இந்த சத்தம் கேட்டாலே வீட்டில் பணம் கொட்டுமாம்.. பூஜையறையில் இனி இதை கவனியுங்க.. இதுதான் நல்ல அறிகுறி
சென்னை: நம்முடைய வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை கொண்டே, நல்ல சகுனம், கெட்ட சகுனம் என்று முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.. வீட்டில் கண் திருஷ்டி இருக்கிறதா? இல்லையா? என்பதையும் இதை வைத்தே அறிந்து கூறியிருக்கிறார்கள். அவைகளில் ஒருசிலவற்றை அறிகுறிகளை மட்டும் பார்ப்போம்.
குடும்பத்தில் தொடர்ந்து யாருக்காவது உடல்நலம் பாதிக்கப்படுவது கெட்ட அறிகுறியாக கருதப்படுகிறது.. பண நெருக்கடி, அளவுக்கு அதிகமான மன அழுத்தம், தீராத கடன் என ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டேயிருப்பதுகூட, நல்ல அறிகுறி கிடையாது..

பூஞ்சைகள்: வீட்டில் பூஞ்சைகள் வந்துவிட்டால், விரைவில் நெருக்கடியும், கஷ்டமும் வரப்போகிறது என்று அர்த்தமாம். இந்த பூஞ்சைகளால் எதிர்மறை சக்தியும் வீட்டிற்குள் அதிகமாகிவிடும் என்பதால், பூஞ்சைகளை பார்த்ததுமே வீட்டை சுத்தம் செய்துவிடவேண்டும்.
வீட்டை சுற்றிலும் நாய்கள் அழுதுகொண்டே இருந்தால், குடும்பத்தில் ஏதோ கெட்டது நடக்க போகிறது என்று அர்த்தமாம்.. வீட்டை சுற்றி வெளவ்வால் பறந்தால் ஏதோ பெரிய பிரச்சனை விரைவில் வரப்போகிறது என்று அர்த்தமாம்.. அதிகாலை 3 மணிக்கு அடிக்கடி முழிப்பு வந்தால், எதிர்மறை ஆற்றலால் நீங்கள் சூழப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தமாம்..
மணி பிளான்ட்கள்: வீட்டிலுள்ள மணி பிளான்ட்கள், துளசி செடியும் வாடக்கூடாது.. இந்த செடிகளின் இலை வாடினாலே, வறுமை சூழப்போகிறது என்று அர்த்தமாம்.. வீட்டில் தங்க நகைகளும், பணமும், தொலையக்கூடாது. அப்படி தொலைவது பொருளாதார நெருக்கடிக்கு ஆளாக்கிவிடும்.
வீட்டிலுள்ள கண்ணாடி உடைவது, நிதி நிலைமையை மோசமாக்கிவிடுவதுடன், குடும்பத்தில் யாருக்கோ பெரும் ஆபத்து வர போகிறது என்று அர்த்தமாம்.. எனவே, இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால், தவறாமல் வீட்டில் பூஜைகள் செய்ய வேண்டும் என்று வேதங்கள் கூறுகின்றன. வீட்டில் தினமும் பூஜை செய்வதால் வீட்டில் லக்ஷ்மி தேவி வாசம் செய்வாள் என்றும், வீட்டையும், பூஜையறையும் சுத்தமாக வைத்தால் லட்சுமி குடி இருப்பாள் என்றும் சாஸ்திரங்கள் சொல்கின்றன..
தெய்வ சக்தி: அதேபோல, குடும்பத்தில் நிலவும் நல்ல அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? தெய்வசக்தி உள்ள வீடுகளில் பல்லிச்சத்தம் கேட்டுக் கொண்டே இருக்குமாம்.. பல்லிகள் சத்தம்போடுவது, தெய்வங்கள் நம்மை ஆசீர்வதிப்பதாக அர்த்தம். குறிப்பாக, நிலைவாசலில், பூஜையறையில் இந்த சத்தம் கேட்கும்.
அதேபோல, பூஜைக்கு பயன்படுத்திய பொருட்கள் அழுகிப்போகாமல் இருந்தாலோ அல்லது வீட்டில் சம்பந்தமேயில்லாமல் பூஜை பொருட்களின் வாசனை வந்தாலோ அல்லது சாமி படங்களுக்கு வைக்கும் மஞ்சள்,குங்குமம் ஒரு வாரம் ஆனாலும் பளிச்சென தென்பட்டாலோ வீட்டில் தெய்வ சக்தி இருப்பதாக அறிந்து கொள்ளலாம். பூஜையறையில் வெள்ளி நிறத்தில் அல்லது வெண்ணிற படலத்தில் சுடர் இருந்தாலும் தெய்வ சூழல் நிலவுவதாக அர்த்தம்.
பூஜை பொருட்கள்: நம்முடைய வீட்டில் தெய்வ சக்தி உள்ளதா என்பதை நாம் எளிதாக அறிந்து கொள்ள முடியும். இதற்கு வெள்ளிக்கிழமையன்று, வீட்டிற்கு அருகிலுள்ள அம்மன் கோயிலுக்கு சென்று, ஒரு எலுமிச்சம் பழத்தை அம்மனின் பாதத்தில் வைத்துவிட்டு, பிறகு அந்த பழத்தை வீட்டு பூஜை அறையில் வைத்து விட வேண்டும். எலுமிச்சம்பழம் காய்ந்து விட்டால் வீட்டில் தெய்வ நடமாட்டம் இருக்கிறது என்று அர்த்தம். அழுகி விட்டால் எதிர்மறை ஆற்றல் இருப்பதாக உணர்ந்து கொள்ளலாம்.
அதேபோல, நாம் வெளியில் கிளம்பி செல்லும்போது, ஆலய மணி ஒலித்தாலோ, போனில் மணி ஒலித்தாலோ , போகிற காரியம் சுபம் தருமாம்.. பயணம் கிளம்பும்போது, சுமங்கலிப்பெண் வருவது, பால்காரர் வருவது, அல்லது யாராவது பால்கொண்டு வருவது இவையெல்லாம் நல்ல சகுனங்களாகும்.. மலர்கள், விசிறி, பால், பழங்கள், மஞ்சள், குடை, வளையல்கள், பசு, மான், கிளி, முகம் பார்க்கும் கண்ணாடி, தயிர், மோர், யானை, மயில் போன்றவை எதிரில் வருவதும் நல்ல அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது..












Click it and Unblock the Notifications