புரட்டாசி பௌர்ணமி.. எத்தனை ஸ்பெஷாலிட்டி பாருங்க.. புரட்டாசி பவுர்ணமியில் இதை செய்தால் பணம் கொட்டும்
சென்னை: புரட்டாசி பௌர்ணமியின் சிறப்புகளும், முக்கியத்துவமும், அவசியமும் என்னென்ன தெரியுமா? இன்றைய சிறப்பான தினத்தில், சில பொருட்களை வீட்டுக்கு வாங்குவது விசேஷமாகவும் கருதப்படுகிறது.. அதெல்லாம் என்ன தெரியுமா? சுருக்கமாக பார்ப்போம்.
பௌர்ணமி என்றாலே சிறப்புதான்.. அதிலும், ஒவ்வொரு தமிழ் மாதத்தில் வருகிற பெளர்ணமியும் சிறப்புக்குரியதுதான்..அந்தவகையில், தற்போது புரட்டாசி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி உதித்துள்ளது..

சிறப்புக்கள்: இந்த பெளர்ணமி தினத்தன்று விரதமிருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.. இந்த நாளில் பக்தர்கள் விரதமிருந்து, சிவன் கோயிலுக்கு சென்று நெய்விளக்கேற்றி வழிபடுவார்கள்.. சிவன் கோவிலில் வில்வ அர்ச்சனை செய்து, இப்படி நெய் விளக்கேற்றினால், உங்களது முற்பிறவி பாவங்கள் கூட மன்னிக்கப்பட்டுவிடுமாம். அத்துடன், தற்போதைய பிறவியில் உங்களுக்கான அனைத்து செல்வங்களும் கிடைக்க செய்துவிடும்.
அந்த அளவுக்கு பௌர்ணமி தின விரதம் சிறப்புக்கள் நிறைந்தது. கோயிலுக்கு செல்ல முடியாவிட்டால், வீட்டிலேயே நெய் விளக்கேற்றி வழிபடலாம்.. அதுமட்டுமல்ல, இன்றைய தினத்தில் அம்பிகை பிரகாசமாக மின்னுவாள்.. எனவே, இந்நாளில் விரதமிருந்து அம்பிகையை வழிபட்டால் உங்கள் துன்பங்கள் அனைத்தும் விட்டு விலகிவிடும்.. குடும்பத்தில் லட்சுமியின் அனுக்கிரகம் கிட்டும் என்பார்கள்.
குலதெய்வ வழிபாடு: அதேபோல, பௌர்ணமி தினத்தன்று லட்சுமி தேவியை வழிபடுவதும், பூஜை செய்வது மிகவும் சிறப்புக்குரியது.. பௌர்ணமி நாளில் வீட்டிலும், குலதெய்வ கோயிலிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வதால் சிறந்த பலன்களை இந்நாளில் பெற முடியும்.
இன்றைய தினம், சில பொருட்களை வாங்குவதன் மூலம் வீட்டில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் என்பது ஐதீகமாகும்.. அந்தவகையில், பூஜைக்கு தேவையான கடவுள் படங்கள், சிலைகள், ஜப மாலைகள், புனித நூல்கள் போன்றவற்றை வாங்கலாம்.. சமையலுக்கு தேவையான புதிய பாத்திரங்கள் மற்றும் வெள்ளி, தாமிரம் என பாத்திரங்களையும், வெள்ளி அல்லது தங்க நாணயங்களை வாங்குவதும் சிறப்புதான்.
நேர்மறை ஆற்றல்: இதுபோன்ற மங்கள பொருட்களை இன்றைய தினம் வீட்டில் வாங்கி வைப்பதால், நேர்மறை ஆற்றல்களை பிரதிபலிப்பதாகவும் அமையும்.. இது மேலும் நல்ல புதிய வாய்ப்புக்களை ஈர்க்கும். நேர்மறை ஆற்றல்கள், நம்பிக்கைகளை அதிகரிக்க செய்யும்.
வருடத்தில் ஒருமுறை வரும் புரட்டாசி பௌர்ணமி தினத்தில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றி நைவேத்தியம் படைத்து குங்குமம் அல்லது மஞ்சள் கொண்டு தெய்வ மந்திரங்களை 108 முறை கூறி அர்ச்சித்து வழிபாடு செய்வதன் மூலம் மாங்கல்ய பலம் கிடைக்கும் என்றும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாகும். இதனால், தனலாபம் பெருகும் , குழந்தைகள் கல்வியில் வளர்ச்சி அடைவார்கள் என்பதால், இந்த வழிபாடு முக்கியத்துவம் நிறைந்ததாகும்.












Click it and Unblock the Notifications