சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜன.,14ல் மகரஜோதி தரிசனம்! ஸ்பாட் புக்கிங் ரத்தாக வாய்ப்பு!
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவடைந்து தற்போது மகர விளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜனவரி 14-ஆம் தேதி மகரஜோதி தரிசனம் நடக்கவிருக்கும் நிலையில் சன்னிதானத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை அடுத்து ஸ்பாட் புக்கிங்-ஐ ரத்து செய்ய திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை கார்த்திகை மார்கழி மாதங்களில் நடைபெறுகிறது. இதை அடுத்து கார்த்திகை ஒன்றாம் தேதி மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலை நோக்கி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

எரிமேலியில் பேட்டை துள்ளி காட்டுப் பாதை வழியாக பெருவழிப்பாதையிலும், பம்பையில் குளித்து விட்டு சன்னிதானம் செல்லும் சிறு வழிப் பாதை வழியாகவும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மகரஜோதி தரிசனம்:
கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி மண்டல பூஜை தொடங்கி நிறைவடைந்தது. இதை அடுத்து டிசம்பர் 30-ம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டு மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. சபரிமலையில் வரும் 14ஆம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற இருக்கும் நிலையில் பொன்னம்பல மேட்டில் தெரியும் மகரஜோதியை காண அதிக அளவில் பக்தர்கள் கூடுவார்கள். ஜனவரி 10ஆம் தேதி முதல் ஜோதி தரிசனத்துக்காக சன்னிதானத்தில் பக்தர்கள் தங்குவது வழக்கம்.
சபரிமலை:
இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே பக்தர்கள் வருகையால் சன்னிதானம் திணறி வரும் நிலையில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பக்தர்கள் குழுவாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மகரஜோதி நாளில் அதிகளவு பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் ஸ்பாட் புக்கிங் நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆன்லைன் முன்பதிவு:
தற்போதைய சூழ்நிலையில் ஆன்லைன் புக்கிங் மூலம் 80000 பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் எரிமேலி மற்றும் பம்பையில் ஸ்பாட் புக்கிங் மூலம் 20 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கிடையே ஜனவரி 10ஆம் தேதி முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் ஸ்பாட் புக்கிங் ரத்து செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஸ்பாட் புக்கிங்:
தற்போதைய சூழலில் டிசம்பர் 30-ம் தேதியிலிருந்து தினமும் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பக்தர்கள் வரை ஸ்பாட் புக்கிங் மூலம் தரிசனம் செய்து வருகின்றனர். மகர விளக்கு ஜோதியை காண வரும் பக்தர்கள் சன்னிதானத்திலேயே தங்குவார்கள் என்பதால் கூடுதல் நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ஸ்பாட் புக்கிங்கை முழுமையாக நிறுத்த வேண்டும் என கேரளா காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
ரத்து செய்ய திட்டம்:
மேலும் ஆன்லைன் புக்கிங் எண்ணிக்கையும் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12ஆம் தேதி 60 ஆயிரம், பதிமூன்றாம் தேதி 50 ஆயிரம், ஜனவரி 14 என 40 ஆயிரம் என ஆன்லைன் புக்கிங் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சபரிமலை செல்லும் பக்தர்கள் உரிய முன்பதிவு இருந்தால் மட்டுமே பயணிக்க வேண்டும். இல்லையேல் அவர்கள் பம்பையிலேயே தடுத்து நிறுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications