ஒரு தேங்காய்..30 ஆயிரம் ரூபாயா? இவ்வளவு விஷேசம் இருக்கா?..ஆச்சரியப்பட்ட தேனி மக்கள்
தேனி: தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் பல விதமாக வேண்டுதல் வைப்பார்கள். தங்களின் வேண்டுதல் நிறைவேறிய உடன் இறைவனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். பிள்ளை வரத்திற்காகவும், குடும்ப நன்மைக்காகவும் கோவிலில் வைத்து பூஜை செய்த பழங்கள், தேங்காய்களை பல ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுப்பது தமிழ்நாட்டில் இன்றைக்கும் வழக்கத்தில் உள்ளது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் போடியில் உள்ள முருகன் கோவில் கலசத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட தேங்காய் ரூ. 30 ஆயிரத்திற்கு ஏலம் போனது.
பங்குனி உத்திரம் விழா முருகன் கோவிலில் சிறப்பாக கொண்டாப்படுகிறது. திருவெண்ணெய்நல்லூரை அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ள ரத்தினவேல் முருகன் கோவில் அந்த சுற்றுவட்டாரத்தில் மிகவும் பிரபலமான வழிபாட்டு தளமாக விளங்குகிறது. இந்த கோவிலின் சிறப்பம்சம் இங்கு, முருகன் சிலைக்கு பதில் கருவறையில் வேல் மட்டும் தான் இடம்பெற்று இருக்கிறது.

திருவிழா நாட்களில் ரத்தினவேல் முருகன் கோவில் வேலில் தினமும் எலுமிச்சை பழங்கள் சொருகப்பட்டு, அதன்பின் சிறப்பு தீபாராதனை மற்றும் வழிபாடு நடைபெறும். திருவிழா நாட்களில் பூஜைக்காக வேலில் சொருகப்படும் எலுமிச்சை பழங்கள், பங்குனி உத்திரத்தின் மறுநாள் நள்ளிரவு வேளையில் ஏலம் விடப்படும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குடும்ப பிரச்சினை உள்ளவர்கள் என பலத்தரப்பட்டோர் கலந்து கொண்டு எலுமிச்சை பழத்தை போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுப்பார்கள்.
எலுமிச்சை ஏலம்
கடந்த ஆண்டு ஒரு எலுமிச்சை பழம் அதிகபட்சமாக ரூ. 15 ஆயிரத்திற்கு ஏலம் விடப்பட்டது. மொத்தம் ஒன்பது எலுமிச்சை பழங்கள் ஏலம் விடப்பட்டது. மொத்தம் ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம் வரை எலுமிச்சை ஏலத்தின் மூலம் வசூல் ஆனதாக தகவல் வெளியானது. கடந்த ஆண்டு ஏலத்தில் எலுமிச்சை பழம் வாங்கி, பிரார்த்தனை நிறைவேறியவர்கள் இந்த ஆண்டு திருவிழாவில் பங்கேற்று தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

போடி முருகன் கோவில்
அதே போல தேனி மாவட்டம் போடியில் சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், தைப்பூசம் உள்ளிட்ட விழாக்கள் வெகுசிறப்பாக நடைபெறும். அதன்படி பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வள்ளி, முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேங்காய் ஏலம்
அதனை தொடர்ந்து திருமண வேள்வி கலசத்தில் வைக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்பட்டது. ரூ.3 ஆயிரத்தில் தொடங்கப்பட்ட இந்த ஏலம் படிப்படியாக உயர்த்தி பக்தர்களால் ஏலம் கேட்கப்பட்டது. இறுதியில் ரூ.30 ஆயிரத்திற்கு பக்தர் ஒருவர் அந்த தேங்காயை ஏலம் எடுத்தார். கலசத்தில் வைக்கப்பட்டு பூஜை செய்த தேங்காய் பல ஆண்டுகள் ஆனாலும் கெடாது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த தேங்காயை வீட்டில் வைத்து பூஜித்தால் திருமணத்தடை, தொழில் விருத்தி, சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் இந்த தேங்காய் ஏலம் எடுப்பதில் கடுமையான போட்டி ஏற்பட்டது.
வள்ளி திருமணம்
கடந்த கந்தசஷ்டி விழாவில் இதேபோல் ஏலம் விடப்பட்ட தேங்காயை பக்தர் ஒருவர் ரூ.65 ஆயிரத்திற்கு ஏலத்தில் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. கந்தசஷ்டி விழாவில் முருகன், தெய்வாணை திருமணம் பகலிலும், பங்குனி உத்திர திருவிழாவில் முருகன், வள்ளி திருமணம் இரவிலும் நடைபெறக்கூடியது. விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications