ஏழுமலையானுக்கும் முருகனுக்கும் தான் போட்டியே! பழனி கோவிலில் கொட்டி கிடந்த பொக்கிஷங்கள்! பக்தி பரவசம்
திண்டுக்கல்: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில் உண்டியல்கள் நிரம்பியதால் புதன்கிழமையான நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அந்த எண்ணிக்கையில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்கத்தின் மதிப்பு ரூ.3.40 கோடியை தாண்டியது. மேலும், தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றையும் பக்தர்கள் முருகனுக்கு கொடுத்துள்ளனர். இன்றும் எண்ணிக்கை நடக்கும் நிலையில் மொத்த மதிப்பு 10 கோடியை எட்டலாம் என சொல்லப்படுகிறது.
உலகப்புகழ் பெற்ற முருகன் கோயில்களில் முதன்மையான கோயில் பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் தான். இந்த கோயிலுக்கு தமிழகத்தை தாண்டி கேரளாவில் இருந்து ஏரளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கிறார்கள்.
பழனிக்கு என்றே ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து தரிசனம் செய்வார்கள். குறிப்பாக பொதுவாக கார்த்திகை, மார்கழி மாதங்களில் முருக பெருமானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

பழனி முருகன் கோவில்
அந்த காலக்கட்டத்தில நிற்க கூட இடம் இல்லாத அளவிற்கு பல நாட்கள் கூட்டம் அலைமோதும். அதேநேரம் மற்ற நேரங்களில் விஷேச நாட்களில் மற்றும் வெள்ளி, செவ்வாய்கிழமைகளில், ஞாயிறுகளில் பழனி முருகன் கோயிலுக்கு கூட்டம் அதிகமாகவே இருக்கும். இந்நிலையில், முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடந்தது.
பக்தர்களின் எண்ணிக்கை
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆடி மாதத்தை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பழனி முருகப் பெருமானை தரிசித்தனர். அவ்வாறு மலை கோயிலுக்கு வரும் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி, சேவல், தானியங்கள் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்துவார்கள்.
உண்டியல் காணிக்கை
தொடர்ந்து ஒரு மாதத்திற்கு ஒருமுறை அல்லது உண்டியல் நிரம்பியவுடன் அவற்றை திறந்து எண்ணுவது வழக்கம். இந்நிலையில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில் உண்டியல்கள் நிரம்பியது. இதை அடுத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம், வெள்ளி, பணம் ஆகியவை மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு தனித்தனியாக பிரிக்கப்பட்டது. பின்னர் பணம், நாணயம் ஆகியவற்றை என்னும் பணியில் கோவில் ஊழியர்கள், வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ மாணவிகள் ஈடுபட்டனர்.
பழனி கோவிலில் காணிக்கை
அதில் பக்தர்களின் காணிக்கை வரவு ரூபாய் 3 கோடியே 43 இலட்சத்து 23 ஆயிரத்து 207 கிடைத்தது. இது 33 நாள் காணிக்கை வரவாகும். உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அதன்படி தங்கம் 627 கிராமும், வெள்ளி 18 ஆயிரத்து 080 கிராமும் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 2,114ம் கிடைத்தன. இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இன்றும் எண்ணிக்கை நடக்கும் நிலையில் மொத்த மதிப்பு 10 கோடியை எட்டலாம் என சொல்லப்படுகிறது.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications