மகர விளக்கு பூஜை.. பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு திருவாபரணங்கள் ஊர்வலம்.. காவலுக்கு வந்த கருடன்
சபரிமலை: மகர விளக்கு பூஜை நாளை நடைபெற உள்ள நிலையில் பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் ஊர்வலமாக புறப்பட்டது. ஏராளமான காவல்துறை அதிகாரிகள் உடன் செல்ல வானத்தில் கருட பகவான் வட்டமிட சாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷம் முழங்க திருவாபரணம் ஊர்வலம் காடு மலையை கடந்து சென்றது. சபரிமலையை நாளை சென்றடையும் திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.
சபரிமலையில் பிரம்மச்சாரியாக தவக்கோலத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் சுவாமி ஐயப்பன். மாதந்தோறும் ஐந்து நாட்கள் ஐயப்பனுக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றாலும் மண்டலபூஜை, மகர விளக்கு பூஜை நாட்களில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர்.

ஐயப்பனுக்கு பந்தள மன்னன் அன்பளிப்பாக கொடுத்த திருவாபரணங்கள் மகர விளக்கு பூஜை நேரத்தில் அணிவிக்கப்படும். அந்த நகைகளை அணிந்து அரசனாக காட்சி அளிப்பார் ஐயப்பன். இந்த தங்க திருவாபரணங்கள் 3 சந்தன பெட்டிகளில் பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.
இந்த திருவாபரணங்கள் நேற்று அதிகாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரண்மனையில் இருந்து பந்தளம் வழியே கோயிக்கல் சாஸ்தா கோயில் வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, மதியம் 12 மணிக்கு பக்தர்களின் தரிசனத்துக்கு பின்னர் மேளதாளம் முழங்க திருவாபரண ஊர்வலம் புறப்பட்டது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது.
அதனைத்தொடர்ந்து திருவாபரண ஊர்வலம் எருமேலி, களைகட்டி, அழுதாமலை, முக்குழி, கரிமலை வழியாக நடைப்பயணமாக சென்று நாளை தை முதல்நாள் ஜனவரி 15ஆம் தேதி மதியம் பம்பை சென்றடையும். அங்கு பக்தர்கள் தரிசனத்திற்குப் பிறகு சரண கோஷம் முழங்க ஆபரண பெட்டிகள் நீலிமலை. சரம்குத்தி, மரக்கூட்டம் வழியாக மாலை 5.30 மணிக்கு சபரிமலைக்கு கொண்டு செல்லப்படும்.
விஷ்ணு பகவான், கருட வாகனத்தில் ஏறி, பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு திருவாபரணத்துடன் காவலுக்கு உடன் வருவதாக பக்தர்கள் நம்புகின்றனர். ஊர்வலம் சபரிமலையை அடையும் போது, வானத்தில் கருடன் மீண்டும் கம்பீரமாக பறக்கும் அதனைக் காணும் பக்தர்கள் எழுப்பும் சரண கோஷம் சபரிமலை எங்கும் எதிரொலிக்கும்.
சபரிமலையை அடையும் திருவாபரண பெட்டிகளுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் 18ஆம் படிக்கு கீழ் பகுதியில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படும். மாலையில் திருவாபரணங்கள் சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெறும். அப்போது அரசனாக ஜொலிக்கும் ஐயப்பனை காண கண் கோடி வேண்டும். நாளை 15ஆம் தேதி 40,000 பக்தர்களுக்கும் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 11.30 மணிக்கு மேல் பக்தர்களுக்கு மலை ஏறுவதற்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications