புரட்டாசி சனிக்கிழமை.. திருப்பதியில் இலவச டோக்கன்கள் 6 நாட்களுக்கு ரத்து.. பக்தர்கள் செக் பண்ணுங்க
திருப்பதி: புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலை திருப்பதியில் குவிந்து வருவதால் பல மணி நேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இன்று முதல் மூன்று நாட்களுக்கும். அக்டோபர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் ஸ்லாட்டட் தரிசன டோக்கன் வழங்கப்பட மாட்டாது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது
திருமலையில் அருள்பாலிக்கும் கலியுக தெய்வமான ஏழுமலையானை தரிசனம் செய்தால் வாழ்க்கையில் திருப்பம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். புரட்டாசி மாதத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகமாகவே உள்ளது. கடந்த வாரம் புரட்டாசி சனிக்கிழமையையொட்டியும் பிரம்மோற்சவம் நடைபெற்றதையடுத்தும் ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். 42 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

நேற்றைய தினம் அக்டோபர் 5ஆம் தேதி ஏழுமலையானை 68558 பேர் தரிசனம் செய்துள்ளனர். ரூ.4.13 கோடி உண்டியலில் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்வது விசேஷம் என்பதால் பக்தர்கள் அதிகமான எண்ணிக்கையில் திருமலையில் குவிவார்கள். எனவே அக்டோபர் 6, 7, 8 மற்றும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் ஸ்லாட்டட் தரிசன டோக்கன் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளது தேவஸ்தானம். எனவே தரிசன டிக்கெட்கள் இல்லாதவர்கள் தர்ம தரிசனத்தில்தான் செல்ல வேண்டும். எனவே காத்திருக்கும் நேரமும் அதிகமாகலாம் என்பதால் பக்தர்கள் பயணத்தை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி பிரம்மோற்சவம் 15ஆம் தேதி தொடங்குகிறது. அக்டோபர் 23 ம் தேதி வரை நடைபெறும் இந்த பிரம்மோற்சவத்தை தரிசனம் செய்ய மேலும் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். எனவே இந்த நாள்களிலும் காத்திருப்பு நேரம் அதிகரிக்கும்.
இந்த மாதம் அக்டோபர் 28ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. இதையொட்டி அக்டோபர் 28ஆம் தேதி இரவு 7.05 முதல் 29 அதிகாலை 3.15 வரை கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். எனவே அந்த நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாது என்பதால் அந்த நாளிலும் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.
எனவே அக்டோபர் மாதத்தில் தரிசன டிக்கெட் இல்லாமல் திருப்பதி செல்ல வேண்டும் என்று திட்டமிட்டால் கூடுமானவரை வார இறுதி நாள்களைத் தவிர்த்துவிடுங்கள் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் அக்டோபர் 5ஆம் தேதி ஏழுமலையானை 68558 பேர் தரிசனம் செய்துள்ளனர். ரூ.4.13 கோடி உண்டியலில் காணிக்கை செலுத்தியுள்ளனர்.12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். செப்டம்பர் மாதத்தில் ரூ.111 கோடி ரூபாயை பக்தர்கள் ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications