சூரசம்ஹாரம்.. சிக்கலில் அன்னை பார்வதியிடம் வேல் வாங்கும் சிங்கார வேலர்.. ஆறாக பெருகும் வியர்வை
நாகப்பட்டினம்: அழகன் முருகனுக்கு வியர்வை வருமா? அதுவும் அன்னை பார்வதியிடம் வேல் வாங்கும் போது வியர்வை முத்து முத்தாக முகத்தில் துளிர்க்கும் அதிசயத்தை பார்த்திருக்கிறீர்களா?
சிக்கல் சென்றால் சிங்காரவேலரின் முகத்தில் வியர்வை பெருகுவதை பார்க்கலாம்.

சிக்கல் சிங்காரவேலர்: சூரனை சம்ஹாரம் செய்ய சிக்கலில் அன்னை பார்வதியிடம் வேல் வாங்கும் வைபவம் இன்று இரவு நடைபெறுகிறது. முருகனின் முகத்தில் வியர்வை துளிர்ப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை. தீய சக்திகளை நான் வியர்வை துளிகளைப் போல துடைத்து எறிவேன் எனவே பக்தர்களே தீயவைகளைக் கண்டு அஞ்ச வேண்டாம் என்று உணர்த்தும் வகையிலேயே கந்த சஷ்டியின் ஐந்தாம் நாள் அன்னை பார்வதியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியின் போது சிக்கல் சிங்காரவேலருக்கு வியர்வை ஆறாக பெருகுகிறது.
வேலாயுதம்: தமிழ்கடவுள் முருகப்பெருமானின் திருக்கரத்தில் விளங்கும் ஆயுதங்களில் முதன்மை பெற்றது வேலாயுதம். அது சிவபெருமானைப் போலவே படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐம்பெரும் செயல்களையும் ஆற்றவல்லது. இந்த வேல் பிறந்த கதையையும் கந்த சஷ்டியின் கதையையும் படித்தாலோ, கேட்டாலோ எண்ணற்ற நன்மைகள் நிகழும்.
கந்த சஷ்டி விழா: நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 13ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு நேற்றைய தினம் சிறப்பு அலங்காரத்தில் முருகபெருமான் வள்ளி, தெய்வானையுடன் தேரில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சக்தி வேல் வாங்கும் சிங்கார வேலர்: கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான வேல் வாங்குதல் நிகழ்ச்சி இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. பார்வதி தேவியான அன்னை வேல் நெடுங்கன்னியிடம் இருந்து சக்திவேல் வாங்கும் போது சிங்காரவேலருக்கு வியர்வை முகத்தில் துளிர்க்கும். வேறு எங்கும் நடைபெறாத அபூர்வ காட்சி ஆகும். அப்போது பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று முழக்கமிடுவார்கள். நாளைய தினம் சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது. அன்னை பார்வதியிடம் வாங்கிய வேல் கொண்டு சூரனை சம்ஹாரம் செய்வார் சிங்காரவேலர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications