மேல்மலையனூர் அங்களாம்மன் கோவில் தேரோட்டம்..பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம்..மயங்கி விழுந்து ஒருவர் பலி
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
விழுப்புரம்: மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர். சாமி தரிசனம் செய்ய வந்த முதியவர் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவிலில் அமாவாசை நாட்களில் ஊஞ்சல் உற்சவ விழாவைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

இங்கு ஆண்டுதோறும் மாசி மாத பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 18 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து மறுநாளான 19 ஆம் தேதி மயானக்கொள்ளை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. மாசி பெருவிழாவினை முன்னிட்டு அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பூதம், சிம்மம், அன்னம், யானை போன்ற வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
விழாவின் 5ஆம் நாளான நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், மஞ்சள், குங்குமம், விபூதி, இளநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மதியம் 2 மணி அளவில் மேள, தாளம் முழங்க உற்சவ அம்மன் அக்னி குளத்திற்கு ஊர்வலமாக பல்லக்கில் கொண்டு வரப்பட்டார். அங்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிம்ம வாகனத்தில் அமர்த்தப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்ட அம்மன் மாலை 4 மணி அளவில் கோவிலுக்கு எதிரே அக்னி குண்டத்தின் முன்பாக எழுந்தருளினார். பின்னர் சாமிக்கும் பூக்குழிக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பிறகு பூ உருண்டையை உருட்டி விட்டதும், பூசாரிகள் முதலில் அக்னி குண்டத்தில் இறங்கினர். அவர்கள் இறங்கியதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையாக பூக்குழியில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அங்காளம்மன் கோவிலின் 7ஆம் நாள் விழாவான இன்று தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தினை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பின்னர் உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டு கோவிலின் வடக்கு வாயிலிருந்து பம்பை - உடுக்கை, மேளதாளங்கள் முழங்க தேருக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி முழக்கம் எழுப்பியபடியும் குலவையிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி வந்த போது, பக்தர்கள் சிலர் தங்களது வயலில் விளைந்த மணிலா, நெல், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளை தேரின் மீது சூறைவிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தேரோட்டத்தில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்தவர்களும், பிற மாநிலத்தவர்களும் கலந்து கொண்டனர். தேரோட்டத்தினை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதனிடையே இன்றைய தினம் சாமி கும்பிட வந்த 55 வயதான நபர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
25ஆம் தேதி சனிக்கிழமை காலையில் தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு குதிரை வாகனத்திலும், ஞாயிற்றுக்கிழமை காலையில் தங்க நிற மரப் பல்லக்கிலும் இரவு சத்தாபரணம் என்னும் புஷ்ப பல்லக்கில் சாமி வீதி உலாவும் வர உள்ளார். 27ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தீர்த்தவாரி மண்டகப்படியும், இரவு தெப்பல் உற்சவமும் நடைபெற உள்ளது.
வரும் மார்ச் 2ஆம் தேதி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மாலையில் சாமி வீதி உலா, இரவு கும்பப் படையல், காப்புகளைதல், கொடியிறக்க விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications