ருத்ராட்சையை தங்க செயினில் அணியலாமா? ருத்ராட்சம் அணிவது எப்படி? ருத்ராட்சத்தின் ஆரோக்கிய, ஆன்மீக பலன்
சென்னை: ருத்ராட்சம் என்பதன் பொருள் என்ன? ருத்ராட்சத்தை எந்த நிற கயிறுகளில் அணியலாம்? தங்க செயினில் கோர்த்து கொள்ளலாமா? ருத்ராட்சை அணிவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன? இவைகளை சுருக்கமாக பார்ப்போம்.
சித்தர்கள் கண்டறிந்த அற்புதமான மூலிகைதான், இந்த ருத்ராட்சம். இயற்கையான ஆண்டிபயாடிக் தன்மையை கொண்டது.. எனவே, இது நம்முடைய உடலோடு ஒட்டியிருக்கும்போது, கண்ணுக்கு தெரியாத கிருமிகளை அழிக்கிறது..

நன்மைகள்: உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.. சர்க்கரை நோய், கேன்சர் போன்ற அபாய நோய்களிலிருந்தும் காக்கிறது என்று அறிவியல் ரீதியாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, பெரியம்மை, காக்காய் வலிப்பு, கக்குவான் போன்ற அபாய நோய்களின் வீரியத்தை, இந்த ருத்ராட்சைகள் குறைக்க செய்கின்றன.
ருத்ராட்சை அணியும்போது, ஒருவரின் எதிர்மறை ஆற்றல் வெளியேறி, பாசிட்டிவ் உணர்வு தென்படுகிறது.. நேர்மறை எண்ணங்கள் நம்மிடம் அதிகமாக ஈர்க்கப்படும் என்பதால், எப்போதுமே மனதில் தெளிவும், நிம்மதியும் இருக்கும்.. ஒரு செயலை தொடங்கும் போதே அது வெற்றி அடையுமா இல்லையா? என்பது ருத்ராட்சை மூலம் அறியமுடியுமாம். அதுமட்டுமல்ல, ருத்ராட்சை அணிந்துள்ளவர்களுக்கு ஞாபக சக்தியும் அதிகமாகவே இருக்குமாம்
பொருள்: ருத்ரன்+ அக்ஷம் என்பதே ருத்ராட்சம் ஆகும்.. அதாவது சிவபெருமானின் கண் என்பது இதன் அர்த்தமாகும்.. ருத்ராட்சத்தின் மேலாக குறுக்குவாக்கில் கோடுகளும், அதன் நடுவில் இயற்கையாகவே அமைந்த துளையும் இருக்கும். அதன்மீதுள்ள கோடுகளின் எண்ணிக்கைக்கேற்ப தெய்வாம்சம் சிறப்பாக வெளிப்படுவதாக சித்தர்கள் கண்டறிந்துள்ளனர்.
ருத்ராட்சையை அணிந்து குளித்தால் கங்கையில் நீராடிய புண்ணியம் உண்டாகும் என்பார்கள்.. எனவே, ருத்ராட்சம் அணிபவர்கள் எப்போதுமே மன தூய்மையுடன் இருக்க வேண்டும்.
ஈர்ப்பு மண்டலம்: ருத்ராட்ச மாலையை 3 முதல் 6 மாதங்கள் அணிந்திருந்தால், உடலுக்கு பொருந்தக்கூடிய ஈர்ப்பு மண்டலம் கொண்டதாகவும், உடலின் அதிர்வெண்களுக்கு தக்கவாறும் மாறிவிடுமாம். அதனால்தான். எப்போதுமே ருத்ராட்சத்தை பிறருக்கு கொடுப்பதோ, அல்லது பிறரிடமிருந்து பெறுவதோ கூடாது என்பார்கள்.
ருத்ராட்சம் என்பது, ஒருவருக்கு குரு போல வழிகாட்டி காக்கக்கூடியது.. அதனால், ருத்ராட்சத்தை குருவிடம் கொடுத்து அணிந்து கொள்ளலாம் அல்லது ஓம் நம சிவாய என்ற மந்திரத்தை உச்சரித்து அணிந்து கொள்ளலாம்..
எப்படி அணிவது: ருத்ராட்சத்தை பெரியவர்களின் ஆசியுடன் வாங்கியதுமே, சுத்தமான தண்ணீரில் அல்லது எலுமிச்சைப் பழச்சாறு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பிறகு சுத்தமான விபூதியில் ஒருநாள் முழுவதும் போட்டு வைத்திருந்து, அடுத்த நாள் சிவன் கோயிலுக்கு சென்று, சிவனின் பாதங்களில் வைத்து எடுத்து, குரு அல்லது பெரியோர்களின் கரங்களால் அணிந்து கொள்ளலாம். சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிற கயிற்றில் அணியலாம்... வசதியிருந்தால் தங்கம், வெள்ளியில் கூட அணியலாம். ஆனால் கருப்பு கயிற்றில் மட்டும் அணியக்கூடாது..
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications