சபரிமலை மகரஜோதி தரிசனம்! 3 முறை ஜோதியாக வந்த ஐயப்பன்! விண்ணை பிளந்த சரண கோஷம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர ஜோதியையொட்டி மாலை 6.43 மணிக்கு 3 முறை ஜோதி வடிவில் ஐயன் காட்சியளித்தார். சரண கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் மெய் சிலிரிப்புடன் தரிசித்தனர்.

மகர சங்கராந்தி எனப்படும் பொங்கல் பண்டிகையின் போது மகர ஜோதி தரிசனம் நடைபெற்றது. இந்த மகர ஜோதி தரிசனத்தை காண பொன்னம்பலமேட்டில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மகரஜோதியையொட்டி சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபாரணப்பெட்டி ஊர்வலம் ஜனவரி 12 ஆம் தேதி பகல் 1 மணிக்கு பந்தள அரண்மனையில் இருந்து புறப்பட்டது.

magara Jothi 2025 spirtuality

விர்சுவல் கியூ அல்லது ஸ்பாட் புக்கிங் செய்ய பக்தர்கள் மட்டுமே நிலக்கல் முதல் பம்பை செல்வதற்கு ஜனவரி 13 ஆம் தேதி, 14 ஆம் தேதி ஆகிய இரு நாட்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 14 ஆம் தேதியான இன்று நிலக்கல்லில் இருந்து பம்பை வரை காலை 10 மணி வரை மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

பம்பையில் இருந்து சன்னிதானம் வரை செல்வதற்கு பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அது திருவாபரண பெட்டி ஊர்வலம் பெரியானைவட்டத்தை வந்தடைந்த நேரமாகும்.

இந்த நிலையில் திருவாபரணப்பெட்டி சரங்குத்திக்கு மாலை 5.30 மணிக்கு வந்தடைந்தது. அப்போது தமிழக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, கேரள தேவசம் போர்டு அமைச்சர் ஆகியோர் அந்த ஆபரண பெட்டியை பெற்றுக் கொள்கிறார்கள். பிறகு அங்கிருந்து சன்னிதானத்திற்கு 18 படி வழியாக கொண்டு செல்லப்பட்டது. (18 படி வழியாக இருமுடி இல்லாமல் அனுமதிக்கப்படுபவர்கள் இந்த ஆபரண பெட்டியை கொண்டு செல்வோருக்கு மட்டும்தான்)

பின்னர் கதவுகள் மூடப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது. ஐயப்பன் ராஜ அலங்காரத்தில் காட்சி தந்தார். அலங்காரம் முடிந்ததும் ஐயப்பனின் மூலஸ்தானம் திறக்கப்பட்டதுமே சரியாக மாலை 6.43 மணிக்கு மகர ஜோதி தரிசனம் தெரிந்தது. 3 முறை ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சி தந்தார். இந்த தருணத்தை காண்பதற்காகவே லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருந்ததற்கு பலன் கிடைத்தது. அப்போது சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷம் விண்ணை பிளந்தது. பக்தர்களும் மனம் குளிர சன்னிதானத்தை விட்டு கிளம்பினர்.

திருவாபரணப் பெட்டியில் என்னென்ன நகைகள்?: ஐயப்பனின் திருமுகம், தங்க கிரீடம், இரு தங்க வாள்கள், 2 யானை உருவங்கள், 2 லட்சுமி பதக்கங்கள், தங்க ஒட்டியாணம், தங்க சங்கு, முத்துமணி மாலை உள்ளிட்ட இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+