பூஜை அறையில் இந்த பொருளை வைக்காதீங்க.. ஹேப்பி, பணம் பெருக இது போதுமே.. பூஜையறையில் இரும்பு இருக்கா?
சென்னை: வீட்டின் பூஜை அறைகள் மிகவும் முக்கியம் வாய்ந்தவை. அப்பார்ட்மென்ட் வீடாக இருந்தாலும் சரி, தனி வீடாக இருந்தாலும் சரி, பூஜை அறையை வாஸ்து சாஸ்திரப்படி அமைத்தால்தான், குடும்பத்தில் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் தழைக்கும்.. அதேசமயம், வாஸ்து சாஸ்திரத்தின்படி, பூஜை அறையில் வைக்கக்கூடாத சில பொருட்கள் உள்ளன. இதனால், குடும்பத்தில் மேலும் சிக்கல்களும், வறுமையும், இன்னலும் சேர்ந்து கொள்ளும் என்கிறார்கள். அவை என்னென்ன தெரியுமா?
எந்த அளவுக்கு இந்த பூஜை அறையை பராமரிக்கிறோமோ அந்த அளவுக்கு குடும்பத்தில் வளம் கிடைக்கும்.. வீட்டில் பூஜை அறைகளை, ஈசான்ய மூலை என்று சொல்லப்படும் வடகிழக்கு திசையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.. ஏனென்றால், இந்த 2 திசைகளிலும் பிராணவாயு அதிகமாக கிடைக்கும் என்பது அறிவியல்பூர்வமான உண்மை... ஈசான்ய மூலையில் பூஜை அறை இருந்தால், வீசும் காற்றில் சாம்பிராணி, ஊதுவத்தியின் மணம் வீடு முழுவதும் பரவி, தெய்வகடாட்சம் பிரகாசிக்கும்.

ஈசான்ய மூலையில் பூஜை அறை அமையாமல் போனால், வடமேற்கே பூஜை அறையை அமைக்கலாம். எனினும், எக்காரணம் கொண்டும், பூஜை அறைக்கு பக்கத்திலேயே குளியலறை, கழிவறை இருக்கக்கூடாது.
அதேபோல, பூஜை அறையில் கிழக்கு திசையில் கடவுள் படங்கள் இருக்க வேண்டும். பூஜை அறையின் வாசல் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பூஜையறையில் உள்ள கடவுள் படங்கள் மட்டும், வடக்கு திசை அல்லது கிழக்கு திசை நோக்கியே இருக்க வேண்டும்.. எந்த இஷ்ட தெய்வத்தையும் வைத்துக்கொள்ளலாம். குலதெய்வங்களின் படங்களையும் வைத்து கொள்ளலாம்.. ஆனால், முன்னோர்களின் படங்களை வைக்கக்கூடாது.
பூஜை செய்யும்போது, இரும்பு பொருளை மட்டும் தவிர்க்க வேண்டும். இரும்பு யமனுக்கு உரிய உலோகம் என்பதுடன், நேர்மறை சக்திகளை கிரகித்து கொள்ளும் சக்தி இரும்புக்கு கிடையாது.. எனவே, இரும்பு தவிர்த்து, வெள்ளி, தாமிரம், ஈயம் பூசிய பித்தளை, மண்ணால் ஆன பூஜை பாத்திரங்களை பயன்படுத்தலாம்.
பூஜைக்கு புதிதாக பறித்த மலர்களை பயன்படுத்த வேண்டும்.. வாடிய மலர்கள், காய்ந்த மலர்கள், ஓட்டை விழுந்த மலர்களை பயன்படுத்தக்கூடாது.
வீட்டில் மகிழ்ச்சி, செழுமை அதிகரிக்கவும், பாசிடிவ் எனர்ஜி பெருகவும், நிதி நிலைமை சீராகவும், எப்போதும் நிறைந்திருக்க சில பொருட்கள் கட்டாயம் வைத்திருப்பது அவசியம். அந்தவகையில், பூக்களை போட்டு வைக்கும் உலோகம் வீட்டில் காலியாக இருக்கக்கூடாது என்பார்கள்.. அந்த உலோகத்திலுள்ள பூக்களை காய விடவும் கூடாது. பூக்கள் வாடும் முன்னேயே புதிய பூக்களை வைத்துவிட வைக்க வேண்டும். ஆனால், பூவின் உலோகம் காலியாக மட்டும் இருக்கக்கூடாது.
பூஜையறையில் தண்ணீர் பாத்திரத்தை காலியாக வைக்கக்கூடாது. பூஜை முடிந்ததுமே, மீண்டும் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, அதில் சில துளசி இலைகளை போடடு வைக்க வேண்டும். வெற்று பாத்திரத்தை வைத்திருந்தால், அது குடும்பத்தில் எதிர்மறை தாக்கத்தையும், நிதி சிக்கலையும் ஏற்படுத்துமாம்.
பூஜையின்போது, சிறிய பாத்திரத்தில் தண்ணீர் இருக்க வேண்டும். மறுநாள் அந்த தண்ணீரை கூரையில் ஊற்றிவிடலாம். இதனால், துர்சக்திகள் நம்மை நெருங்காது. பஞ்ச பாத்திரத்திலும் தண்ணீர் ஊற்றி, துளசி இலை, அல்லது ஏதாவது ஒரு பூவை போட்டு வைக்கவேண்டும்..
மகாலட்சுமி வாசம் செய்யப்படுவதாக நம்பப்படும் பொருட்களில் ஒன்றான கண்ணாடியை வைத்து, பூஜை செய்யும்போது தீப, தூப ஆராதனை காட்ட வேண்டும். அகல் விளக்கு, ஊதுவத்திகள், பூஜை செய்யும் நபரின் வலது பக்கம் இருக்க வேண்டும்.
எப்போதுமே சிறிய கிண்ணத்தில் அரிசி, பருப்பு போன்ற பொருட்களை நிரம்ப போட்டு, கடவுள் படங்களுக்கு முன்பு வைத்துவிட வேண்டும். இதில், விநாயகரின் பாதத்திற்கு அருகில், அரிசி இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்... இது வீட்டிற்குள் வறுமையை நெருங்க செய்யாமல் இருக்கும்.
பூஜைக்குப் பயன்படுத்தும் பொருள்களை பூஜை அறையிலேயே வைத்துவிட வேண்டும். பூஜையில்லாத நேரத்தில், அறையை ஸ்கிரீன் போட்டு மறைத்துவிட வேண்டும். பூஜைக்கு தேவைப்படாத பொருட்கள் இருக்கக்கூடாது. காலை, மாலையில் பூஜையறை இருண்டு கிடக்கக்கூடாது. காலை, மாலை பூஜையறையில் நல்லெண்ணெய் கொண்டு விளக்கேற்ற வேண்டும்
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications