நம் வீட்டில் இருக்கும் இந்த ஒரு பொருள்..வறுமையை விரட்டும் வருமானத்தை பெருக்கும்..பவர்ஃபுல் பரிகாரம்
சென்னை: எல்லோரும் எல்லா காலத்ததிலும் வசதியாக வாழ மாட்டார்கள். ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை. வரும் வருமானத்தை வைத்து சிறப்போடு குடும்பம் நடத்துவது பெண்களின் கைகளில்தான் உள்ளது. இல்லத்தரசிகளின் தன்னம்பிக்கையும் தைரியமும் வீட்டின் வறுமையை விரட்டியடிக்கும். மகாலட்சுமியின் அருள் வீட்டிற்குள் நிறைய பெண்களின் செயல்படுபாடுகளே காரணமாக உள்ளது. என்ன பரிகாரம் செய்தால் பண வருமானம் அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.
சில குடும்பங்கள் எந்த முன்னேற்றத்தையும் அடையாமல் வறுமையில் வாடிக் கொண்டிருப்பார்கள். அந்த குடும்பத்திற்கு வரக்கூடிய கஷ்டத்திற்கு எந்த ஜென்மத்திலோ யாரோ விட்ட சாபம் தான் காரணமாக இருக்கும் கடன் தொல்லை இருக்கும். நோய் நொடிகளால் பணவிரயம் ஏற்படும். வருமானம் வந்தும் அதை அவர்களால் நல்லபடியாக அனுபவிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். அதற்கு நிச்சயமாக யாரோ என்றைக்கோ எதற்காகவோ விட்ட சாபமும் ஒரு காரணமாக இருக்கும்.

சாபத்திற்கு பரிகாரம்: சாபம் என்பது நாம் செய்யும் தவறுகளால் கிடைப்பது. எனவேதான் காசு பணத்தை சேர்கின்றோமோ இல்லையோ பாவத்தை நம்முடைய குழந்தைகளுக்கு சேர்த்து வைக்கக்கூடாது முடிந்தவரை புண்ணியத்தை சேர்த்து வைக்க பாருங்கள். சாபம் நீங்க சில பரிகாரங்களை செய்யலாம். இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருட்கள் கொட்டைப்பாக்கு, பச்சரிசி, குங்குமம், சிவப்பு நிற துணி. முதலில் உங்கள் வீட்டு பூஜை அறையில் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.
தலை எழுத்தை மாற்றும் பரிகாரம்: ஒரு தட்டினை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் அதில் சிவப்பு நிறத் துணியை விரித்துக் கொள்ளுங்கள் முதலில் பிரம்மதேவனை நினைத்து உங்கள் தலையெழுத்து மாற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு 3 மூன்று கொட்டை பாக்குகளை சிவப்பு நிறத் துணியில் வையுங்கள் அதன் பின்பு உங்களுடைய வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் சுபிட்சம் நிறைந்து இருக்க வேண்டும் என்று ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியை வைக்க வேண்டும் அந்த பச்சரிசியின் மேல் சிறிதளவு குங்குமத்தை தூவி இதை அப்படியே சேர்த்து ஒரு சிறிய முடிச்சாக கட்டி கொள்ளுங்கள்.
பரிகார முடிச்சு: சிவப்புத் துணியில் கொட்டைப்பாக்கு, பச்சரிசி, குங்குமம் 3 பொருட்களையும் வைத்து முடிச்சாக கட்டி கொள்ள வேண்டும். நம்முடைய தோஷங்கள் நீங்க நாம் வேண்டிக்கொண்டு இந்த முடிச்சை அடிக்கடி கை படாத இடமாக பார்த்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வருடம் இந்த முடிச்சு அப்படியே பூஜை அறையில் இருக்கட்டும்.

ஓடும் நீரில் பரிகாரம்: ஒரு வருடம் கழிந்த பின்பு இந்த முடிச்சை கொண்டுபோய் ஓடும் ஆற்றிலோ அல்லது சமுத்திரத்திலே போட்டு விடவேண்டும் கட்டாயம் ஓடும் தண்ணீரில் விட்டால் உங்களுடைய சாபம் கரைந்து ஓடிவிடும். தண்ணீரில் போடவே முடியாது என்ற சூழ்நிலை உங்களவர்களாக இருந்தால் மனிதர்கள் நடமாட்டமில்லாத ஒரு இடத்தில் கொண்டு போய் உங்கள் வீட்டில் இருந்து தூரமாக எடுத்துக்கொண்டு போய், ஏதாவது ஒரு இடத்தில் அந்த முடிச்சினை போட்டு விட்டு வரலாம்.
நல்லதே நடக்கும்: இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் படிப்படியாக குறைவதை அந்த ஒரு வருடத்தில் உங்களால் உணர முடியும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் இந்த பரிகாரத்தோடு சேர்த்து இயலாதவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்து கொண்டே வர வேண்டும் இந்த உதவி, அந்த உதவி தான் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது உங்களால் எந்த உதவியை அடுத்தவர்களுக்கு செய்யமுடியுமோ நன்மை தரக்கூடிய உதவியை செய்து கொண்டே வாருங்கள் நல்லதே நடக்கும்.
மசாலா பொருட்கள்: பணத்தை ஈர்க்கக்கூடிய வாசனை நிறைந்த பொருட்களின் பட்டியலில் பிரியாணி இலை, கிராம்பு, பட்டை மசாலா பொருட்களை பச்சை நிற டப்பாவில் போட்டு வையுங்கள். இது உங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் அதிர்ஷ்டத்தையும் பணத்தையும் கொண்டு வந்து சேர்க்கும். பச்சை நிற டப்பாவில் இந்த பொருட்களை போட முடியவில்லையா? ஒரு சிறிய பச்சை துணியில் ஒரு பட்டை, ஒரு லவங்கம், ஒரு பிரியாணி இலை, இந்த மூன்று பொருட்களையும் சிறிய முடிச்சாக போட்டு பணப்பெட்டியில் வைத்தாலும் நல்ல மாற்றங்கள் தெரியும்.
பெண்களின் மனம்:
வருமானம் அதிகமாக வரும்போதும் சரி, வருமானம் சிலசமயங்களில் ஏற்ற இறக்கத்தோடு வரும்போதும் சரி, உறுதியான மனதோடு தன்னம்பிக்கையோடு, குடும்பத்தை வழிநடத்திச் செல்லக்கூடிய பெண்ணின் மனது கல்லை போல உறுதியோடு இருந்தால், கஷ்ட காலத்தில் கூட வீட்டுப்பக்கம் எப்போதுமே வறுமை தலை வைத்துப்படுக்காது.
லட்சுமி கடாட்சம்: அந்தக் காலத்தில் ஆட்டுக்கல் அம்மிக்கல் இல்லாத அடுப்பங்கரையே இருக்காது. பெரும்பாலும் இன்று ஆட்டுக் கல் அம்மிக் கல்லுக்கு பதிலாக நாம் மிக்சி கிரைண்டரை பயன்படுத்தி வருகின்றோம். இருப்பினும் பரவாயில்லை. இப்போது சிறிய அளவில் கருங்கல்லினால் செய்யப்பட்ட உரல், அம்மிக்கல் கிடைக்கின்றது. அதை வாங்கி சமையலறையில் விழுது அரைப்பதற்கு என்று பயன்படுத்தி பாருங்கள். இது நம் வீட்டில் லட்சுமி கடாட்சத்தை கொண்டு வந்து சேர்க்கும் ஒரு விஷயமாக சொல்லப்பட்டுள்ளது.
அம்மி கல்லுக்கு வழிபாடு: இதனால் தான் திருமண சடங்கின் போது பெண்ணினுடைய வலது காலை தூக்கி, அம்மி கல்லின் மேல் வைத்து, இல்லற வாழ்க்கையில் எவ்வளவு பெரிய கஷ்டங்கள் வந்தாலும், பெண்ணினுடைய மனது எப்போதும் இந்தக் கல் போல் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக அம்மி மிதிக்கக் கூடிய சடங்கை நம்முடைய முன்னோர்கள் கொண்டு வந்தார்கள். தொடர்ந்து இந்த அம்மி கல்லை வீட்டில் இருக்கும் பெண்கள் வழிபாடு செய்து வரும்போது, அந்தப் பெண்ணினுடைய மனது அம்மிக்கல் போல உறுதியடையும்.

மகிமை நிறைந்த பரிகாரம்: வாரந்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவில் இருக்கும் அம்மிக்கல்லுக்கும், ஆட்டுக்கல்லும் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து பூ வைத்து அதன் மேல் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து, தொட்டு உங்களுடைய கண்களில் ஒற்றிக் கொள்ளுங்கள். எந்த ஒரு உலோகத்தை விடவும் மிக மிக வலிமையானது கல். மற்ற உலோகங்களை போல கல்லை வளைக்கவும் முடியாது.நெருப்பில் போட்டு உருக்கவும் முடியாது.
வறுமை வீட்டிற்குள் வராது: வீட்டில் வரும் கஷ்ட நஷ்டங்களை எதிர் கொண்டு வீட்டை எப்படி வழி நடத்திச் செல்லவேண்டும் என்ற பக்குவம் அவர்களுக்கு கிடைத்து விடும். வருமானம் அதிகமாக வரும்போதும் சரி, வருமானம் சிலசமயங்களில் ஏற்ற இறக்கத்தோடு வரும்போதும் சரி, உறுதியான மனதோடு தன்னம்பிக்கையோடு, குடும்பத்தை வழிநடத்திச் செல்லக்கூடிய பெண்ணின் மனது கல்லை போல உறுதியோடு இருந்தால், கஷ்ட காலத்தில் கூட வீட்டுப்பக்கம் எப்போதுமே வறுமை தலை வைத்துப்படுக்காது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications