சனி பெயர்ச்சிக்கு தயாராகும் திருநள்ளாறு.. டிச.20ல் ஸ்கூல், மதுபான கடைகளுக்கு விடுமுறை
திருநள்ளாறு: சனி பெயர்ச்சி விழாவையொட்டி வரும் 20ஆம் தேதி காரைக்கால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மதுபான கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக காரைக்கால் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் புகழ்பெற்ற சனீஸ்வர பகவான் ஆலயம் அமைந்துள்ளது. சனீஸ்வர பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்தாலும் திருநள்ளாறு கோவிலில் வரும் 20ஆம் தேதிதான் சனி பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

வாக்கிய பஞ்சாங்கப்படி சனீஸ்வர பகவான் வரும் டிசம்பர் 20ஆம் தேதி மாலை 5.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்கிறார். இதனையொட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் திருநள்ளாறு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருநள்ளாறு வரும் பக்தர்களுக்காக பல்வேறு ஏற்பாடுகளை காரைக்கால் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பல்வேறு சாலைகளில் போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவுள்ளன.
டிசம்பர் 20ஆம் தேதியன்று பள்ளி, கல்லூரி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வரும் 20ஆம் தேதி புதன்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார். அதே நேரத்தில், அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதே போல வரும் 20ம் தேதி காரைக்கால் மாவட்டம் முழுவதும் உள்ள மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications