை புரட்டாசி மாதத்தில் இலவச தரிசனம் செய்ய விரும்புவோருக்கு திருப்பதி ரயில் நிலையம் எதிரில் உள்ள அலிபிரியில் பூதேவி காம்ப்ளக்ஸ், விஷ்ணு நிவாஸ் ஆகிய இடங்களில் தினமும் அதிகாலை 2 மணி முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.

டோக்கன் பெற்றதும் அதே நேரத்திலோ அல்லது அடுத்த நாளில் டோக்கனில் குறிப்பிட்ட நேரத்திலோ சுவாமியை தரிசனம் செய்யலாம். சந்திரகிரியில் இருந்து ஸ்ரீவாரி மெட்டு வழியாக படியேறி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் காலை 6 மணிக்கு 3 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+