Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நோய்களில் இருந்து மக்களை காக்க..சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்..பூக்களால் அர்ச்சனை

பக்தர்களுக்காக பச்சை பட்டினி விரதம் மேற்கொள்ளும் போது அம்மனுக்கு ஏற்படும் உஷ்ணத்தை குறைத்து மகிழ்ச்சியை ஏற்படுத்த பக்தர்கள் பலவித மலர்களை கொண்டுவந்து பக்தர்கள் அர்ச்சனை செய்கின்றனர்.

Subscribe to Oneindia Tamil

திருச்சி: என்னை நாடி வரும் பக்தர்களை துன்பங்களில் இருந்து காப்பேன்.. நவகிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டாலும் நான் இருக்கிறேன் கவலை வேண்டாம் என்று பக்தர்களுக்கு நம்பிக்கை தருகிறார் சமயபுரத்தாள். மனதாலும் உடலாலும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தவர்கள் சமயபுரம் மாரியம்மனை சரணடைந்தால் மலைபோல வந்த துன்பம் கூட பனிபோல உருகி ஓடி விடும். மக்களின் நோய்களைக் காக்கவே சமயபுரம் மாரியம்மன் 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்கிறார். இந்த ஆண்டுக்கான விரதம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. பக்தர்களுக்காக விரதம் மேற்கொள்ளும் போது அம்மனுக்கு ஏற்படும் உஷ்ணத்தை குறைத்து மகிழ்ச்சியை ஏற்படுத்த பக்தர்கள் பலவித மலர்களை கொண்டுவந்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக திகழ்வது சமயபுரம் மாரியம்மன் கோவில். இங்கு நாள்தோறும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். பக்தர்களுக்காக அம்மன் பச்சை பட்டினி விரதத்தை மாசி கடைசி ஞாயிறு முதல் தொடங்கினார்.

தட்சன் யாகத்துக்குச்சென்ற தாட்சாயணியை தூக்கி சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடிய போது அம்மனின் திருக்கண் இப்பகுதியில் விழுந்தது. இதனால் இந்தத்திருத்தலத்திற்கு கண்ணனூர் என்ற பெயர் புராணகாலம் தொட்டே இருந்து வருகிறது. மிகத்தொன்மையான உற்சவ அம்மனின் திருமேனியில் இன்றும் ஆயிரம் கண்கள் உள்ளன. இது, இத்தலத்தின் பெருமையை விளக்குவதாக அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் அம்மன் அஷ்ட புஜங்களுடன் இருப்பது வேறு எந்த மாரியம்மன் கோவிலிலும் காணக்கிடைக் காத அரிய காட்சியாகும். மேலும், மாரியம்மன் வடிவங்களில் ஆதிபீடம் சமயபுரம் ஆகும்.

ஸ்ரீரங்கநாதனின் தங்கை சமயபுரம் மாரியம்மன்

ஸ்ரீரங்கநாதனின் தங்கை சமயபுரம் மாரியம்மன்

சிவன், பிரம்மா, விஷ்ணு என்னும் மும்மூர்த்திகளால் ஸ்ரீரங்கம் கோவிலின் ஈசான பாகத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி வடிவம் கொண்டு சிருஷ்டிக்கப்பட்டு உள்ளதால் இந்தகோவிலிலும் ஸ்ரீரங்கம் கோவிலில் மூலவரை போன்ற சுதையினால் ஆன சுயம்பு வடிவமாக 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி 27 எந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டை செய்து இத்தலத்தில் மகாமாரியம்மன் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும். எனவேதான் சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்க நாதனின் தங்கையாக போற்றப்படுகிறார்.

நவகிரக தோஷங்கள் நீங்கும்

நவகிரக தோஷங்கள் நீங்கும்

சமயபுரம் மாரியம்மனின் சுயம்பு திருமேனியில் நவக்கிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவகிரகங்களை நவசர்ப்பங்களாக திருமேனியில் தரித்து அருள்பாலிப்பதால் அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். சமயபுரம் மாரியம்மனை அமாவாசை, பவுர்ணமி மற்றும் கிரகண காலங்களில் வழிபட்டால் உச்சபலன் கிடைக்கும். மேலும், இந்த கோவிலில் வழிபட்டால் ராகு, கேது திசை தோஷம் நிவர்த்தி ஆகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை எனவேதால் கிரகக் கோளாறுகளால் பிரச்சினைகளை சந்திக்கும் மக்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் வைத்து வழிபடுகின்றனர். உடல் நலக்கோளறுகள், பிரச்சினைகள் நீங்கிய உடன் அம்மனுக்கு வந்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

பச்சை பட்டினி விரதம்

பச்சை பட்டினி விரதம்

மாயசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும் இத்திருத்தலத்தில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எல்லாவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க மரபு மாறி அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் வருடம் தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல், பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை இருப்பது இந்த கோவிலின் தனிச் சிறப்பு ஆகும். தன்னை நாடிவரும் பக்தர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறவும் சமயபுரம் மாரியம்மன் விரதம் மேற்கொள்வதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

நைவேத்தியம் என்ன

நைவேத்தியம் என்ன

இந்த விரதத்தின் போது அம்மனுக்கு தளிகை நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர்மோர், பானகம், கரும்புசாறு, இளநீர் ஆகியவை நைவேத்தியமாக அம்மனுக்கு படைக்கப்படுகிறது. பக்தர்களுக்காக விரதம் மேற்கொள்ளும் போது அம்மனுக்கு ஏற்படும் உஷ்ணத்தை குறைத்து மகிழ்ச்சியை ஏற்படுத்த பக்தர்கள் பலவித மலர்களை கொண்டுவந்து அர்ச்சனை செய்வது வழக்கம்.

பூச்சொரிதல் விழா

பூச்சொரிதல் விழா

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் பூச்சொரிதல் விழா முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக தொடங்கியுள்ளது. மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்கி, பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28 நாட்கள் பூச்சொரிதல் விழா நடைபெறும். விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாஜனம், வாஸ்து சாந்தி முடிந்து சமயபுரம் மாரியம்மனுக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது.

கூடை கூடையாக பூக்கள்

கூடை கூடையாக பூக்கள்

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில், கோவில் நிர்வாகம் சார்பில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் யானை மீதும், கோவில் பணியாளர்கள், பக்தர்கள் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் கூடைகளிலும் தலையிலும் பூக்களை சுமந்தும், கையில் எடுத்து வந்தும் அம்மனுக்கு அர்ச்சனை செய்தனர். இதனைத்தொடர்ந்து திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல்வேறு வாகனங்களிலிருந்து அம்மனுக்கு பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்வார்கள்.

விழாக்கோலம் பூண்ட சமயபுரம்

விழாக்கோலம் பூண்ட சமயபுரம்

சமயபுரத்தில் பூச்சொரித்தல் விழா தொடங்கியதால் சமயபுரம் கோவில் சுற்றுவட்டார பகுதியில் விழா கோலம் பூண்டுள்ளது. திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் 13 உயர் கோபுரங்கள், மூன்று தற்காலிக பேருந்து நிலையங்கள், சமயபுரம் நான்கு ரோட்டில் இருந்து கோவில் வரை 50க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி காட்சிகளும், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+