சனி பிரதோஷம்.. தோஷங்கள் நீக்கும் சிவ நந்தி தரிசனம்.. 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்
சென்னை: சனிப்பிரதோஷ தினமான இன்று சிவ ஆலயம் சென்று நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். சனிப்பிரதோஷம் தினம் செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. 12 ராசிக்காரர்களும் சனி பிரதோஷம் நாளில் செய்ய வேண்டிய தானங்களை பற்றி பார்க்கலாம்.
சனி பிரதோஷம்: சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும்; சகல செளபாக்கியங்களும் உண்டாகும்; இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிடைக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன. இன்று சனி பிரதோஷம் இன்று அருகில் இருக்கும் சிவ ஆலயம் சென்று சனிபகவானை வணங்க சனி பகவானால் ஏற்பட்ட தோஷங்களும் நீங்கும்.

நந்திக்கு அபிஷேகம்: நமக்கு வரும் நோய்களும், துன்பங்களும் முன்ஜென்ம பாவத்தின் சம்பளமாக கிடைக்கிறது. அந்த பாவங்கள் தீர இப்பிறவியில் நிறைய நன்மைகளை செய்ய வேண்டும். ஆலய தரிசனம் செய்வதும், இறைவனுக்கு அபிஷேகத்திற்கு பொருட்களை வாங்கிக் கொடுப்பதும் நமது முன்ஜென்ம பாவங்களை போக்கும் இதன் மூலம் நோய்கள் நீங்கும். முன்ஜென்ம பாவங்கள் நீங்கவும், நோய்கள் தாக்காமல் ஆரோக்கியமாக வாழவும் சனி மகா பிரதோஷ நாளான இன்றைய தினம் சிவன், நந்திக்கு அபிஷேகப்பொருட்களை வாங்கிக்கொடுக்கலாம்.
பிரதோஷம்: பிரதோஷங்கள் 5 வகைப்படும். நித்தியப் பிரதோஷம், பக்ஷப் பிரதோஷம், மாத பிரதோஷம், பிரளய பிரதோஷம், மகா பிரதோஷம் என்பதாகும். இதில் சனிக்கிழமைகளில் வந்தால், அது சனிப்பிரதோஷம் என்றும் மகா பிரதோஷம் என்றும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை 13ஆம் நாள் திரயோதசி திதி தினங்களில் மாலை 4.30 முதல் ஆறு மணிவரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. அன்றுதான் ஈசன் விஷம் உண்ட மயக்கம் தெளிந்து அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகின்றன.
நோய்கள் நீங்கும்: திரயோதசி நாளில் விரதம் இருந்து சாதாரண பிரதோஷ நேரத்தில் சோம சூக்த பிரதட்சணம் செய்வதால், ஒரு வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால் 120 வருடம் சிவ ஆலயம் சென்ற பலன் கிடைக்கும். ஆரோக்கியம் அதிகமாகும் நோய்கள் நீங்கும் நீண்ட ஆயுள் கிடைக்கும். மற்ற பிரதோஷ நாட்களை விட மகா பிரதோஷம் எனப்படும் சனிப்பிரதோஷ நாள் மிகவும் விசேஷமானது. வளர்பிறை சனிப்பிரதோஷ நாளில் சிவ ஆலயம் சென்று நந்தி தேவரை வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் சகலவிதமான துன்பங்களும் நம்மை விட்டு ஓடிப்போகும். இன்று மாலை மறக்காமல் அருகில் உள்ள சிவ ஆலயம் சென்று நந்தி பகவானின் கொம்புகளுக்கு இடையே சிவனை தரிசனம் செய்யுங்கள்.
12 ராசிக்காரர்களும் தானங்களும்: சிவ ஆலயம் செல்பவர்கள் இன்று தானம் கொடுக்கலாம். மேஷ ராசிக்காரர்கள் சனி பிரதோஷ விரத நாளில் குடை தானம் செய்ய வேண்டும். ரிஷப ராசிக்காரர்கள் கருப்பு நிற ஆடைகளை தானம் செய்ய வேண்டும். மிதுன ராசியில் பிறந்தவர்கள் நல்லெண்ணெய் தானம் செய்ய வேண்டும். கடக ராசிக்காரர்கள் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். சிம்ம ராசிக்காரர்கள் ஆடை தானம் செய்ய வேண்டும். கன்னி ராசிக்காரர்கள் கருப்பு போர்வையை தானமாக தர வேண்டும். துலாம் ராசிக்காரர்கள் எள் தானம் கொடுக்கலாம். விருச்சிக ராசிக்காரர்கள் இரும்பு பாத்திரங்களையும் நல்லெண்ணெய், கறுப்பு ஆடைகளை தானமாக கொடுக்க வேண்டும். தனுசு ராசிக்காரர்கள் கருப்பு குடையை தானமாக தரலாம். மகரம் ராசிக்காரர்கள் கருப்பு உளுந்து தானமாக தரலாம். கும்பம் ராசிக்காரர்கள் நல்லெண்ணெய் தானமாக தரலாம். மீனம் ராசிக்காரர்கள் கவுனி அரிசியில் வெல்லம், பாசிப்பருப்பு கலந்து ஊற வைத்து பசுவிற்கு தானமாக கொடுக்கலாம்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications