Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேது தோஷம் போக்கும் விநாயகர்.. சங்கடஹர சதுர்த்தியில் வணங்கினால் நோய், கடன் தீரும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சங்கடஹர சதுர்த்தி தினமான இன்று மாலையில் விநாயகரை வழிபடுவதால் கேதுவினால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும் கடன் பிரச்சினை காணாமல் போகும். சந்திர திசை, கேது திசை நடப்பவர்கள் சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை அருகம்புல் சாற்றி வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும்.

சிவனுக்கு திரயோதசி, முருகனுக்கு சஷ்டி திதி போல விநாயகருக்கு சதுர்த்தி சிறப்பான திதி. அதுவும் தேய்பிறை சதுர்த்தியான சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபடுவது நம்முடைய சங்கடங்கள் நீங்கும். சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள். பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும்.

Sankatahara Chaturthi viratham removes Ketu Dhosham

வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடு விளைவிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு. ஆனால், பௌர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவே சங்கடஹர சதுர்த்தி ஆகும். நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். அந்த நாளில் காலையிலிருந்து உபவாசம் இருந்து கணபதியைத் தியானிக்க வேண்டும்.

சங்கடஹர சதுர்த்தி தினமான இன்று விநாயகர் கோவிலுக்கு சென்று ஆலயத்தை 11 முறை வலம் வர வேண்டும். அருகம்புல் கொடுத்து, விநாயகருக்கு அர்ச்சனை செய்து, நெற்றிப்பொட்டில் குட்டிக்கொண்டும், தோப்புக்கரணம் போட்டு விநாயகரை வணங்க வேண்டும். விநாயகர் கோயிலில் நடக்கும் சங்கடஹர பூஜையின் போது, விநாயகரின் அபிஷேகத்திற்கு தூய்மையான பசும் பாலை வழங்க வேண்டும்.

கோவிலில் விநாயகருக்கு நடக்கும் அபிஷேகங்களையும், பூஜையையும் கண்குளிர கண்டு வணங்கி வீடு திரும்பியதும் பூஜையறையில் பூஜிக்கப்பட்ட சிலை அல்லது படத்தை வணங்கி, பூஜையில் வைக்கப்பட்ட நைவேத்தியங்கள் பிரசாதமாக எடுத்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து நீங்களும் சாப்பிட்டு சங்கடஹர சதுர்த்தி விரதத்தை முடிக்க வேண்டும்.

சங்கடஹர சதுர்த்தி நாளில் கால் கிலோ பச்சரிசியை ஊறவைத்து, அத்துடன் சிறிது வெல்லத்தூளும் ஒரு வாழைப்பழமும் சேர்த்துப் பிசைந்து, பசுவுக்குக் கொடுக்க வேண்டும். பசு வழிபாடு செய்வது கூடுதல் நன்மை தரும்.

விநாயகர். சங்கடஹர சதுர்த்தி நாளில் மாலையில் சந்திர உதய நேரத்தில் விநாயகப் பெருமானை வழிபட்டு, பின்பு சந்திர தரிசனம் செய்தால் நவகிரக தோஷங்களும் நீங்கும். விநாயகர் சூரியனை வெற்றியிலும், சந்திரனை நாபிக் கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ்க் கையிலும், வியாழனை தலையிலும், வெள்ளியை இடது கீழ்க் கையிலும், சனியை வலது மேல் கையிலும், ராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு விநாயகர் காட்சியளிக்கிறார். இத்தகைய நவகிரக விநாயகரை மனமார நினைத்து வழிபடுபவர்களுக்கு, நவகிரகங்களினால் ஏற்படும் பாதிப்புகள் வராது.

நாளுக்கும் கோளுக்கும் அப்பாற்பட்ட விநாயகர் ஜோதிட சாஸ்திரப்படி கேதுவின் அம்சம். கேதுவால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யக்கூடியவர். சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர். அளவிலா ஞானத்தை அளிக்கக்கூடியவர். அறியாமை என்னும் இருளில் இருந்து ஞானம் என்னும் ஒளியை நோக்கி அழைத்துச் செல்லும் ஞான பண்டிதன் கணேசர். அவரை மாணவர்கள் பக்தி சிரத்தையுடன் வழிபட்டால் தடைகள் நீங்கி கல்வியில் ஏற்றமும், ஞானமும், புலமையும் ஏற்படும்.

சந்திர பகவானும் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார். சந்திர திசை, கேது திசை நடப்பவர்கள் மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தியிலும், விநாயகர் சதுர்த்தியிலும் பிள்ளையாரை வழிபட்டால் சகலவிதமான தோஷங்களும் சங்கடங்களும் விலகும்.

கடன் பிரச்சினைகள் நீங்கவும் செல்வ வளம் பெருகவும், சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கவும், கேதுவால் ஏற்படும் தோஷங்களும் நீங்கவும் சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை தரிசனம் செய்யலாம். விரதம் இருக்க முடியாவிட்டாலும் கோவிலுக்கு சென்று விநாயகருக்கு சூரைத்தேங்காய் உடைப்பது, விநாயகருக்கு அபிஷேகத்திற்கு பால் வாங்கி கொடுப்பதன் மூலம் சங்கடங்கள் நீங்கும் சந்தோஷங்கள் அதிகரிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+