ராகு கேது தோஷம் நீக்கும் ஸ்ரீராமானுஜர்..மாங்கல்ய தோஷம் நீங்க மகானை வழிபடுங்கள்
சென்னை: ஆதிசேஷனின் அம்சமான ஸ்ரீராமானுஜரை வணங்கினால் ராகுவினால் ஏற்படும் மாங்கல்ய தோஷம், புத்தர பாக்கியமின்மை மற்றும் கேதுவினால் ஏற்படும் வாதக்கோளாறுகள் போன்ற காலசர்ப்ப தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.
ஸ்ரீராமானுஜர் திருப்பாற்கடலில் ஸ்ரீமந்நாராயணனின் படுக்கையாக உள்ள ஆதிசேஷன், ராமாவதாரத்தில் ராமரின் தம்பி லஷ்மணனாகவும், கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணருக்கு அண்ணன் பலராமராகவும் அவதரித்தார் என்கின்றன புராணங்கள். அந்த ஆதிசேஷனே கலியுகத்தில் ஸ்ரீராமானுஜராக ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார் என்பது நம்பிக்கை.

மகான் ஸ்ரீராமானுஜர் சித்திரை மாத திருவாதிரைதான் அவர் அவதரித்த புண்ய தினம். அனைத்து பெருமாள் கோயில்களிலும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அவர் அவதரித்த ஸ்ரீபெரும்புதூர்தலத்தில் அவதார விழா பிரம்மோற்சவ விழாவாக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அவரது அவதார தலத்தை பற்றி நாம் அறிந்து கொள்வோம்.
ஸ்ரீ பெரும்புதூரில் கம்பீரமாக காட்சியளிக்கிறது ஆதிகேசவ பெருமாள் ஆலயம். ஐந்து நிலை ராஜ கோபுரத்தில் நுழைந்தவுடன் பெரிய பலி பீடத்தையும், துவஜஸ்தம்பத்தையும் கருடன் சன்னதி விமானத்தையும் காணலாம். துவஜஸ்தம்பத்தின் அருகே நின்று பெருமாளை நினைத்து வணங்கிவிட்டு படிகளில் ஏறி வடக்கு நோக்கி திரும்பினால் ராமானுஜரின் சன்னதி அமைந்துள்ளது. சிற்பங்கள் நிறைந்த முன் மண்டபத்தில் நின்று அந்த அற்புதமான அமைதியான திருமேனியை தரிசிக்கலாம். இரு கரம் கூப்பி நாம் வணங்கினால் நம்மையும் வணங்குகிறார் ஸ்ரீராமானுஜர்.
யதிராஜரை தரிசித்து விட்டு வெளியே வந்தால் கிழக்கு நோக்கிய முக மண்டலத்துடன், ஆதிகேசவப் பெருமாளை தரிசனம் செய்யலாம். மூலவரின் திருமார்பில் ஸ்ரீவத்ஸமும், ஸ்ரீ தேவியும், பூதேவியும் குடியிருக்கின்றனர். மற்றும் உற்சவர் கேசவ நந்தவர்த்தனரையும், நவநீத கிருஷ்ணரையும், செல்லப்பிள்ளையும் தரிசனம் செய்யலாம். அடுத்து யதிராஜநாதவல்லி தாயாரை தரிசனம் செய்யலாம். தாயாரின் சன்னிதியின் அருகிலேயே சக்கரத்தாழ்வாரின் சன்னதி. மேலும் ஆண்டாள் நாச்சியாருக்கும், இராமருக்கும் தனி சன்னதி உள்ளது. கோவிலை விட்டு வெளியே வந்தால் எதிரே இராமானுஜரின் அவதார திருத்தலத்தை காணலாம்.
ஸ்ரீராமானுஜர் அவதரித்ததால் இங்கு சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று ஆதிகேசவர், ராமானுஜர் இருவரும் பூதக்கால் மண்டபத்தில் எழுந்தருளுவர். அந்த நேரத்தில் சொர்க்கவாசல் திறப்பதைப்போல, இங்குள்ள மணிக்கதவை திறப்பர். வைகுண்ட ஏகாதசியன்று இந்த கோவிலுக்கு வருபவர்கள் வைகுண்டம் சென்ற பலனை அடைவார்கள். இன்றைக்கும் ஸ்ரீபெரும்புதூரில் யார் இறந்தாலும் மேளம் அடித்துக்கொண்டு வந்து சுவாமிக்கு சூட்டப்பட்ட மாலை, ஆளவந்தார் கஷாயம், பரிவட்டம், பெற்றுச்சென்று இறந்தவர் உடலில் சாற்றுவர்.
ஆதிசேஷன் அவதாரமென்று போற்றப்படும் ஸ்ரீராமானுஜர், குருவிடம் மந்திர உபதேசம் பெற வேண்டி பலமுறை முயன்றார். ஸ்ரீரங்கத்தில் இருந்து திருக்கோஷ்டியூருக்கு நடந்தே வந்தார். ஆனால் குருவின் பார்வை கிடைக்கவில்லை. ஸ்ரீராமானுஜரின் குரு திருக்கோஷ்டியூர் நம்பி.
நான் ராமானுஜன் என்று பலமுறை கூறினார். திருக்கோஷ்டியூர் நம்பி செவி சாய்க்கவில்லை. அடியேன் ராமானுஜன் என்று சொன்ன பிறகே அவரை குருவாக ஏற்றுக்கொண்டார். இந்த மந்திரத்தை யாருக்கும் சொல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் " ஓம் நமோ நாராயணா" எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தார் திருக்கோஷ்டியூர் நம்பி. மீறிச் சொன்னால், நரகத்துக்குச் செல்வாய் என எச்சரித்தார்.
மந்திரோபதேசம் முடிந்த கையுடன், விறுவிறுவென அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்றார். உச்சிக்குச் சென்றவர், ஊர்மக்களை அழைத்தார். சத்தமாக, " ஓம் நமோ நாராயணா" என்று கூறி தனக்குக் கிடைத்த உபதேசத்தை எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்தார்.
உபதேசித்த அந்த மந்திரத்தை, தான் மட்டும் ஜபித்து வைகுண்டம் செல்வது முறையல்ல என்றெண்ணிய ராமானுஜர், குருவுக்குக் கொடுத்த வாக்குறுதியையும் மீறி, நரகம் சென்றாலும் பரவாயில்லை மக்கள் அனைவரும் வைகுந்தம் செல்லும் பாக்கியத்தை அடையவேண்டும் என்று, "ஓம் நமோ நாராயணா" என்ற மந்திரத்தை உரத்த குரலில் கூறியருளினார்.
இதை அறிந்து ஆவேசமானார் நம்பி. குருவின் கட்டளையை மீறிவிட்டாய் கொடுத்த வாக்குறுதியை மதிக்காததால் நீ நரகம் செல்வாய் என்று சாபம் கொடுத்தார். ஆனால் ராமானுஜர் தன் இறுதிக்காலம் வரை வைணவத்திற்குத் தொண்டு செய்து 120வது வயதில் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை அடைந்தார்.
ஸ்ரீராமானுஜர் வாழ்ந்த ஸ்ரீரங்கம், திருக்கோஷ்டியூர், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் உள்ள சிறப்பு வாய்ந்த ஆலயங்களுக்கு சென்று அவரது திருவடிகளை வணங்கினால் நாகதோஷம், காலசர்ப்ப தோஷங்கள் நீங்கும். திருமண தடைகள், புத்திரபாக்கிய தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications