சனி தோஷம்.. வீட்டு பூஜை அறையில் சனி படத்தை வைத்து வழிபடலாமா?
சென்னை: நவகிரகங்களில் மக்கள் அதிகம் அச்சப்படும் சனீஸ்வரன் நீதிமான். அவரது பார்வையில் இருந்து யாரும் தப்ப முடியாது. சனிபகவான் படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.
சனைச்சரன் என்றால் மெதுவாக நகர்பவன் என்று அர்த்தம். சனீஸ்வரன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகர்வதற்கு இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. நவகிரகங்களில் சனி மீது பலருக்கும் ஒருவித அச்சம் உள்ளது. சனி பகவான் யார்? அவருக்கு ஈஸ்வர பட்டம் கிடைத்தது எப்படி என்று புராண கதைகளில் சொல்லப்பட்டுள்ளன. சூரியனுக்கு உஷாதேவி சாயாதேவி என்று இரண்டு மனைவிகள். சாயாதேவிக்கு பிறந்த கிருதவர்மா என்ற மகன்தான் பின்னாளில் சனீஸ்வரபகவானாக மாறினார்.

அப்பா சூரியனுக்கும் மகன் சனி பகவானுக்கும் பகை உள்ளது. தந்தை சூரியனை விடவும் பலசாலியாக வேண்டும் சிவனுக்கு நிகரான நிலையை அடைய வேண்டும் என்று விரும்பிய சனிபகவான் காசிக்கு சென்று லிங்கம் ஒன்றை நிறுவி கடும் தவம் செய்தார். சனியின் பக்தியை கண்டு மகிழ்ந்த சிவபெருமான் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.
அதற்கு சனி, எனக்கு என் தந்தை சூரியனை விட அதிக பலமும் பார்வையும் வேண்டும் என்று கேட்டார். என் பார்வையில் இருந்து யாரும் தப்பக்கூடாது. என் பார்வைபட்டால் மற்றவர்கள் தங்கள் பலத்தை இழந்து விட வேண்டும். நவக்கிரகங்களில் எனக்கு மட்டுமே அதிக பலம் வேண்டும். சுருக்கமாக சொல்லவேண்டுமானால் தங்களுக்கு அடுத்த இடத்தை எனக்கு தர வேண்டும் என்றார்.
சனியின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் உனக்கும் ஈஸ்வரன் என்ற பட்டம் தருகிறேன். இன்றுமுதல் நீ சனீஸ்வரன் என்று அழைக்கப்படுவாய் என்று வரம் கொடுத்தார் என புராண கதைகள் கூறுகின்றன.
நீதிமான் என்று அழைக்கப்படும் சனிபகவான் நேர்மையாக இருப்பவர்களுக்கு நல்லதை கொடுப்பார். கெடுதல் செய்பவர்களுக்கு தண்டனை கொடுப்பார் எனவேதான் சனீஸ்வர பட்டம் பெற்றுள்ளார். சிவ ஆலயங்களில் நவகிரகங்களின் நாயகனாக சூரியன் இருக்க சனி பகவானை தனியாக வணங்குவார்கள்.
மக்கள் தங்களின் வீடுகளில் எத்தனையோ கடவுளின் படத்தை வைத்து வழிபட்டாலும் சனீஸ்வரனின் படத்தை வைத்து வழிபாடு செய்யக் கூடாது. ஏனெனில் நவகிரகங்களில் ஒருவர் தான் சனைச்சரன் அதாவது சனீஸ்வரர். சனீஸ்வரரின் நேரடிப் பார்வையின் உக்கிரத்தை யாராலும் தாங்க முடியாது என்பதால் கருப்புத் துணியால் தன்னுடைய கண்களை மூடிக் கொண்டுள்ளார்.
சனி பகவான் எப்போதும் தேவர், மனிதர் உள்ளிட்ட அனைத்து உயிர்களையும் பார்த்துக்கொண்டே இருப்பார். தவறு என்று தெரிந்தே பாவங்கள் செய்பவர்களையும், அகந்தை மற்றும் அகங்காரத்துடன் நடப்பவர்களையும் தண்டிக்காமல் விடமாட்டார். அத்தகைய சிறப்பு பெற்ற சனீஸ்வரனின் படம் மற்றும் சிலையை வீட்டில் வைத்து வணங்கக்கூடாது.
நவகிரகங்களின் ஒன்றான சனீஸ்வரனின் படம் மற்றும் சிலைகளை வீட்டில் வைத்து வழிபாடு செய்தால், அது நமக்கு நற்பலன்களைக் கொடுக்காது என்று சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்கள் என்பவர்கள் கடவுள் கூறிய பணியை செய்யும் வேலையாட்கள். அதனால் ஆலயத்தில் கூட நவகிரகங்களை பரிவார தேவதைகளாகத் தான் பிரதிஷ்டை செய்கிறார்கள். எனவே சனீஸ்வரர் மட்டுமல்ல ராகு, கேது, குரு, சுக்கிரன் உள்பட எந்தக் கோள்களையும் வீட்டில் வைத்து வணங்கக் கூடாது என்றும் ஜோதிட சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனி பகவானால் கடுமையாக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கறுப்பு நிற பசுவை தானம் செய்வது சிறந்த பரிகாரமாகும். அனுமன் பக்தர்களையும், ஐயப்ப பக்தர்களையும், பைரவ வழிபாடு செய்பவர்களையும் சனி பகவான் தண்டிக்க மாட்டார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications